Wednesday, March 13, 2019

"டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" பப்பு மொழி!

காலம் செய்த கோமாளித்தனத்தில் காங்கிரஸ் கட்சி  எத்தனை அரிதாரங்களைபோட்டுக் கலைத்திருக்கிறது என்று பார்க்கவே மிகவும் அலுப்பாக இருக்கிறது.

இந்தக் கலந்துரையாடலில் ராவுல்பாபா இப்போதைய பிரதமரை இந்தமாதிரி  கூட்டத்தில் கேள்விகேட்டு பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா என்று ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்! 3000 பெண்களுக்கு முன்னால் நின்று பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா என்று யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசுகிற தருணம் 27mts 57s!  துண்டுச் சீட்டைப் பார்த்துக் கொண்டே தப்பும் தவறுமாக உளறுகிற இசுடாலின் போல அல்லாமல், துண்டுச்சீட்டு இல்லாமலேயே அதே பழைய அரைத்தமாவைத் திரும்பத்திரும்ப அரைக்கிறார். ஆகையால் ராவுல் பாபாவின் பழைய கதையொன்று மீளவும்! 

2001ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் FBI யால், 1,60,000 டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளுடனும் கூட  அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் மகளுடன் கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி.
சோனியாவின் கெஞ்சுதலால் இந்தியாவின் மானம் கப்பலேறி விடுமே என்று அஞ்சி வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் அப்போதைய இந்திய வெளியுறவு துறை செயலாளர் பிரஜேஷ் மிஷ்ரா, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசி பின் வாஜ்பாயின் கடும்முயற்சியால் ஜார்ஷ்புஷ்ஷால் விடுவிக்கப்பட்டார்.
ஒருவேளை வாஜ்பாய் முயற்சி எடுத்திருக்காவிடில் ராகுல் 128 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருப்பார். நமக்கும் பெரிய தலைவலி குறைந்திருக்கும். இப்போது யோக்கியன் போல நடமாடி கொண்டிருக்கமாட்டார். இவை எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்ன வாரிசுகளின் கதைகளில் ஒன்று உடனே நினைவுக்கு வருகிறது.
*******
1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் "உள்ளத்தை அள்ளித்தா" படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் "காமெடி வகை" என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம். கிட்டத்தட்ட அதே நிலை இன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் "சம்பிரதாயமாக" டிவி பார்த்தபோது பப்புவின் நாகர்கோவில் பேச்சு நேரலையாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது. 
.
மொழி பெயர்ப்பாளர் (தங்கபாலு) ராகுலுக்கு மேல் காமெடி. பாவம் அவர். உடைந்துபோன keyboard போல அடிக்கடி ஓரிரு எழுத்துக்கள் விட்டுப்போய் தமிழ் மொழியை "பெயர்த்து" எடுத்துக் கொண்டிருந்தார். (பாரதம் என்பதை பாரம் என்கிறார்)
.
ராகுல் - தங்கபாலு கூட்டு அந்தக்காலத்து "தங்கவேலு முத்துலட்சமி" காம்பினேஷன் போல இருந்தது.
.
ஒரு கட்டத்தில் ராகுல் "The great tamil poet" என்று ஆரம்பித்தவுடன் நம் மனதுக்குள் ஒரு ஜெர்க் "அய்யயோ யாரை இழுத்து தெருவில விடப் போறானோன்னு"
.
வழக்கம் போல "பெயரைக் கெடுக்கும்" பப்பு திருவள்ளுவரை "திருவா.. லவ... வலுவா" என்று துழாவ ஆரம்பித்ததும் வந்த சிரிப்பை மீறி அடுத்த ஜெர்க் நம் மனதில் "எந்த குறளோட குரல்வளைய நெரிக்கப்போறானோன்னு தெரியலையே" என்று.
.
அங்கதேன் ட்விஸ்ட் வச்சார் ராகுல். "He said உண்மையே வெல்லும்" என்று சட்டென்று முடித்து விட்டார். குறள் 7 பதம் கொண்டது, இவர் இரண்டிலேயே முடித்துவிட்டாரே!
.
"உண்மையே வெல்லும்" - அவ்வளவுதான் திருக்குறள். ஆனால் தங்கபாலுவோ இன்னும் வரும், மொழி பெயர்க்கலாம் என்று காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒன்னும் வராமல் "அவ்வளவுதான் போலிருக்கு இன்னைக்கி" என்று அதையும் மொழி பெயர்த்து அடுத்த அதிர்ச்சிக்காக காத்திருந்தார்.
.
"உண்மை வெல்லும்" "இது எந்தக் குறள் அய்யா" என்று "தேவர் மகன் ஸ்ருதி" போல நாமும் குழம்பி, சரி இது முப்பாலுக்கும் "அப்பால்" ஏதோ போல என்று மனதை தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்காக ஒரு திகிலுடன் காத்திருந்தோம்.
.
நாம் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கடைசியில் ராகுல் "டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" என்றார்.
.
"ஜெல்லுமா" என்று தங்கபாலு, துரைமுருகனைவிட அதிகமாக ஒரு expression கொடுக்க, பப்புவோ "i know what i mean, please go ahead" என்று புன்னகையுடன் உத்திரவாதம் கொடுக்க, தங்கபாலுவோ மையமாக "உண்மை செல்லும்" என்ற வாக்கில் ஏதோ மையமாக சொல்லி வைத்து முடித்தார்.
.
இந்த எழுச்சி உரை முடிந்தவுடன் அனைவரும் ராகுலை உச்சி முகர்ந்து "அனல் பறக்கும் பேச்சு" என்று கொஞ்சாத குறை.
.
கடைசியில் வைகோ "கண்ணுல ஜலம் வச்சுண்டு" வந்து இரண்டு முறை கைகொடுத்து "வாழ்த்து" சொன்னது மனதுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
.
உண்மை ஜெல்லட்டும் என்று முகநூலில்  நையாண்டி செய்கிறார் ச. சண்முக நாதன் 


பொள்ளாச்சியை சம்பவமாக்கியதற்கு இதை முன்னமே செய்திருக்க வேண்டும்! இப்போதாவது செய்தார்களே பார்த்தால் என்று  குறை சொல்ல ஏதுமில்லை!    
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.

என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.

380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்? சிந்தனை தெளிவடைந்தேன்.


உத்தமசிகாமணிகளை என்ன செய்ய வேண்டுமென்பதில் ஒரு தெளிவு இருக்கிறது தானே?!!   
  

3 comments:

  1. 'சத்தியமேவ ஜெயதே' என்பதை வாய்மையே வெல்லும் என்று திருவள்ளுவர் பஸ்களில் எழுதி வைக்க கலைஞர் ஏற்பாடு செய்தார்-- என்று குறிப்பாக எழுதிக் கொடுத்திருப்பார்கள். திருவள்ளுவர் மட்டும் நினைவில் இருந்து சொன்னது தப்பாகப் போயிருக்கலாம்.

    ReplyDelete
  2. துண்டுச்சீட்டு பாத்து தப்பு தப்பா பேசற ஸ்டாலின் பரவாயில்லையா இல்லை மனப்பாடம் பண்ணி உளர்ர பப்பு பரவாயில்லையான்னு பெரிய டெபேட்டே நடத்தலாம் போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. டிபேட்டை எப்போ வச்சுக்கலாம்? எப்படி வச்சுக்கலாம்? :)))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)