Saturday, December 11, 2010

மாற்றங்களுக்குத் தயாராவது - 4


மாற்றங்களை எதிர்கொள்வது, மாற்றங்களுக்குத் தயாராவது என்பது என்னவோ இமய மலை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது போல சாத்தியமே இல்லாத ஒன்றாக  எண்ணி மயங்கும் போது, மலைத்து நிற்கும் போதுதான் கடினமான ஒன்றாக, சிக்கல்கள் நிறைந்ததாக ஆகிறது.

உண்மையில் மாற்றம் என்பது, நம்முடைய கற்பிதங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமேயானால், மிகவும் இயல்பானதாக, எளிமையாகத் தான் இருக்கும்.

மாற்றம் என்பது ஒரு அடிப்படை விதி. எல்லாமே மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிச் சொல்லும் போது சரி என்று தான் படுகிறது, ஆனாலும் மாற்றம் என்று ஒன்றைப் பார்க்கும்போது அதை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நம்முடைய மனம் ஏனோ தயங்குகிறது. ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறது இல்லையா? 


கொஞ்சம் இதற்கான காரணம் என்னவென்று உற்றுநோக்கத் தெரிந்து கொண்டால், பழக்கங்களின் அடிமையாகவே மனம் உழலும் போது புதியதை ஏற்கத் தயங்குகிறது! தெரியாத ஒன்று எப்படி இருக்குமோ யார்கண்டது என்று, நான் பழையபடியே, எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் கூட சகித்துக் கொள்கிறேன், என்னை விட்டு விடு என்று பிடிவாதம் செய்கிறது. 

ஆக மாற்றம் எப்படி இருக்குமோ என்ற கற்பனையான பயம் தான் மாற்றத்தை எதிர்க்க மூல காரணமாக இருக்கிறது.

மிகவும் பச்சையாக, நேரடியாக சொல்வதென்றால், எல்லோரும் உலகத்தை மாற்ற விரும்புகிறார்கள், முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஒருவர்கூடத் தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவதுமில்லை, முயசிப்பதுமில்லை!

நிறுவனங்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு உதாரணத்திற்காக, புள்ளிராசா வங்கியில் கோர் பாங்கிங் அறிமுகமானது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஊழியர்களும் தயாராக இல்லை, வாடிக்கையாளர்களும் புதிய முறைக்குத் தயாராகவில்லை. சின்ன சின்னக் காரணங்களுக்காகத் தாமதமான ஒவ்வொரு நிமிடமும் வாடிக்கையாளரின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வந்தபோது, புதிய தொழில்நுட்பத்தைத் தான் அவர்களால் குற்றம் சொல்ல முடிந்ததே தவிர, தங்களிடம் இருந்த குறைகளைப் பார்க்க முடியவில்லை, தெரியவும் இல்லை! ஒரு கற்றுக் கொள்ளும் நிறுவனமாகப் புள்ளிராசா வங்கி எப்போதுமே இருந்ததில்லை என்பதும் கூட சேர்ந்து கொண்டது. இன்றைக்கும் கூட ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை டெபாசிட், கடன் மீதான வட்டி விகிதங்களை, சந்தை நிலவரங்களுக்குத் தகுந்தமாதிரி நிர்ணயம் செய்து அறிவிக்கும் வேகம், தைரியம் இந்தப் புள்ளிராசா வங்கிக்கு இன்றைக்கும் கூட இல்லை. மற்ற பெரிய வங்கிகள் அறிவித்து முடித்த பிறகு, அதைப் பார்த்து  தன்னுடைய வட்டி விகிதங்களை அறிவிக்கும் ஒரு வங்கியின் தலைமை எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! உண்மை நிலவரம் உங்களால் கற்பனை செய்ய முடிவதை விட மிகக் கேவலமானது.

ஆமாம்-இல்லை, முடியும்-முடியாது, உடனடியாக-சற்று தாமதமாக என்று மிக எளிதாக பதில் சொல்லக் கூடிய கேள்விகளைக் கூட, மிக சிக்கலான பதிலாக மாற்றிப் பார்க்கும் கோளாறு நிறுவனங்களில் சர்வசாதாரணம். ஒரு தனிநபராக, வீண் கற்பனையான பயம், உண்மையைப் பார்க்கத் தடையாக இருப்பதைப் போல, நிறுவனங்களில் வேறுவிதமான கோளாறு ஆட்டிப் படைக்கிறது. பொறுப்பைத் தட்டிக் கழித்து, மற்றவர் தலையில் கட்டிவிடப்பார்க்கும் மனோபாவமாக, மிக மோசமான நிறுவனப் பண்பாக இத்தகைய கோளாறு உருவெடுக்கிறது.புள்ளிராசாவங்கியின் அடிப்படைக் கோளாறே, "தானாகவும் தெரியாது- பிறர் சொன்னாலும் ஏறாது" என்பது தான்!



"The basic idea is that people go to great lengths to repress awareness of mortality. Studies show that we create three existential buffers to protect us from this knowledge: Consistency allows us to see the world as orderly, predictable, familiar, and safe. Standards of justice allow us to establish and enforce a code of what's good and fair. Culture imbues us with the sense that we have contributed to, and are participating in, a larger and enduring system of beliefs.


Anything that threatens these buffers exposes us to the looming reality of death. Change an employee's routine, and you've undermined the consistency barrier. Tell a salesperson he'll no longer be evaluated on the basis of revenue and now must hit certain cross-selling and teamwork targets, and you've attacked his standard of justice. Alter the company's mission, and you've pierced the culture buffer by requiring him to reconstruct his worldview."

Change Management சம்பந்தமாக சமீபத்தில் படித்த   ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூ தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் பகுதி

இந்தப் பதிவில் அழுத்தம் கொடுத்துச் சொல்லப்படுவது ஒரு நிறுவனத் தலைமை, மாற்றத்திற்குத் திட்டமிடும்போது எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது தான்! முடிந்தால் இந்தப் பதிவிற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்! குறிப்பாக, நீல்சன் என்பவர் எழுதிய இந்தப் பின்னூட்டம்:
 
"Very interesting piece. Change is one of the most difficult challenges that we deal with on a regular basis. We are all comforted by knowing what to expect. This is especially true when our performance is being evaluated.

We have all heard the ubiquitous phrase that "change is constant," so why are most of us so bad at it? Moreover, whey are those of us who have been generally "successful" even more challenged by the prospect of change? One answer involves our lack of contextual awareness. The context within which most people work has changed or is changing. This means that the knowledge, skills, and abilities that led to success in the past may not lead to success in the future.

While this fundamental doctrine is easy to understand intellectually, it is very difficult for both individuals and organizations to apply. Changing the way we do things in order to continue our success in a new context is one of the most basic challenges that many of us face."


People -->Process -->Culture! இதுதான் மாற்றங்களுக்குத் தயாராவதில் உள்ள மூன்று அடிப்படை விஷயங்கள்! முந்தைய பதிவின் ஆரம்பத்தில் இதை அறிமுகப் படுத்துகிற மாதிரி ஒரு படம், நினைவு படுத்திக் கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை!



2 comments:

  1. 'தரம்'- 'தரம்'- 'தரம்'-- இந்த தாரகமந்திரம் ஒன்றே விற்பனைகளைப் பொருத்த மட்டில் முன்னெடுத்துச் செல்லும் காரணியாக இருந்த காலம் உண்டு. தனது 'பிராண்டி'ன் கியாதியை எந்நேரத்தும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத சத்திய உணர்வு கொண்ட நிருவனங்கள் இந்த தேசத்தில் இருந்த காலமும் ஒன்று உண்டு.அந்த தர மேம்பாட்டிற்காக, அதை விட்டுக் கொடுக்காத வீம்புக்காக, கொஞ்சம் கூடக் கொடுக்கவும் உபயோகிப்பாளர்கள் தயாராகவே இருந்தார்கள்.

    அந்த தரமேம்பாட்டை மறக்கச் செய்ய வந்த மாற்றமாக விளம்பரயுகம் அமைந்து விட்டது. ஒரு பொருளின் உற்பத்தி மேம்பாட்டுக்குச் செய்யும் செலவை விளம்பரத்திற்குச் செய்யலாம் என்கிற நிலை. அந்த விளம்பரம் பொருளை வாங்கச் செய்யகிற மாதிரி அதற்கெனக் கொண்டிருக்கிற குணாம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அவ்வளவே. அதுவே மற்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்கிற நிலை. வாங்குவோரின் பட்டியலிலேயே இல்லாத, தேவையே இல்லாதவற்றையும் வாங்கச் சொல்கிற ஒரு உபாயமாக யுக்தியாக விளம்பரங்கள் மாறிப் போய் விட்டன.

    ஒரு பொருளின் தரம் தன்னைத் தானே விளம்பரத்திக் கொள்ளும் என்கிற மகாவாக்கியம் மறக்கப்பட்டு விட்டது. இதை பழைய நிலைக்கு, பொருளின் தர நிர்ணய நிலைக்கு மாற்றி தான் பலனடையும் வெற்றியை சாதித்துக் கொள்வது உபயோகிப்பாளர் கையிலேயே இருக்கிறது.

    மாற்றம் என்பது எல்லா நேரத்தும் முன்னெடுத்துத் தான் செல்லும் என்பதில்லை. சில நேரத்து பழைய அனுபவிப்புகளின் அருமையை மீட்டெடுக்க பின்னோக்கியும் செல்லலாம். எல்லாம் பெருவாரியாக உபயோகிப்போர் கையில் தான் இருக்கிறது.

    தொடர்பதிவுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் ஜீவி சார்!
    பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி இன்னொரு வலைப்பதிவில் நிறையவே பதிவுகளை எழுதியிருக்கிறேன். பிராண்ட் என்பது நேற்றைய நாட்களில் தன்னை அதே மாதிரியான இன்னொரு தயாரிப்பில் இருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகிறதாக இருந்த தன்மை மாறி, பிராண்ட் என்பது ஒரு குறைந்தபட்ச தர உத்தரவாதம், தயாரிப்பாளரின் தரம் குறித்த வாக்குறுதி, உபயோகிப்பவர்களின் எதிர்பார்ப்புக்கள் என்று இன்றைக்கு பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது.

    விளம்பரம் என்பது தனி சப்ஜெக்ட். அதையும் கூட பத்து இல்லைன்னா பத்தாது என்ற தலைப்பில் பிராண்டும், விளம்பரமும் எப்படி கைகோர்த்து செயல் படுகின்றன என்பதை கால்கேட்-பெப்சொடேன்ட் பற்பசை விளம்பர யுத்தத்தை வைத்து எழுதிய பதிவும் அங்கே இருக்கிறது.Consumerism என்ற வார்த்தைக்கே நுகர்வோரின் தேவைகள் என்பதை விட, தேவைகளைக் கற்பிதம் செய்துகொள்வது என்பதாகப் பொருள் கொண்டு பார்த்தால் இங்கே நடக்கும் நிறைய கூத்துக்களை சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)