Monday, April 1, 2019

புலி வேட்டை முடியாதா? வா, எலிவேட்டையாடலாம்! இது காங்கிரஸ் கதை!

2019 தேர்தல் கூத்துக்களில் பாட்னாவில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதுமே வில்லன் நடிகர் சத்ருகன் சின்ஹா, பிஜேபியிலிருந்து விலகி காங்கிரசில் ஐக்கியமாகி விட்டார்.
ஐக்கியமானதன் அடையாளமாக ஏதாவது உளறி இருக்கவேண்டுமே! ட்வீட்டரில் உளறியிருக்கிறார்!

11:07 AM - 1 Apr 2019 
  

CPI State secretary Kanam Rajendran said that Rahul Gandhi is one among the UDF's 20 candidates contesting the polls and his candidature does not have much significance in Kerala's political scenario. Speaking to Mathrubhumi News, Kanam Rajendran said that Wayanad's LDF candidate PP Suneer who was campaigning unilaterally has now got a rival in the constituency following Rahul Gandhi's candidature. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) கேரளமாநிலச் செயலாளர் காணம் ராஜேந்திரன் சற்றே சுதாரித்துக் கொண்டு ராகுல் காண்டி UDF காங்கிரஸ் கூட்டணியின் 20 வேட்பாளர்களில் ஒருவர் என்பதற்கு மேல் வேறெந்த முக்கியத்துவமும் இல்லை என்று சொல்கிறார். அப்படியானால் D ராஜா, பிரகாஷ் காரத், பிணராயி விஜயன் எல்லோரும் நேற்று பிற்பகல் தனித்  தனியாகப் பொங்கியதெல்லாம்??


2009 இலிருந்து மக்களவைத் தொகுதியான வயநாடு 2009, 2014 என்று இதுவரை இரண்டே தேர்தல்களைத்தான் சந்தித்திருக்கிறது.காங்கிரஸ் தான் ஜெயித்திருக்கிறது என்றாலும் 2016 சட்டசபைத் தேர்தல்கள் அடிப்படையில் பார்த்தால் இடதுமுன்னணிக்கும் காங்கிரஸ் முன்னணிக்கும்  வாக்கு வித்தியாசம் ஒன்றும் அதிகமாக இல்லை.

பிரதமராகக் கூடிய வாய்ப்புள்ள வேட்பாளரா ராகுல் காண்டி? அப்படியிருந்தால் மல்லுசனம் கூடிநின்று அவரைத் தேர்ந்தெடுக்கும். ஆனால் காங்கிரஸ் தனித்து 100 சீட் கெலிக்குமா என்பதே தெரியாத நிலையில், மல்லு சனம் என்ன மாதிரி முடிவெடுக்குமாம்? 2014 இல் CPI வேட்பாளரை காங்கிரஸ் வெறும் 20000 ஓட்டுக்களில் தானே ஜெயித்தது? 2016 சட்டசபைத் தேர்தல்களில் தொகுதியின் ஓட்டுக்களை பெருவாரியாக LDF தானே பெற்றது என்ற கணக்குகள் எல்லாம் பழைய கனவு! ஒரு VIP வேட்பாளர் என்று வரும்போது உள்ளூர் நிலவரங்கள் எல்லாம் செல்லுபடியாகாதே, என்ன செய்ய?   


பெண்கள் மனதிலிருப்பதைக்கூடக் கண்டுபிடித்து விட முடியும்! மல்லுசனத்தை கணிப்பது கடினம். ஆனால் காங்கிரசின் கணக்கே வேறு என்கிறது மனோரமா. இந்தத் தேர்தலில்  CPI, CPIM இரண்டுமே தங்களுடைய தேசீயக்கட்சி பாவலாவைக் காப்பாற்றிக் கொள்ள மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இப்போதுள்ள நிலவரப்படி CPIM கட்சிக்கு 9 எம்பிக்கள் CPI கட்சிக்கு ஒரே ஒரு எம்பி சதவீதக்கணக்கில் சொல்ல வேண்டுமானால் மார்க்சிஸ்டுகள் 1.72% CPI 0.19% என்று இருப்பதைக் கூட வருகிற நாடாளுமன்றத் தேர்தல்களில் காப்பாற்றிக் கொள்ள முடியாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி கட்டெறும்பும் தேய்ந்து சிற்றெறும்பாகிக் குறுகிக் கொண்டே வருவதுதான் இந்திய இடதுசாரிகளின் பரிதாபமான நிலைமை. அதற்கு காங்கிரசைக்  குறை சொல்லி என்ன பயன்? 

புலி (பிஜேபி) வேட்டையாட முடியாத காங்கிரஸ், எலி (இடதுகள்) வேட்டைக்குத் தயாராகிவிட்டது!

அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது! 

அமேதி போயாச்சு வயநாடு வந்ததே! டும் டும் டும்!

     
                  

2 comments:

  1. என் கணிப்பு, அமேதியிலும் ராகுல் 1.5 லட்சத்துக்கு மேல் வெற்றிபெறுவார். வயநாட்டில், குறைந்தது 50,000 க்குமேல் வெற்றிவித்தியாசம் இருக்கும் (கம்யூ போட்டியிட்டால். ஒருவேளை அவர்கள் வாபஸ் வாங்க வாய்ப்பு இருக்கு..பார்க்கலாம்)

    ReplyDelete
    Replies
    1. அமேதி நிலைமை கொஞ்சம் சிக்கல் தான்! photo finish என்று வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் வயநாடு தொகுதியில் நல்ல மார்ஜினில் ஜெயிப்பது சாத்தியமே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)