Friday, March 8, 2019

அடுத்தவீடு! ஆந்திரா! தெலங்கானா!

நமக்கு அடுத்தவீடான ஆந்திர சினிமாவும் சரி அரசியலும் சரி, நிறையவே வித்தியாசமான பரிமாணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே இன்று வெள்ளிக் கிழமைப் பதிவாக சில சுவாரசியமான செய்திகள்!


விஜய் தேவரகொண்டா! பெல்லி சூப்புலு படம் பார்த்த நாளிலிருந்து நான் இந்த இளம்நடிகனின் ரசிகன்! நான் மட்டும் தானா?  இவருக்கு தெலுகு மொழி, ஏரியாவைக் கடந்து, தமிழ்நாடு, கேரளாவிலும் இளம் ரசிகைகள் ஏராளம் என்கிறது திரைப்பட வட்டாரம்! இவர் நடித்த காம்ரேட் திரைப்படத்தின் டீசர் வருகிற 17 அன்று வெளியாகவுள்ளதாக, இந்தப்போஸ்டர் சொல்கிறது!

டியர் காம்ரேட்  என்று தெலுகு, தமிழ், கன்னடம், மலையாளம் நான்கு மொழிகளிலும் வெளியாவதாக, ஒரு கோடி காட்டப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? முதலில், ஹிந்தியிலும் இந்தப்படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுவதாக ஒரு தகவலும், மறுத்து விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் தனது என்ட்ரி டப்பிங் செய்யப்பட படமாக இருக்கவேண்டாம் என இன்னொரு தகவலும் டோலிவுட் வட்டாரத்தில் கசிகிறதாம்!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம்! மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை  முடிவுக்கு கொண்டுவந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்! சந்திரபாபு நாயுடு தன்னுடைய கடந்தகாலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை சேவா மித்ரா app விவகாரத்தில் YSR காங்கிரஸ்கட்சித் தலைவர் YS ஜெகன் மோகன் நிரூபித்திருக்கிறார். 

இந்த app வழியாகத் திரட்டப்படும் விவரங்கள் தனியாருக்கு விற்கப்பட்டதாக, எதிராக வாக்களிக்கும் மனோநிலையில் உள்ளவர்களைக் கண்டறிய முயற்சிப்பதாகக் குறை சொல்லி ஜெகன் ஜனங்களிடம் பிரசாரம், கவர்னரிடம் மனு என்று சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திருப்பதில், பத்துநாட்களாக சந்திர பாபு நாயுடு இதற்குப் பதில் சொல்லியே ஓய்ந்து விட்டார்! இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பது மெத்தக் கடினம் என்பதோ விசாரணை என்பது நீண்ட காலத்துக்கு நீண்டுகொண்டே போவது என்பதோ ஜனங்களுக்குத் தெரியாது, அவர்களுக்குக் கவலையும் இல்லை! The fact is that the Voters are least bothered about this. Even the majority among educated did not know what really issue is. And the masses just do not care or understand this. It looks like YS Jagan Mohan Reddy and KCR cleverly laid a trap and Chandrababu walked straight into it and was occupied with this issue for last 10 days என்கிறது மிர்ச்சி9 செய்தி! 

Data Breach Case விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் KCR, மற்றும் YSR காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் இருவரும் சந்திரபாபு நாயுடுவை பீட் செய்துவிட்டதாகவும் செய்தி வருகிற அதேவேளையில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படம் லட்சுமியின் NTR  வருகிற 22 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.  
    

ஏற்கெனெவே NT ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா சொந்தமாகத் தயாரித்து வெளியிட்ட NTR கதாநாயகுடு, NTR மகாநாயகுடு இரண்டு படங்களும் ஊற்றிக் கொண்ட பிறகு மூன்றாவதாக, அதே  NT ராமாராவின் கதையைப் படமாக எடுத்தால் தெலுகு சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்குமா? படம் ரிலீசுக்கு முன்னாடியே தோல்வியா? என்ற கேள்விகளுக்கான விடைகளை டோலிவுட் வட்டாரம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறதோ? இதற்கு ffinance செய்திருப்பதே YS ஜெகன்மோகன் ரெட்டி தான் என்று சத்தமாகவே கேட்கிறது! 

இங்கே தமிழ்நாட்டில் என்னடாவென்றால், ரசிகர்கள் அரசியல் புனித பிம்பங்கள் கலைக்கப்படுவதில் ஆர்வமே இல்லாதமாதிரி! அல்லது உள்ளது உள்ளபடிக்கே  திரைப்படமாக எடுப்பதற்கு தைரியமில்லாத இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்!  

அந்தநாட்களில் மணிரத்னம் பூசி மெழுகி எடுத்த இருவர் திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? 

          
தொடர்புடைய பதிவு 

புதன்கிழமை! படத்தில் ஹீரோ! நிஜத்தில்....?

            

2 comments:

 1. இருவர் நல்லாவே நினைவில் இருக்கிறது! அர்ஜுன் ரெட்டி படம் இந்த நடிகர் நடித்ததுதானே? அமேசானிலிருக்கிறது. இன்னும் பார்க்க பொறுமை வரவில்லை!

  என் டி ஆர் பற்றி அவர் மகன் நடித்த படம் சூப்பர் ஹிட் என்றார்களே, இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்! இருவரில் பிரகாஸ்ராஜ் பாத்திரத்தை எத்தனை பயந்து, பூசி மெழுகி எடுத்திருந்தார் என்பதும் ஞாபகம் வருகிறதா?

   அர்ஜுன் ரெட்டி பார்க்கவேண்டியபடம்!

   NTR கதை போணியாகாததைப்பற்றி ஒரு பதிவிலேயே சொல்லியிருந்தேனே ஸ்ரீராம்!

   Delete