Thursday, March 14, 2019

நல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்!

இந்தப்பக்கங்களில் அரசியல் நிகழ்வுகளை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாரேனும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் கொஞ்சம் திகைப்பு இருந்தது.  நேற்றைய பதிவுக்கு வந்த சில உபித்தனமான வசவுப் பின்னூட்டங்கள், பதிவை யார்யார் கவனிக்கிறார்கள் என்பதையும், நேர்மையான பதில் சொல்லமுடியாமல் ஆபாச வசவுகளில் இறங்கிவிடுகிற கோழைத்தனத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஒரு முன்னாள் இடதுசாரியாக, தொழிற்சங்க ஈடுபாட்டோடு இருந்த நாட்களில் இருந்தே வன்முறை மிரட்டல்கள், தாக்க முயற்சிகள், ஆபாசமான வசவுகளை எதிர்கொண்ட அனுபவத்தில்  இது மாதிரி முகம்தெரியாத அனானி மிரட்டல்கள் வசவுகளைப் பார்த்து பரிதாபப்படத் தான் தோன்றுகிறது! கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாமல் திட்டக் கூடத் தெரியாதவர்களைப் பார்த்து வேறென்ன செய்வது சொல்லுங்கள்?!

மாயவரத்தான் ரமேஷ் குமார் சொல்கிற மாதிரி இருந்து விடலாமா? யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!
 
இங்கே ராவுல் பாபாவுடைய பழைய கதைகளை, அவ்வப்போது நினைவுபடுத்துவது, அவர் இன்னமும் எப்படி அரசியல்முதிர்ச்சியோ, படிப்பினைகளையோ பெறாமல் இருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டத்தான்! தகப்பனை மாதிரியே மகனும் ஆரம்பத்தில் இளைய தலைமுறையின் வேகத்தோடு இருந்தமாதிரித்தான் தோன்றியது! ஆனால் ராஜீவும் ராகுலும் ஒரேமாதிரியான, தோற்றுப்போன, தூக்கி எறியப்பட வேண்டிய வெர்ஷன்கள் தான் என்பதை இன்றுவரை தொடர்ந்து  நிரூபித்து வரும் போது, வேறென்ன சொல்ல முடியும்

Habitual liar Rahul Gandhi. No opposition leader will keep repeating lies unless he is a pervert taking nation as if .......
“Congress President Rahul Gandhi on Sunday attacked National Security Adviser Ajit Doval alleging that he was among those responsible for the release of Jaish-e-Mohammad (JeM) chief Masood Azhar in 1999 when Indian Airlines flight IC-814 was hijacked by terrorists. Doval was tasked with leading the four-member negotiating team to Kandahar in Afghanistan to negotiate the release of passengers of the hijacked IC 814 plane.


கிளிப்பேச்சு கேட்கவா? காணொளிச் சுட்டி!    நாகர்கோவிலில் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே! என்பதற்கு மேல் நேற்றைக்கு நாகர்கோவிலில் ராகுலும் இசுடாலினும் பேசியதில் என்ன புதுவிஷயம் இருந்தது?

உலகை நீ இருக்கும் இடத்தில இருந்து பார்க்காதே... ஆனால் நீ இருக்கும் இடத்தில இருந்து பார்.
அந்த ஸ்டெல்லா மேரீஸ் புள்ள இதை யோசிச்சு யோசிச்சு அர்த்தம் புரியாமல் மன நல மருத்துவரை அனுகினாரா இல்லையா? காங்கிரஸ் ஐடி விங்,    உளவுத்துறை  எல்லாம் விசாரணை செய்யுதோ இல்லையோ, பாவம்!  

மீண்டும் புதிய செய்திகள், விமரிசனங்களோடு சந்திப்போம்! சிந்திப்போம்!   
           

6 comments:

 1. ஒரு உபி பெயரை எழுத்துப்பிழை போன்று பழனிச்சாமி என்று எழுதி மகிழ்ந்தது.
  பின்னூட்டத்தில் இந்த மாதிரி இல்லை இதை விட ஆபாச வசவுகளை எதிர் கொண்டு தொழிற்சங்க பணியாற்றியவன் என்று சுட்டிக் காட்டினேன் அதன்பின் ஆளே காணோம்.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பநாட்களில் உபிக்கள் வரிசைகட்டி வந்துகொண்டிருந்தார்கள். அப்புறம் நின்றுபோனது, இப்போது மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்! இதைவிட மோசமான வன்முறை தாக்குதல்களையே எதிர்கொண்ட அனுபவமும் இருக்கிறது பழனிச்சாமி!

   Delete
 2. பழனிச்சாமி இல்லை பழனிச்சாணி என்று வாசிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. பழனிச் சாமியாகவே இருங்கள்! :))

   Delete
 3. அனானிகளை அனுமதிக்காதீர்கள். நேர விரயம். சுத்தமாக ஒதுக்கிவிட்டால் குரைக்க முடியாமல் ஓடிவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இணையத்தில் fake id யுடன் உலா வருகிறவர்கள் இங்கே தமிழ்ச் சூழலில் அதிகம்!

   Delete