Thursday, March 7, 2019

தடுமாறும் அரசியல்! தடம் மாறலாமா நாம்?

தேதிமுக! பாவம், துரைமுருகன் நேற்றைக்கு அடித்த தம்பட்டத்தில் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டிய கட்டாயம்! புதியதலைமுறை செய்தி வீடியோவில் எப்போதுமில்லாத விதத்தில், தேதிமுக விலாசம் காண்பிக்கப்படுவதில் உள்ளர்த்தம் ஏதாவது இருப்பதாக நினைத்தால், அது உங்கள் சௌகரியம்! தேதிமுகவுக்கு விலாசம் அப்படி ஒன்றும் காணாமல் போய்விடவில்லை என்று சொல்வதாகக் கூட  இருக்கலாம்!

புதியதலைமுறையில் தடுமாறும் தேதிமுக பின்னணி என்ன? என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.சினிமா பிரவேசம், 2005 இல் கட்சி ஆரம்பித்தது என்று  கொஞ்சம் சுவாரசியமான பழையதகவல்களுடன்! இருந்தென்ன பிரயோசனம்?


அசிங்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன்! சினிமா காமெடி ஆகவேண்டுமானால் இருக்கலாம்!நம்மூர்  அரசியலில், அசிங்கப்படுவதே ஒரு தனிப்பெரும் தகுதியாக வளர்ந்துகொண்டிருக்கிற சீரழிவில் இன்னுமொன்று என்று தாண்டிப்போய் விடுவோமா? போவோமானால் , அது சரிதானா?     

Venkatesh Rathakrishnan  9 மணி நேரம்தினமலர் நிர்வாக ஆசிரியர்  முகநூலில சொன்னது இது · 
பிம்பங்களும் யதார்த்தங்களும்
----------------------------------------------------------
நேற்று மாலை மோடியின் பிரசார உரையை ஒட்டி, புதிய தலைமுறை தொலைக்காட்சி நேரலையில் உட்கார்ந்திருந்தேன். எண்ணற்ற விஷயங்கள் என் மனத்தில் அலைமோதத் தொடங்கின. கட்டமைக்கப்படும் பிம்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே இருக்கும் வேறுபாடு என்னை ஆச்சரியப்படுத்தின.
1. பா.ஜ.க. ஒரு தீண்டத்தகாத மதவாத கட்சி. அவர்களோடு யாரும் கூட்டணி வைக்க தயங்குவார்கள், கூட்டணி கிடைக்காது. 

யதார்த்தம் : பா.ஜ.க.வோடு குறைந்தபட்சம் 6 கட்சிகளும் இயக்கங்களும் கூட்டணி கண்டிருக்கின்றன.
2.கழகங்கள் இல்லாத ஆட்சியே எங்கள் லட்சியம்.

யதார்த்தம் : கழகம் ஒன்றின் தோளில் உட்கார்ந்துகொண்டு, கூட்டணியோடுதான் தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க.
3. தமிழகத்துக்கு பா.ஜ.க. அரசு என்ன செய்தது?

யதார்த்தம் : நேற்றுகூட 5,100 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன, தொடங்கப்பட்டு இருக்கின்றன.
4. கழகங்களை நோக்கி விமர்சனங்களைக் கொட்டிய எச். ராஜா வாயால், 

நேற்று கழகத்தின் புகழ்மொழி ஒலித்தது இன்னொரு யதார்த்தம்.  

முகநூலில் சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் சரியான புள்ளியில் சிந்திக்க உதவுகிறார்! 
Banu Gomes 5 மணி நேரம்
மோடியை விரட்டுவதே எங்கள் லட்சியம் / கொள்கை என்று தமிழகத்தின் எதிர் கூட்டணி கூறுவது பெரும் வேடிக்கை.
மோடியை அகற்றுவது என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
த்தியில்..எதிர் கூட்டணியின் UPA ஆட்சி எந்த விதத்தில் மோடியின் ஆட்சியை விட சிறந்ததாக இருந்தது ?
ஊழல்களை கட்டுப்படுத்திய ஆட்சியாக இருந்ததா ? அல்லது...எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதாக இருந்ததா ?
168 பேர் கொல்லப் பட்ட மும்பை தாக்குதல் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை UPA ஆட்சி எதிர்கொண்ட விதம் எப்படி இருந்தது ?
நாட்டின் அதிகார அமைப்புகள் ஒவ்வொன்றையும் தங்கள் அரசியல் மனிதர்களைக் கொண்டு நிரப்பி ..அமைப்பின் செயல்பாடுகளை நியாயமற்றதாக வைத்திருந்ததை என்னெவென்று சொல்வது ?
UPA ஆட்சி காலத்தில் ...ஊழல் வழக்குகள், VVIP, VIP, High profile வழக்குகளில் ...நீதித்துறையின் தீர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தன ?
சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைகள் அனைத்தும் ''ஊழல் நடந்ததிருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் உடைய ஊழல் வழக்குகளில்''...நீதிமன்ற ஜாமீனில் தானே இருக்கிறார்கள் ?
மத்திய நிலையை கூட விட்டுவிடுவோம்.
மாநில அளவில் ..UPA ன் dmk + cong கூட்டணி ஆட்சியால் தமிழகத்திற்கு விளைந்த நன்மை தான் என்ன ????
துரோகங்கள் என்னென்ன ??
அ.தி.மு.க கூட்டணி & தி.மு.க கூட்டணி ...இவ்விரண்டில்..
தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டுவருவதன் மூலமும் & நீண்ட கால பிரச்சினைகளை தீர்த்திருப்பதன் மூலமும் & பிற செயல்பாடுகளின் மூலமும்... நன்மைகளை செய்திருக்கிற கட்சிகளை கொண்ட கூட்டணி எது ?
எதிர் கூட்டணி ..தாங்கள் எந்த விதத்தில் ஆளும் கூட்டணியை விட மேல் என்பதை பேச முடியாமல் இருப்பதே உண்மை நிலை !   

வாக்களிப்பதற்கு முன்னால், யோசிக்க வேண்டிய விஷயங்கள், 

வெறுப்பரசியல் பேசுகிறவர்களுடைய உள்நோக்கம் என்ன?

இவர்கள் ஆட்சிசெய்யக் கிடைத்த காலங்களில் செய்தது, செய்யத்தவறியவைகளோடு ஒப்பிட்டால்  நரேந்திர மோடிக்கு இன்னொரு வாய்ப்பைத் தருவதில் தவறென்ன?           

6 comments:

  1. இன்றைக்கு பல்வேறு சேனல்களில் பார்த்ததில், விஜயகாந்த் ஒரு தடவை முதல்வர் ஜெ.வைப் பற்றியும் கவர்னரைப் பற்றியும், இருவரும் வீல் சேரில் முதுமைல இருக்காங்க, தான் அப்படி இல்லை என்று பேசுவதைக் காண்பித்தார்கள். நிச்சயம் அதனை விஜயகாந்த் பார்த்து மனதுக்குள் அழுதிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. பாவம்! வெள்ளந்தியான மனிதர்!

      Delete
  2. //மோடியை விரட்டுவதே எங்கள் லட்சியம் / கொள்கை // - பொதுவா திருடர்களுக்கு நேர்மையான போலீஸ் அதிகாரியை எவ்வளவு தூரம் பிடிக்கும்? தமிழகத்தில் இப்போது நடப்பது, ஊழல்களைச் செய்து எப்படி பணத்தைப் பாதுகாப்பது, எப்படி போலி மதச் சார்பின்மை பேசி மாற்று மதத்தவர்களின் வாக்குகளை அறுவடை செய்வது என்ற ஒற்றை அஜெண்டாதான். நாளைக்கே வாய்ப்பு வந்தால் (ஏற்கனவே வாய்ப்பு வந்தது போல), யாருடனும் சேர யாரும் தயங்க மாட்டார்கள். நான் சொல்வதை, ராஜபக்‌ஷேயுடன் டிபன் சாப்பிட்டு பரிசில் பெற்றுவந்த திமுக, விசிக, இலங்கைத் தமிழர்களின் அழிப்புக்குக் காரணமான காங்கிரஸ், அதற்கு ஜால்ரா போடும்/போட்ட திமுக, மதிமுக போன்ற எந்தக் கட்சிகளுமே மறுக்காது.

    ReplyDelete
    Replies
    1. இரண்டே வார்த்தைகளில் காசேதான் கடவுளடா! :)))

      Delete
  3. இப்போது ஒரு வீடியோ பார்த்தேன். அர்னாப் நிகழ்ச்சியில் ஒருவர் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என்கிறார். அடுத்த நொடிக்கும் குறைவான நேரத்தில் அர்னாப் அவரை "வெளியே போ இந்த இடத்தை விட்டு" என்கிறார் கடும் கோபத்துடன்.

    ReplyDelete
  4. ஷோ காட்டிக்கொள்ளச் செய்திருந்தாலும் கூட, நல்ல விஷயம்! உள்ளூர்க் கூத்திலேயே கவனமிருப்பதால் அர்னாப் டிவி பக்கம் போக நேரமே கிடைப்பதில்லை ஸ்ரீராம்!

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)