Friday, March 22, 2019

தேர்தல் களேபரங்கள்! எதைக் கழிப்பது? எதைத் தேர்வு செய்வது?

இங்கேயும் அங்கேயும் தேர்தல் விவகாரங்களாக எழுதி வருவதைத் தொடர்ந்து கவனித்து வருகிற நண்பர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். இங்கே ஏதோவொரு கட்சிக்காக அல்லது வேட்பாளருக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எழுதுவதை விட அதிக முக்கியத்துவமும் அழுத்தமும் கொடுப்பது, தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவே என்பதை மறுபடியும் ஒருமுறை தெளிவுபடுத்துவதில் தவறில்லையே!

இந்தப்படம் ஜாலி சித்திரமாக ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் வெளியானது. தலைப்பென்னவோ ஜாலி சித்திரமாக இருந்தாலும், நடப்பு அரசியலின் நிலையென்ன என்பதைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறதா இல்லையா?     

DMK leader Jagathrakshakan’s family linked to record FDI in Sri Lanka என்று அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் கல்வித்தந்தை ஜகத்ரட்சகன் குடும்பம் சிங்கப்பூர் ரூட்டில் இலங்கையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் சுமார் 26 ஆயிரம் கோடிரூபாய் நேரடி முதலீடு செய்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. ஓமன் நிறுவனமொன்று பின் வாங்கிய நிலையில் ஒரே முதலீடாக 385 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடாக வந்திருப்பது கடந்த செவ்வாயன்று வெளியாகியிருக்கிறது   

Silver Park International, named by the BOI, is registered with Singapore’s national regulator Accounting and Corporate Regulatory Authority (ACRA), with three of its four directors — Jegath Rakshagan Sundeep Anand, Jagathrakshakan Sri Nisha and Jagathrakshakan Anusuya – listed with a Chennai address. They are the son, daughter and wife of Mr. Jagathrakshakan, who is the DMK’s Arakonam Lok Sabha candidate. “We are aware of the Singapore company’s links to an Indian business interest. The agreement has been signed by one Mr. Jagathrakshakan,” a senior government source in Colombo told The Hindu, requesting anonymity.


அரசியலில் துரோகங்கள் கூட நன்மைக்கே என்று முகநூலில் விஜயகுமார் அருணகிரி என்பவர்  எழுதி இருக்கிற பகிர்வு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. முழுதும் கீழே   
1998 லோக்சபா தேர்தல் . திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அப்பொழுது புதிதாக திமுகவில் இணைந்து இருந்த சரத்குமார் வேட்பாளராக போட்டியிட்டார்.அதிமுக பக்கம் இருக்கும் நாடார் ஓட்டுக்களை திமுகவுக்கு கொண்டு வர நினைத்த கருணாநிதி சரத்குமாருக்கு சீட் கொடுத்து இருந்தார்.
அதிமுக சார்பில் கடம்பூர் ஜனார்த்தனம் போட்டியிட்டார்.நமக்கு தெரிந்த நாடார் இன நண்பர்கள் அனைவரும்சரத்குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார்கள்அப்பொழுது நான் திமுக அனுதாபியாக இருந்தாலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவே இருந்தேன்..காரணம் சரத்குமார் கனிமொழி இவர்கள் எல்லாம் கழிசடைகள் .இவர்களுக்கு சாதி ரீதியாக ஆதரவு அளிப்பது இந்த சமுதாயத்திற்கு நாம் செய்யும் தீங்காகும் என்பது என்னுடைய நிலைப்பாடு. நம்மால் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருக்க வேண்டும் .இதற்காக சரத்குமார் மாதிரி ஆட்க ளைஜெயிக்க விடக் கூடாது என்றே நான் எங்கள்பகுதி நாடார் இன நண்பர்களிடம் கூறுவேன்
.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெ ற்று முடிவுகள் வெளி வந்து கொண்டு இருந்தது திருநெல்வேலி தொகுதியில் சரத்குமார் முன்னிலை என்றே அப்பொழுது வானொலியில.கூறிக்கொண்டு இருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் என்னிடம் பாருய்யா .. சரத்குமார் ஜெயிச்சாச்சு என்று என்னிடம் வம்பிழுக்க பொறுங்கப்பா..தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி ஒட்டு இன்னும் எண்ணவில்லை என்றேன்.
தூத்துக்குடி ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதிமுக வின் கடம்பூர்ஜனாரத்தனம் முன்னிலைக்கு வந்தார். இறுதியில் 6904 ஓட்டுக்கள் வித்தியாச த்தில் சரத்குமார் தோல்வி அடைந்தார்.எனக்கு சந்தோசமாக இருந்தது  உடன் இருந்த நண்பர்கள்என்னிடம் கடுமையாக சண்டைக்கு நின்றார்கள்.
கடைசியில் சரத்குமார் என்னை தோற்கடித்தது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமிதான் என்று பகிங்கரமாகவே குற்றம் சாட்டினார் எனக்கு பெரியசாமியை பிடிக்காது என்றாலும் சரத்குமாரை தோற்கடித்தன் மூலமாக பெரியசாமிக்கு தேங்க்ஸ் கூறிக்கொண்டேன்.
சரிப்பா இப்பொழுது எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா? தூத்துக்குடி அரசியலில் தன்னை தவிர வேறு யாரையும் அரசியல் செய்ய விட மாட்டார் பெரிய சாமி. தந்தை வழியில் கீதா ஜீவனும் தூத்துக்குடியில் திமுகவை அவர்களின் குடும்ப சொத்தாகவே வைத்து இருக்கிறார்.
2004 லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டர் தான். அதனை முன் வைத்து கருணாநிதி ஆடிய அரசியல் ஆட்டத்தினால் தான் நாடார்கள் அதிமுக ஆதரவு நிலை யில் இருந்து திமுக பக்கமாக திரும்பினார்கள்.
அப்பொழுது திமுகவில் உறுப்பினராக ஏன் அனுதாபியாக கூட இல்லாத வெங்கடேச பண்ணையாரின்மனைவியான ராதிகா செல்வியை திருச்செந்தூர் லோக்சபா தொகுதியின் வேட்பாளாராக்கி நாடார் வாக்குகளை திமுக பக்கம் திருப்பிக் கொண்டார் கருணாநிதி.
வெற்றி பெற்ற ராதிகா செல்வியை மத்திய மந்திரியாக்கி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவை வளர்த்து கொண்டார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது ராதிகா செல்வி எங்கே? காரியம் நிறைவேறிய உடன் கழற்றி விட்டு விட்டார்கள்.  தூத்துக்குடி மாவட்ட திமுகஅரசியலில் பெரிய சாமி குடும்பத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இதற்கு உதாரணமாக ஜெனிபர் சந்திரன் ராதிகாசெல்வி என்று திமுகவில் உச்சத்தில் இருந்து பெரிய சாமி குடும்பத்தினால் திமுகவில் இருந்துவிரட்டப் பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதனால் கனிமொழியை தூத்துக்குடி மாவட்ட அரசியலில் வேரூன்ற விட பெரியசாமி குடும்பம் நிச்சயமாக விட மாட்டார்கள். கனி மொழியை கவிழ்த்துவிடவே பார்ப்பார்கள். இது அவர்களின் எதிர் கால அரசியலுக்கு மட்டுமல்ல
ஸ்டாலினின் எதிர்கால அரசியலுக்கும் பயன்படும் என்பதால் நிச்சயமாக கனிமொழியை தோற்கடிக்க ஸ்டாலின் துணை நிற்பார்.
ஏம்ப்பா அந்த அளவிற்கா ஸ்டாலினுக்கு அறிவு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஸ்டாலின் சும்மா டம்மி. துர்கா ஸ்டாலின் தான் திமுகவின் இப்போதைய மம்மி. திமுகவில் இனி தன்னுடைய குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைமை பதவிக்கு வந்து விடக் கூடாது என்று  நினைக்கும் துர்கா ஸ்டாலின் கீதா ஜீவன் மூலமாக கனிமொழியின் அரசியல் வாழ்க்கையை முடித்து விடுவார்.
தூத்துக்குடி மாவட்ட அரசியல் துரோகங்கள் நிறைந்த வரலாற்றைக்கொண்டது. வேண்டும்என்றால் சரத்குமாரிடம் கேட்டு பாருங்கள். எப்படி கருணாநிதி பெரியசாமி மூலமாக தன்னை தோற்கடித்தார் என்று விரிவாக கூறுவார். இன்றைய திமுகவில் கருணாநிதியின் இடத்தை நிரப்பிக் கொண்டு இருப்பது துர்கா ஸ்டாலின்தான்.
அதனால் மீண்டும் ஒரு துரோக வரலாற்றை தூத்துக்குடியில் பெரியசாமி குடும்பம் எழுத தயாராக காத்து இருக்கிறது. வரலாற்றில் பல துரோகங்களின் பயன்கள் நன்மையாகவே  முடிந்துள்ளது. அந்த வகையில் கனிமொழியின்  தோல்வியினால் இந்த தேசத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய நன்மை விளையும்.
அதனால் நாடார் இன நண்பர்களே! சாதி உணர்வுகள் இருக்கலாம். அதற்காக கனிமொழி சரத்குமார் மாதிரி கழிசடைகளை ஆதரிப்பது இந்த நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.எனக்கு என்னுடைய இனத்தை விட என்னுடைய தேசமே தெய்வமாகும்.
முடிவாக என்னப்பா கூற வருகிறாய் என்றுகேட்கிறீர்களா.. மதம் என்பது நாம் அணிந்துள்ள மேல்சட்டை மாதிரி பளிச்சென்று தெரிய வேண்டு ம். ஆனால் சாதிஎன்பது உள்ளே அணிந்துள்ள கால்சட்டை(உள்ளாடை)  மாதிரிகண்ணுக்கு தெரியக்கூடாது. இருந்தாலும் கனிமொழி மாதிரி கழிசடைகளுக்கு எதிராக வேட்டியை வரிந்து கட்ட ஆரம்பித்ததால்  என்னுடையகால்சட்டையின் நிறம் தெரிய ஆரம்பித்துவிட்டது.
.
அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.தூத்துக்குடி யில் தேர்தல் முடியும் வரை இது மாதிரி சாதி சார்ந்த பதிவுகள் அடிக்கடி வரும்.அதற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள்.எனக்கு தேவை தூத்துக்குடியில் பிஜேபியின் வெற்றி!அதுவரை சாதி பின்புலம் இல்லாது  எதையும் எழுத முடியாது.. 
என்னுடைய லட்சியம் என்றுமே..இந்துவாக இருப்போம் இந்தியாவை காப்போம். என்பதே...

சரி, பதிவின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தது , இடையில் ஜகத் ரட்சகன் விவகாரம், அப்புறம் ஒரு முகநூல் பகிர்வு இவைகளுக்கிடையே என்ன சம்பந்தம்? எதைக்கழிப்பது? எதைத்தேர்வு செய்வது? என்று இதை வைத்து எப்படி முடிவு  செய்வது என்ற கேள்வி எழுகிறதா?

இப்போதுள்ள தேர்தல் முறையில், நல்லவர், வல்லவர் என்று பார்த்து எவரையும் தேர்ந்தெடுக்கிற சாய்ஸ் நமக்கு அளிக்கப்படவில்லை! போட்டியிடும்  நபர்களில் , ஆகக்  குறைவான மோசம்  ஒன்றைத் தேர்ந்தெடுக்க மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. அவசர அவசியசியமாகத் தேர்தல்முறையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுவது ஏன் என்பது புரிகிறதா?

அப்படிச் சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறவரை என்ன செய்வது? முதலில், விஷக்காளான்களாகப் பெருகிவரும் உதிரிக்கட்சிகளை தயவு தாட்சணியம் இல்லாமல் முற்றொட்டாக நிராகரிப்பது நல்ல தொடக்கம்.

அடுத்து, போட்டியிடுகிற பிரதான கட்சி வேட்பாளர்களில் அவரோ அவர் சார்ந்த கட்சியோ முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அல்லது ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் அவர்கள் செய்தது, செய்யத் தவறியது இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர், கட்சி இவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டுமே மோசம்  தானே என்றால், அதற்குத் தான் தூத்துக்குடி தொகுதியை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டது. கனிமொழி வெர்சஸ் தமிழிசை என்றிருப்பதில் இரண்டுபேருமே ஒரே அளவிலான மோசம்  இல்லை, கனிமொழிக்கு, தமிழிசை எவ்வளவோ மேல் என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது என்றால் உங்களுடைய அரசியல் தீர்மானம் வெற்றிபெற வாழ்த்துகள்!                            

2 comments:

  1. வாக்குகளை அள்ளட்டும்... தமிழிசையே வெல்லட்டும்!...
    ஹிந்துவாக இருப்போம்... இந்தியாவைக் காப்போம்!...

    ReplyDelete
    Replies
    1. //இப்போதுள்ள தேர்தல் முறையில், நல்லவர், வல்லவர் என்று பார்த்து எவரையும் தேர்ந்தெடுக்கிற சாய்ஸ் நமக்கு அளிக்கப்படவில்லை! போட்டியிடும் நபர்களில் , ஆகக் குறைவான மோசம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க மட்டுமே வாய்ப்பு இருக்கிறது//

      இந்தப்பகுதியைக் கவனித்தீர்களா துரை செல்வராஜூ சார்? கனிமொழியோடு ஒப்பிடும்போது தமிழிசை கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்! தமிழிசையை மதிப்பிட இதுவரை அவருக்கு வழங்கப்படாத ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)