Monday, March 18, 2019

ரங்கராஜ் பாண்டே! அடடே!மதி! கமல் காசர் கட்சி!

ரங்கராஜ் பாண்டே சாணக்யா என்ற ஊடகம் வழியாக நேற்று மாலை  நேரலையில் நேயர்கள்எழுப்பிய பல கேள்விகளுக்குக் கொஞ்சமும் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் பதிலளித்ததைப் பற்றி முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா?
யூட்யூபில் உடனடியாக வலையேற்றமும் ஆகிவிட்டது. நிகழ்ச்சியைத் தவறவிட்டவர்களுக்காக இங்கேயும்! 
தற்போது சாணக்யா என்று புதிதாக சேனல் ஒன்றினை பாண்டே தொடங்கி இருக்கிறார் இந்த முறை வாசகர்களை எப்போதும் தொடர்பில் இருக்கும் விதமாக சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யும் விதமாக தனது சாணக்யா எனும் புது செய்தி சேனலை தொடங்கி இருக்கிறார். தற்போது சமூகவலைத்தளங்களில் செயல்படும் இந்த சேனலானது விரைவில் சாட்டிலைட் சேனலாக உருமாற வேலைகள் அனைத்தும் நடைபெறுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்கிறது tnnews24.com செய்தி ஒன்று! வாழ்த்துவோம்!  
அடடே! மதி எனக்குப் பிடித்தமான கார்டூனிஸ்ட்களில் ஒருவர்! கூகிள் பிளஸ்சில் அவருடைய கார்டூன்களைப் பகிர்ந்து கொண்டிருந்ததில் அமீரகப் பதிவர்கள் சிலர் மட்டும் தங்களுடைய அதிருப்தியை, நையாண்டியைத் தொடர்ந்து ஆஜராகிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள்! ஏனென்று தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?!!  இதே நபர்கள் கமல் காசர் உன்னைப்போல் ஒருவன் என்றொரு படமெடுத்தபோதும் கூட கண்டனப்பதிவுகள் எழுதி,கொஞ்சகாலம் கழித்து ஒன்றுபோல அவைகளை நீக்கவும்  செய்தார்கள் என்பதும் அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பதன் அளவுகோலாகவும் இருக்கிறது என்றுதான் எனக்குப் படுகிறது.

இந்தக் கார்டூனில் ரஜனியின் அரசியல் பிரவேசம் குறித்துச் சொல்லியிருப்பதில் என்ன தவறு? இதை விட அடடே ! மதியை அவருடைய கார்டூன்களில் மீண்டும் சந்திக்க முடிவதில் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! மதியை மனமுவந்து வாழ்த்துவோம்!

கமல் கட்சிக்கு சிக்கல்.நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் புதிய சிக்கலில் மாட்டியுள்ளது #Kamal#Election2019 #Chanakyaa இதுவும் கூட வரவேற்கப்பட செய்திகளின் பட்டியலில் ஒன்றாக!

ஊழல் என்பது பணப் பரிமாற்றம் சார்ந்தது மட்டும் அல்ல. குறிப்பாக... அரசியல் ஊழல் என்பது ..பார்ப்பனீயம் & மதசார்பற்ற & முற்போக்கு & ஊழல் எதிர்ப்பு & சாதிய எதிர்ப்பு..என்று பல வார்த்தைகளின் பெயரால் நடக்கிற ஊழல்களையும் உள்ளடக்கியது.
பார்ப்பனீயதுக்கு எதிரான கூட்டணி என்று கூறிக் கொண்டு .. ஒவ்வொரு முறையும்.. set properties ஆன குறுநில மன்னர்களும், வாரிசுகளும் தான் வேட்பாளர்கள். இது...அதிகாரத்தை விட்டுத்தராமல் ..அனைவருக்கும் பகிர்ந்தளிக்காமல் ..தன்னிடமே வைத்துக் கொள்ளும் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலின் ஊழல்!
சுயமரியாதைக்கு patent right வைத்திருப்பவர்கள் போல காட்டிக் கொண்டு அரசியல் மேடைகளில் சுயமரியாதை முழக்கமிடுபர்கள்.. தங்கள் கட்சியின் சின்னத்தில் கூட போட்டியிடாமல் ...இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் விநோதங்கள். இது.. சுயமரியாதை அரசியலின் ஊழல்!
மதசார்பற்ற கூட்டணி என்று கூறிக் கொண்டு.. மதத்தின் பெயரால் இயங்கும் கட்சிகளுடன் கூட்டணி + தொகுதிக்கு ஏற்ப 'மதம் சார்ந்து' வேட்பாளரை நிறுத்துவது. இது..மதசார்பற்ற அரசியலின் ஊழல்!
முற்போக்கு கூட்டணி என்று கூறிக் கொண்டு ..தொகுதிக்கு ஏற்ப ..'சாதி சார்ந்து' வேட்பாளரை நிறுத்துவது. இது...முற்போக்கு அரசியலின் ஊழல்!
பெண்ணுரிமை காவலர்கள் என்று கூறிக் கொண்டு ...பெண் வாரிசுகளுக்கு மட்டுமே வேட்பாளர் வாய்ப்பை வழங்குவது + ஆண் வேட்பாளர்களுக்கு சமமான எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தாதது ...பெண்ணுரிமை அரசியலின் ஊழல்!
ஊழலை எதிர்க்கும் கூட்டணி என்று கூறிக் கொண்டு.. இந்தியா தாண்டி.. உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்த ஊழல் வழக்குகளில்.. நேரடியாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி..வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களை..மீண்டும் வேட்பாளர்களாக அறிவித்து ..''ஆம் அப்படிதான் நடந்து கொள்வோம்'' என்பது போன்று மக்களை நோக்கி சவால் விடும் வகையிலான அசாத்திய அரசியல். இது..அனைத்திற்கும் மேலான.. ஆகப் பெரும் அரசியல் ஊழல்!

இவர்களை முற்றொட்டாக நிராகரிக்கவேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தி எழுதிக்கொண்டிருப்பது ஏனென்று புரிகிறதா? 

கூடவே என்ன செய்யவேண்டுமென்கிற தெளிவும் வருகிறதா?

6 comments:

  1. "இந்தக் கார்டூனில் ரஜனியின் அரசியல் பிரவேசம் குறித்துச் சொல்லியிருப்பதில் என்ன தவறு?"

    சார் ரஜினி யாரை எப்படி ஏமாற்றினார் என்று கூறுங்கள்? இந்த கார்ட்டூனில் உள்ளது போல அவர் யாரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றினார்?

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூனை கவனித்துப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு அதிலேயே பதிலும் இருக்கிறது!

      Delete
    2. ரஜினி அரசியல் காட்டி ஏமாற்றி அழைத்து வருவதாக கார்ட்டூனில் உள்ளது. அவர் 2017 டிசம்பர் 31 வரை தான் அரசியலுக்கு வருவதாக கூறவில்லை.

      ஊடகங்கள் தங்களுடைய விற்பனைக்காக கூறிக்கொண்டதை ரஜினி ஏமாற்றி அழைத்து வருகிறார் என்பதாக கார்ட்டூனில் உள்ளது எப்படி சரியாகும்?

      Delete
    3. இந்தக் கேள்வியை ரஜனி ஆரம்பித்த மக்கள் மன்றத்தினரிடமே கெட்டப் பாருங்களேன்!

      Delete
    4. இது சரியான பதில் இல்லையே சார்! யாராக இருந்தாலும் அவரவர் நினைத்துக்கொள்வதற்கு ரஜினி என்ன செய்ய முடியும்?!

      anyhow உங்கள் அரசியல் கட்டுரைகள் நன்றாக உள்ளது. உங்கள் பதிவுகளில் இருந்து தான் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

      நிறைய YouTube பார்ப்பீங்க போல :-) . ரொம்ப பொறுமை வேண்டும்.

      தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete
    5. அப்படி நினைப்பதற்கு இடம் கொடுத்ததே ரஜனிதானே!

      திரு .கிரி, ரஜனியின் அரசியல் வாய்ஸ் பற்றி எனக்கு ஒருவிதத்தில் கேலியான அபிப்பிராயம் மட்டுமே முத்து படம் வெளிவந்தநாட்களில் இருந்தே இருப்பதால், இதை வளர்க்கவேண்டாமே! அரசியலில் சினிமாநடிகர்கள் முதல்வர் கனவுடன் நுழைவதில் சற்றும் உடன்பாடு இல்லாத நிலை என்னுடையது.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)