Pages

Sunday, February 24, 2019

அரசியல் களம்! கூட்டணி பாவமா? பரிதாபமா?

தமிழக அரசியல்களம் முன்னெப்போதும் இதுமாதிரிப் பரிதாபங்களாக அங்கங்கே ரீல் அறுந்துபோய்க் கிடந்ததில்லை! அலுமினிய குவளையைப் பார்த்து தகர டபபா சத்தமாக இளிக்கிற மாதிரி, இங்கே ஒவ்வொரு கூட்டணியும் கேலிக்கூத்தாக்கப் படுவதில், சமூக ஊடகங்கள், குறிப்பாக யூட்யூப் சேனல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சொல்லிவைத்த மாதிரி இசுடாலின் ஆரம்பித்து வைத்த சூடு சொரணை இருக்கா முதற்கொண்டு கோபி பரிதாபங்கள் வரை! 


கூட்டணி பாவமா? பரிதாபமா? இந்தமாதிரி நக்கல் வீடியோக்கள், என்னமாதிரியான வாக்காளர்கள் மீது என்னமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென்று நினைத்துச் செய்கிறார்கள்? 200 ரூபாய் திமுக மாதிரி எங்களுக்கு வசைபாடத்தான் தெரியும்! விளைவு என்ன என்று கேட்டால் என்ன தெரியும் என்றா?

தேதிமுக வட்டாரம் கொஞ்சம் தெம்பாக இருக்கிற மாதிரித்தான் இப்போதுவரையிலான நிலவரங்கள் சொல்கின்றன. விஜய் காந்த் மகன் நன்றாகவே பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்! அதுமட்டும் போதுமா?
  
ஆக, தேதிமுக வில்  பிரேமலதா, விஜய் பிரபாகரன் என இரண்டு ஸ்டார் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிற மாதிரி ஒவ்வொரு தொகுதியிலும் பழைய வலிமையோடு செயல்படுகிற தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டுமோ?

கிழக்கு பத்ரி ஏதோ ஒரு தொலைக்காட்சிவிவாதத்தில் பேசியதன் மீது சிலரால் தடித்த வார்த்தைகளில் விமரிசனம் செய்யப்பட்ட விஷயம் கொஞ்சம் தாமதமாகத் தான் தெரியவந்தது. இன்று தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். விஜய் காந்தின் முக்கியத்துவத்தை  திமுகவும், அதிமுகவும் எந்த அளவில் மதிப்பிட்டிருக்கின்றன என்று பத்ரி சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அமமுக தினகரன், ம நீ ம கமல் காசர் இருவருடைய nuisance value குறித்துச் சொல்வதும்! 

    
தப்பும் தவறுமாகக் கணிப்பது, 2016 இல் பேசியதை அப்படியே உல்டா அடித்துப் பேசுவது, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு கழகத்திடம் மண்டியிடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகம் என்று அருணன் நினைக்கிறாரோ? பிட்டுப்பார்த்தால் உள்ளே அத்தனையும் சொத்தை என்றிருக்கிற அரசியல் சூழலில், கம்யூனிஸ்டுகளுடைய நிலைபாடு  என்ன பெரிய வித்தியாசமாக இருக்கிறது? அரசியலில் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் இந்திய கம்யூனிஸ்டுகளுக்குத் தான் என்பது அவர்களைத் தவிர எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது என்பது கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபம்!

பேச்சில் மட்டுமே இடதுகளாகவும், சமூக நீதிக் காவலர்களாகவும்  இருக்கும் விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட   உதிரிகளைப் புறக்கணித்தால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வருமோ? 

புத்தி புகட்டுவதற்கான வாய்ப்பு விரைவிலேயே தேர்தல் வடிவத்தில் வருகிறது!  

  

10 comments:

  1. இந்த அரசியல் விவாதங்களையெல்லாம் கேட்பதில் அர்த்தமே இல்லை. ஒவ்வொருவரும் அவர் சார்ந்த கட்சிக்கு சாதகமாகத்தான் பேசுவாங்க. கம்யூனிஸ்டுகளை, அதிமுக கூப்பிட்டிருந்தால், பாஜக இல்லைனா அவங்க அந்தக் கூட்டணிக்குப் போய், திமுகவை எதிர்த்துப் பேசுவாங்க. இப்போ, கேரளா/மே.வங்கம் இரண்டில் ஏன் காங்கிரஸோடு கூட்டணி வச்சுக்கலைனு கேட்டா, அதுக்கு ஒரு வியாக்யானம் கொடுப்பாங்க.

    இப்போ வி.சி கட்சியினர், திமுகவை ஆஹோ ஓஹோ என்று புகழ்வாங்க. ஒருவேளை பாமக வந்து இவர்களுக்கு கதவைச் சாத்தியிருந்தால், திமுகவை எதிர்த்துப் பேசுவார்கள். (சென்ற தேர்தலில் பேசியது போல).

    அரசியல் கூட்டணில தார்மீக நெறியோ இல்லை லாஜிக்கோ பார்க்கக்கூடாது. அதுல கொள்கை (அப்படீன்னு ஒன்று இருந்தால்) அதையும் நோண்டக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தானே மாற்றுக்கருத்தையும் கூடவே பதிவு செய்வது? உதாரணமாக அருணனுடைய பேச்சிலிருந்து மார்க்சிஸ்டுகளுடைய அரசியல் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் அதையும் கவனித்தால் தான் அவர்களுடைய பேச்சு எத்தனை வெறும்பேச்சு என்பதும் புரியும்!

      பதிவின் முத்தாய்ப்பாக இப்படி வெறும்பேச்சுப் பேசுகிறவர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லியிருந்ததைக் கவனிக்கவில்லையோ?

      Delete
  2. யூ டியூப்ல ஒரு காணொளி முடிந்த பிறகு ரெலெவண்ட் சப்ஜெக்ட்ல வேற காணொளிகளை அது சஜஸ்ட் பண்ணும். இங்க விஜய பிரபாகரன் பேச்சுக்கு அப்புறம், காமெடி காணொளிகளைனா அது சஜஸ்ட் பண்ணுது.

    எதுனாச்சும் வெளிநாட்டு சதியா இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன்! இதற்கெல்லாம்கூடவா வெளிநாட்டுச் சதி? நம்மூர் அரசியல்வாதிகள் தாங்களாகவே காமெடிப் பீசுகளாகி நிற்பார்களே!

      Delete
  3. விஜயகாந்த் மகன் பேச்சில்தான் என்ன நக்கல்!

    ReplyDelete
    Replies
    1. அது ஆணவம் போலத்தான் எனக்குத் தோணுது (அவங்க அம்மா பிரேமலதா விஜயகாந்த் பேசுவதுபோல்). கவுண்டமணியின் டயலாக் 'எடுக்கறது பிச்சை இதுல எகத்தாளம்' என்று பேசுவது நினைவுக்கு வருது.

      ஆனால் விஜயகாந்த் நல்லவராகத்தான் இருந்தார். அவரால் கூட்டங்களில் பேசமுடியாதது வருத்தம்தான். இந்தக் காணொளிலகூட அவர் பேசுவதற்கு கஷ்டப்படறார்.

      Delete
  4. முன்பு கூட்டணி வலிகைக்கான அடையாளமா, இல்லை பலவீனமா?-- என்று.

    இப்போ பாவமா, பரிதாபமா என்று.. போகப் போகப் பாருங்கள்..



    ReplyDelete
    Replies
    1. அரசியல் சொத்தைகள், இரண்டுதலைப்பிலும் பொதுவானவைகளாக! போகப்போகத் தெரிவதற்கு இன்னும் என்ன மிச்சம் வைத்திருக்கிறார்கள் ஜீவி சார்?

      Delete
  5. தெரியாத மாதிரி கேக்காக்காதீங்க.. நெஜமாவே தெரியாதுன்னா, உங்களுக்கே தெரியும் போது லேசா கோடி காட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கே தெரிந்த பிறகு, கோடிகாட்டி என்ன பிரயோசனம் ஜீவி சார் ? :))))

      Delete