Tuesday, May 7, 2019

குரங்குக்கு புத்தி சொன்ன தூக்கணாங்குருவி கதை தெரியுமோ?

இந்து தமிழ்திசை இன்றைய நாளிதழின் தலையங்கத்தைப் படித்தபோது கொஞ்சம் வேடிக்கை, நிறைய சிரிப்பாக இருந்ததை மறைக்க முடியாது. ராகுலுக்கு புத்தி சொல்கிற அளவுக்கு இந்துவுக்கு தைரியம் வந்துவிட்டதா? அப்படியே சொன்னாலும் கேட்டுக் கொள்கிற பதவிசு உள்ள பரம்பரையா அது? இந்திரா பரம்பரையைவிட திமிர் பிடித்த இத்தாலிய பரம்பரை அல்லவா அது என்கிற ஞானம் கூட இல்லாமல்! புத்தி சொல்கிறார்களாம், யாருக்கு?  

கருப்பில் இருப்பது இந்து நாளிதழின் மழுப்பல் (தலையில்லாத) முண்ட அங்கம்! சிவப்பில் இருப்பது என்னுடைய வாசக எதிர்வினை!  
  

நீதிமன்றங்கள் மீதான மதிப்பு என்பது சாமானிய மக்கள் இந்நாட்டின் அரசமைப்பு மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை என்று சொல்லத்தக்க அளவுக்கு மக்களின் வாழ்வோடும் உணர்வோடும் கலந்திருப்பது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கையை அரசியல்வாதிகள் மேலே கொண்டு செல்லா விட்டாலும் பரவாயில்லை; கீழே கொண்டுசெல்லாமல் இருப்பது நாட்டுக்கு அவர்கள் செய்யும் நன்மையாக அமையும். (இங்கே பொத்தாம்பொதுவாகப் பேசுவது எந்த ஊர் நியாயமோ? நீதி மன்றங்களைக் கிள்ளுக்கீரையாக மதிப்பது காங்கிரஸ் கலாசாரம்.   நான் ஏன் இவர்களுக்கெல்லாம்  பதில்சொல்லவேண்டும் என்ற மமதை சோனியா வாரிசுகளிடம் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதை ஏன் பூசி மெழுகவேண்டும்?) 
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்களைப் பிரசுரிப்பதற்குத் தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் திரித்து நீதிமன்றமே பிரதமர் மோடியை ‘திருடர்’ என்று கூறியதாக ராகுல் காந்தி சொன்னது கடும் விமர்சனமாக மாறியது. ஒரு பிரதமரைப் பார்த்து ‘திருடர்’ என்று ராகுல் எப்படி நிதானமற்றுப் பேசுகிறாரோ, அதுபோலவே மோடியின் விமர்சனங்களும் இருப்பதால், ‘ஒரு பிரதமர் இப்படித் தடம் இறங்கலாமா?’ என்று சலசலப்பு உருவாகியிருக்கிறது. ஆக, பிரதமர் மட்டுமல்ல, அவரை ஆட்சியிலிருந்து அகற்றத் துடிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரைப் போலவேதான் நடந்து கொள்கிறார். (தானிக்கித் தீனி சரியாப்போயிந்தி  தொடர்ந்து பொய்களையே பேசிவரும் ராகுல் காண்டியையும், பொய்யான விமரிசனங்களுக்குப் பதில் சொல்லும் பிரதமரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதுதான்  இந்துவின் நடுநிலை நக்கித்தனம்)  
போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகத் தங்கள் கட்சி கூறிவந்தது நிரூபணமாகியிருப்பதாகவும், ‘சௌகிதார் சோர் ஹை’ என்று உச்ச நீதிமன்றமே தனது ஆணை மூலம் தெரிவித்து விட்டது என்றும் பேசினார் ராகுல். “நீதிமன்றம் கூறாததைக் கூறியதாக  ராகுல் காந்தி பேசிவருவதால் அதை நீதிமன்ற அவமதிப்பாகவே கருத வேண்டும், ராகுல் தனது பேச்சைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்குதங்களது ஏற்ற உச்ச நீதிமன்றம் ராகுல் தன் பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எழுத்து மூலம் விளக்கம் அளித்த ராகுல், தேர்தல் பிரச்சார வேகத்தில் அப்படிப் பேசிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார். அப்போது ‘வருத்தம்’ என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருந்தார். ( வருத்தம் தெரிவிப்பதைக் கூட அலட்சியமாகச் செய்கிற மேட்டுக்குடி நாங்கள் என்ற மனோபாவம் இந்திரா காலத்தில் இருந்து தொடர்கிற அவலம்! நீதிமன்றங்களுமே தங்கள் காலடிக்கு கீழேதான் என்பதுதானே இங்கேயும்  வெளிப்பட்டிருக்கிறது?!)  
மீண்டும் இதை விசாரணைக்கு எடுத்தபோது, “உச்ச நீதிமன்றம் விளக்கம்தான் கேட்டது, நோட்டீஸ் அனுப்பவில்லை” என்று ராகுல் சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். “நோட்டீஸ் தானே வேண்டும், அனுப்பிவிடுகிறோம்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகோய் அதற்குப் பதில் அளித்தார். மேலும், “வருத்தம் என்று குறிப்பிடுவது மன்னிப்பு கோருவதாக ஆகி விடுமா?” என்றும் கேட்டார். (எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டுமென்பது தலைமை நீதிபதியின் கண்டிப்பு. 10 ஆம்  தேதி விசாரணையில் ராகுல் மண்டியிடுகிறாரா இல்லையா என்பது தெரிய வரும். ஆனால் நீதிமன்றங்களை ராகுலும் அவரது குடும்பமும் சற்றும் மதிப்பதில்லை என்பது இந்தவிவகாரத்தில் மிகவும் அதிகமாகவே வெளிப்பட்டிருக்கிறது.)    
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மீது கருத்து சொல்லும்போது ஒரு தேசியக் கட்சியின் தலைவர் பொறுப்போடும் கவனத்தோடும் நடந்துகொண்டிருக்க வேண்டும். தவறு நிகழ்ந்த பிறகாவது, அதற்கு முறையாக மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும். நாளைய இந்தியாவின் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களில் ஒருவரான ராகுல், இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தையும் அதன் உத்தரவையும் அணுகியிருக்கும் விதமானது நிச்சயம் அவரது தலைமைப் பண்புக்கு ஒரு கறையாகத்தான் விழுந்திருக்கிறது.
( தலைமைப்பண்பா? ஆளப்பிறந்தவர்கள் என்ற மமதையோடு திரிகிற இந்தக்குடும்பத்திடமா? இந்து நாளிதழ் சும்மா கிச்சுகிச்சு மூட்டிப் பார்க்கிறது. வேறென்ன?)    
தன்னுடைய தவறை மேலும் மேலும் நியாயப்படுத்துவதுபோல நீதிமன்றத்துக்கு உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாக அவர் பேசிவருவது எவ்வகையிலும் அவருக்குப் பெருமை தரத்தக்கது அல்ல என்பதோடு நீதித் துறையையும் கேலிக்கூத்தாக்குவதாகும்.  இது கடுமையான கண்டனத்துக்குரியது. (அப்பாடா! ஒருவழியா கண்டனம் தெரிவிச்சுட்டாங்க, அதுக்கே இந்து நாளிதழின் தைரியத்துக்கு ஒரு ஷொட்டு பலமாகக் கொடுத்துவிடலாம்!)  
ராகுலின் குடியுரிமை குறித்து எழுப்பப்படுகிற சந்தேகங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அவர் முயலவில்லை. தேர்தல் நேரத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை எவ்வளவோ இருக்க, பிரச்சாரம் தடம் புரளவும் தனிப்பட்ட தாக்குதலுக்கு வழிவகுக்கவுமே அவரது இந்த முன்யோசனையற்ற பேச்சுகள் வழிவகுக்கும். ( இப்படி ஒரு தலையில்லாத அங்கம் எழுதியதற்கு ஆணி புடுங்காமலேயே இருந்திருக்கலாமே என் ராமு!) 

இங்கே இந்து நாளிதழின் பதிப்புரிமையைச் சீண்டிப் பார்ப்பதற்காக வரிக்கு வரி அவர்களுடைய தலையங்கத்தை எடுத்துப்போட்டு, விமரிசனக்குறிப்பையும் அடைப்புக்குள் எழுதவில்லை. நேர்மையற்ற ஒரு ஊடகம் தலையங்கத்தில் உபதேசம் செய்தால் வாசக எதிர்வினை எப்படியிருக்கும் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே இந்தப்பதிவு.  

இங்கே நிறைய ஊடகங்களைக் காங்கிரஸ் கட்சி விலைக்கு வாங்கி விட்ட கதை 2004/2014 இந்தப்பத்தாண்டுகளிலேயே நடந்து முடிந்துவிட்டது. இங்கே தமிழகத்தில் சன் குழுமம் அந்த வேலையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்ற விவரம் என்னிடமில்லை.

ஆனால் தொழில்முறை ஊடகங்கள் நேர்மைதவறிப் போனாலும் இங்கே ட்வீட்டர் முதலான சமூக வலைத்தளங்கள் citizen journalism ரகத்தில் பொய்ச் செய்திகளைக் கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருப்பதை, எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம்.  
    
  

3 comments:

  1. ஹிந்து பத்திரிகை, காங்கிரஸ் கைக்கூலியாக மாறி எத்தனை வருடங்களாகிவிட்டது. அதனால் ஹிந்து பத்திரிகை மீது எனக்கு நல்ல அபிப்ராயமே இல்லை. அதனால் அவர்களது தலையங்கத்தில் எந்த அர்த்தத்தையும் நான் காணவில்லை. நேர்மையற்ற ஊடகம் ஹிந்து என்பதில் உண்மை இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஒரு குடும்பச் சொத்தாக இருந்த நிறுவனத்தில், இப்போது காங்கிரஸ் கட்சியின் முதலீடு அதிகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். என்ன நடக்கிறதென்பது சரியாகப்பிடிபடவில்லை.

      Delete
    2. //காங்கிரஸ் கட்சியின் முதலீடு // - இதுல அட்வாண்டேஜ், மத்திய அரசின் விளம்பரங்கள் நிறைய கிடைக்கும், முக்கிய பத்திரிகையாக மதிச்சு கூப்பிடுவாங்க, நிறைய வேலைகளைச் செய்துகொள்ளலாம்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)