Wednesday, November 17, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது.....!Leading the Change!மாற்றம் பற்றி நிறையப் பேசுகிறோம்! மாற்றம் வராதா என்று பல விஷயங்களில் ஏங்குகிறோம்! வேண்டுகிற மாற்றம் என்ன, அந்த மாற்றத்தை எப்படிக் கொண்டு வருவது, அதை எப்படி நிர்வகிப்பது என்பதே தெரியாமல் தான் இங்கே பெரும்பாலான தருணங்களில் மாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் இல்லையா!
.
Change Management என்பதே மேலாண்மைத் துறையில் வளர்ந்துவரும் ஒரு துறை என்பது நிர்வாகம், மேலாண்மைத் துறையில் படிப்பவர்களைத் தவிர பரவலாகத் தெரியாத விஷயம். பாடமாகப் படிப்பவர்களே கூட செயல் முறையில் பயன்படுத்தி அதன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவைகள் இங்கே கொஞ்சம் குறைவு தான்!தமிழில் இந்த விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. இன்றைக்கு ஜான் பி. கோட்டர் எழுதிய புத்தகத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்துக் கொண்டிருந்த போது, இன்றைக்கே எழுதினால் என்ன என்று அதைப் பற்றி கொஞ்சம் குறிப்புக்களை எழுத ஆரம்பித்தேன். இதை ஒரு தொடர்பதிவாக எழுதும் உத்தேசமிருக்கிறது/

ந்தப் புத்தகம், முதலில் 1994 இல் ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ இதழில் Leading Change:Why Transformation Efforts Fail என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாகத் தான் வெளிவந்தது. அதற்கப்புறம் ஒரு 187 பக்கப் புத்தகமாக ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூல் ப்ரெஸ்வெளியீடாக  1996 இல் வெளி வந்திருக்கிறது.  இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும். புத்தகம் வெளிவந்து பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னாலும் கூட, மிகவும் பயனுள்ள வாசிப்பாக, புத்தகமாக இருப்பது இதன் தனி சிறப்பு.

முதலில் மாற்றம் ஏன், எதற்காக அவசியப் படுகிறது? தொழில், வர்த்தக நிறுவனங்களை, ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழல், தனக்குள் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும்படி நிர்பந்திக்கிறது என்பது வெளிப்படை. 

ரண்டாவது உலகப் போருக்குப் பின்னாலும், 1980 களுக்குப் பிறகும் நிறுவனங்கள், மாறிவரும் சந்தை, பொருளாதாரச் சூழலுக்கேற்றபடி, தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது வெறும் நிர்பந்தம் என்று மட்டுமல்லாமல், நிறுவனங்கள் பிழைத்திருக்க வேண்டிய முக்கியமான காரணியாகவும் ஆனது.கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மாற்றத்தை வலியுறுத்தும் மேக்ரோ எகனாமிக் காரணிகள், இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மிக வலிமையானதாக ஆகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது.

தைப் புரியும்படி சொல்வதானால், உற்பத்தி அல்லது அடக்க விலைச் செலவினத்தைக் குறைப்பது, தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தை  அதிகரிப்பது,  வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களைக் கண்டறிவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்ற விஷயங்களில் போதுமான மாற்றத்தைக் கொண்டு வரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைத்திருக்கும். ஆக, மேற்சொன்ன விஷயங்களில், ஒவ்வொரு நிறுவனமும் மாற்றத்தை சாதித்தே ஆக வேண்டி இருக்கிறது.

ப்படி மாற்றத்தை சாதிக்க முயலும் சில நிறுவனங்கள், முயற்சியில் வெற்றி பெறுகின்றன. வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்கின்றன. அதே நேரம், பல நிறுவனங்கள் இந்த முயற்சியில் தோல்வியை சந்திக்கின்றன. எதிர்பார்த்த அல்லது திட்டமிட்ட அளவுக்கு இந்த நிறுவனங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடிவதில்லை. அது மட்டுமல்ல, மாற்றத்தைக் கொண்டுவருவதில் ஏற்படும் தோல்வி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மனிதர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. மனித வளம் என்பது அங்கே வீணடிக்கப்படுகிற, பலிகடாக்களாக ஆக்கப் படுகிற சூழ்நிலையும் உருவாகிறது.

கொஞ்சம் நிதானித்துப் பார்க்கும்போது, இத்தனை வேதனை, விரையம், தோல்விகள் தவிர்த்திருந்திருக்கக் கூடியவையே என்பது தெரிய வரும். அப்படியானால், எதனால் இப்படி நிகழ்கிறது? என்ன செய்தால், இத்தனை துயரத்தைத் தவிர்க்க முடிந்திருக்கும்?

து தான் Change Management என்று சொல்லப் படுகிற, மாறியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், எதைச் செய்தால் தோல்வியில் இருந்து வெளி வரமுடியும் என்ற சிந்தனை, ஒரு நல்ல தலைமையின், மிக முக்கியமான அம்சம்! தலைமைப் பண்புகளில் அவசியம் தேவைப்படுகிற ஒன்றும் கூட.!

ஜான் பி. கோட்டர் என்ன சொல்கிறார் என்பதைத் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னால், அவரைப் பற்றிக் கொஞ்சம் விவரங்கள்!

ந்தத் துறையின் தலை சிறந்த சிந்தனையாளர், ஆசிரியராக இன்றைக்கு அறியப்படும் ஜான் பி. கோட்டர்,  1972 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினெஸ் ஸ்கூலில், ஆசிரியராகச் சேருகிறார். 1980 வாக்கில் தனது முப்பத்து மூன்றாவது வயதில், பேராசிரியராகப் பதவி உயர்வைப் பெறுகிறார். அவ்வளவு இளம் வயதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக ஆனதே மிகப் பெரிய சாதனை. இதுவரை பதினேழு புத்தகங்களை எழுதி இருக்கிறார். மேலாண்மை இயலின் குரு என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார். ஏராளமான விருதுகள், பாராட்டுக்களைப்  பெற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர் என்ற அளவோடு, இன்னும் அதிக விவரங்கள் வேண்டுமானால் இங்கே
இந்தப்புத்தகத்தைப்பற்றிப் பேசும்போது Business World இதழில் இன்னும் கொஞ்சம் கூர்மையாக, சில கேள்விகள் முன்வைக்கப் பட்டிருந்தன.

தலைவர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

தலைவர்கள், மேலாளர்களிடமிருந்து (Managers) எப்படி வித்தியாசப் படுகிறார்கள்?

தலைவர்களால் எப்போதுமே மாற்றங்களைக் கொண்டு வா முடிகிறதா?

மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் காரணங்களாக ஒரு எட்டு விஷயங்களை ஜான் பி.கோட்டர் சொல்கிறார்.

தில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும் செய்து விட முடியாது என்றிருக்கும் மெத்தனம்! இத்தனை செய்ததே பெரிது என்று அதனுடனேயே நின்று விடுகிற சுயதிருப்தி!

து எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பின்னூட்டங்களில் எழுதுங்கள்! தொடர்ந்து பேசுவோம்!