Monday, February 25, 2019

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! எல்லைமீறும் ஊடகங்கள்!

அரசியலைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் வியாதிதான்! அவர்கள் மாறலியே என்று குறை சொல்வதற்கு முன்னால், நம்முடைய யோக்கியதை என்ன? சில கேள்விகளுக்கு ரங்கராஜ் பாண்டே அழகாகப் பதில் சொல்கிறார், கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்!

கொஞ்சம் மென்மையாக, இந்தப்பக்கங்களில் அரசியல் பதிவுகளையும் எழுத ஆரம்பித்ததில், மையக்கருத்தாக மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பித்தாக வேண்டும் என்பதைச் சொல்லிவருவது தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! வாக்குச்சீட்டு நம்மிடம் இருக்கும் வலிமையான ஆயுதம்! ஒருமுறைக்குப் பலமுறை நன்கு யோசித்துப் பயன்படுத்த வேண்டிய ஒன்றாகவும் அது இருக்கிறது. 

அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும் என்ற தலைப்பே ஊடகங்கள் எத்தனை வக்கிரத்துடன் செய்தி சேகரிக்கின்றன, அவதூறுகளையே கேள்விகளாக எழுப்புகின்றன என்பதைச் சொல்லும். ஊடகங்கள் முழு உண்மையைச் சொல்வதில்லை என்பதற்காக மட்டுமே இந்த வீடியோவைப் பகிர்கிறேன்! அன்புமணிக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல! பாமகவையும் நிராகரிக்கவேண்டிய உதிரிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தலித் எழில்மலை என்ற பெயர் ஞாபகம் வருகிறதா?

கே பொன்னுசாமி என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? விடுதலைச் சிறுத்தைகளோடு கூடிக் குலாவியதாவது நினைவுக்கு வருகிறதா? சௌகரியப் படுகிற போது வன்னியருக்கு மட்டுமே ஆன கட்சியாகவும் சௌகரியம் மாறும்போது அய்யங்காருக்கும் இடம் கொடுத்து எல்லோருக்கும் பொதுவானகட்சியாகவும்  இருந்து பார்த்து அதுவும் எடுபடாதபோது, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன தான்!

ஆனால் அன்புமணியையோ, ராமதாசையோ மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற catchy  கோஷத்தோடு ஒரு மாற்றத்துக்கான அரசியலை அன்புமணி, எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவராக, தமிழ்நாடு முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்ல மருத்துவர் அன்புமணி எடுத்த முயற்சிக்கு என்ன வரவேற்பு இருந்தது? அவருடைய ஆதங்கம், எதிர்க்கேள்வி நியாயமானதுதான்! 

என்னமோ அன்புமணியை வறுத்தெடுத்து விட்டதாக மீடியா ஹைப் இங்கே கிளப்பிவிடப்பட்டிருக்கிறது! உச்ச பட்ச டென்ஷனில் அன்புமணி என்று பீற்றிக் கொள்கிறது நக்கீரன்!

விஜயகாந்த் தெம்பாக இருந்த நாட்களில் இதுமாதிரி ஊடகங்களைக் காறித்துப்பியது நியாயம்தான் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

வேறென்ன?


   

           

2 comments:

  1. //அன்புமணியும் அந்தப் பத்துக் கேள்விகளும்// - ஊடகங்கள் இதேபோல் ஸ்டாலினிடம் கேள்வி கேட்க மாட்டார்கள். திமுக + காங்கிரஸ் கூட்டணியைக் கேள்வி கேட்பதில்லை. இதே நேரத்தில் ஜெ. இருந்திருந்தால் இவங்களை ஒரு பொருட்டாகவே நினைத்திருக்க மாட்டார்.

    ஊடக தர்மம்னு ஒன்றை நான் பார்க்கிறதில்லை. அவங்க அவங்க, அவங்க தொலைக்காட்சி ஓனரோட கொள்கைக்கு ஏற்ற மாதிரித்தான் ரிப்போர்ட் பண்ணறாங்க. இதில் இந்து ராம், சன் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தந்தி என எதுவும் விதிவிலக்கில்லை

    ReplyDelete
    Replies
    1. ஊடகதர்மம் என்பதெல்லாம் திமுக காங்கிரஸ் வைத்திருந்த கூட்டணி தர்மம்தான்! செய்திகளும் ஒரு வியாபார பொருள்! காசுகொடுப்பவனுக்கு சௌகரியமாக செய்தி வெளியிடுவது கூட ஐக்கிய முன்னணிக்கு கூட்டணிக்குழப்ப ஆட்சிகாலத்தில் பரவலாக வளர்ந்த ஒன்றுதானே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)