Monday, January 7, 2019

திருவாரூர்! மைக் டெஸ்டிங்!

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட செய்தி  சிலருக்கு நிம்மதியைத் தந்திருக்கலாம்! இங்கே நேற்றைக்கு மு.க.அழகிரியின் மகன் போட்டிருக்கிற twitter செய்தி அதைக் குலைத்துவிடுகிற மாதிரி, ஒரு சீண்டல்!        

if you believe in something be ready to fight .. you will know whether you are part of the losing side or the winning side only after the fight .. it’s so sad that people here are so scared and timid that they are not ready to take part ..


ஜனநாயகச் சந்தையின் நிலவரங்களை உற்றுக் கவனித்தால் எதிர் காலம் என்பதே நம்சந்ததியினருக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் நமக்குள் சூழ்ந்துவிடுகிறது. வாக்குரிமையை விலைபேசி வியாபாரம் செய்வதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

வாக்குரிமையின் மேன்மையை உணராத மக்களும்இவர்களின் வாக்குரிமையை இருளில் நின்று கள்ளத்தனமாகக் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களும் தேர்தல் களத்தில் தங்களுக்கான மறைவிடத்தைத் தேடி வைத்திருந்ததை நம்மால் பார்க்கவும் முடிந்தது.

வெட்கமற்ற இந்தச் செயல்கள் நமக்குள் அவமானத்தைப் பெருக்கெடுக்க வைத்தன. ஆனாலும் சத்தியத்தின் வேர்கள் நம் மண்ணில் ஆழமாகப் பதிந்து நிற்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதற்கு 200 ஆண்டுகாலம் அடைந்த துயரத்தை இன்னும் நாம் மறந்துவிடவில்லை. ரத்தமும் சதையுமாக இது இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

இப்படி ..........

இந்தப் பக்கங்களைத் தொடர்ந்து வாசிக்க வருபவர்களுக்கு, ஒரு மையமான கருத்து, இந்நேரம் புலப்பட்டிருக்கும்! காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிவது ஒன்று தான் இந்த தேசத்துக்கு விடிவு தரும் என்று அடிக்கடி சொல்லப்படுவதில் மட்டுமல்ல!இப்போதைய தேர்தல் முறை தான், இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளை உருவாக்குவதற்கு விளைநிலமாக இருக்கிறது என்பது இந்தப்பக்கங்களில் அடிக்கடி சொல்லப்பட்டு வருவதை இன்னொரு முறை அழுத்தமாகச் சொல்கிற மாதிரி, தினமணியில் இன்றைக்கு வெளியான இந்தக்கட்டுரை இருப்பது புரிகிறதா?

எமெர்ஜென்சி முடிந்த தருணங்களில், தினமணி ஆசிரியராக இருந்த திரு ஏ.என். சிவராமன் அவர்கள் "கணக்கன்" என்ற புனைபெயரில், தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி, முதிர்ச்சியடைந்த ஜன நாயக நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றித்தொடர் கட்டுரைகளாக எழுதினார்.  அன்றைக்கும் சரி, அதற்குப்பிறகு இந்த முப்பத்து நான்கு வருடங்களிலும் சரி, கோளாறு என்ன, அதன் ஆணிவேர் எங்கே இருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தொடர்ந்து சிந்திப்பாரில்லாமல், காத்திருக்கிறது. சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை! இதுவும், அவ்வப்போது பேச்சு எழும், பிறகு மறக்கடிக்கப் பட்டுவிடும்!

அன்னா ஹசாரே ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கத்தைத்தொடங்கினார்.நம்பிக்கையோடு ஜனங்கள் பின்தொடர ஆரம்பித்ததில், ஆளும்தரப்பு கொஞ்சம் உஷாரானது. கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது போல வெளியில் சொல்லிக் கொண்டாலும், பின்னால் இருந்து குழிபறிக்கும் வேலைகளைக் காங்கிரஸ் கட்சி, கோயபல்சை மிஞ்சும் விதத்தில் செயல்படுத்திவருவதாக செய்திகள் சொல்கின்றன.

அன்னா ஹசாரே இன்னொரு காந்தியாக வளர்ந்துவிடாமல் இருக்க  இப்போதைய காங்கிரஸ் அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு, வெள்ளோட்டமாக அமர்சிங் களத்தில் இறக்கி விடப்பட்டிருப்பதே சான்று. ஜெயப்பிரகாஷ் நாராயணன்  எமெர்ஜென்சியை எதிர்த்து நின்ற அளவுக்கு நெஞ்சில் உரம் உள்ளவரா,  பரபரப்பு செய்தியாக இன்றைக்கு இவரை வளர்த்துவிட்ட ஊடகங்கள் தொடர்ந்து கைகொடுக்குமா என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது!

ஜனநாயகம் என்பது ஐந்துவருடங்களுக்கு ஒருமுறை ஓட்டுப் போடுவதுடன் முடிந்துவிடுகிற சடங்கு இல்லை!

காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கனுப்பி விட்டு, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது!

என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!

இப்படி மீள்பதிவாகக் கொஞ்சம் இன்னொரு பக்கத்திலிருந்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
இந்தப்பதிவு தமிழ்மணத்தில் எந்தத் தடையுமில்லாமல் திரட்டப்பட்டது போல  

https://consenttobenothing.blogspot.com/2019/01/blog-post_7.html  

திரட்டப்படவில்லை. RSS ஓடை உரலும் கொடுத்தாகிவிட்டது.பயனில்லை என்ற குரலுக்கு ஓடிவந்து என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் அவரை அழைத்துவந்த ஸ்ரீராம்  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!  

4 comments:

  1. காங்கிரஸுக்கு மிச்ச மீதி ஏதும் மரியாதை இருக்குமாயின் அதை ராகுல் காந்தியே குழி தோண்டிப் புதைத்து விடுவார்!

    ReplyDelete
    Replies
    1. பாவம் ராகுல் காந்தி! பாட்டிகாலத்திலிருந்து தொடரும் கழிசடைத்தனங்களையும், சிதம்பரம் மாதிரியான சுயநலவாதிகள் கழுத்தில் கட்டின பாறாங்கல்லாக இருப்பதையும் சேர்த்தே சுமக்கவேண்டி இருக்கிறது என்று அவ்வப்போது எனக்குள் அனுதாபமும் எழும்!

      Delete
  2. Replies
    1. வாருங்கள் ஜீவி சார்! நேற்றிரவே ஸ்ரீராமும் திண்டுக்கல் தனபாலனும் வந்துதவி ஒலிபெருக்கியை சரி செய்து விட்டார்கள்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)