Pages

Thursday, February 7, 2019

அரசியல் களம்! சட்டென்று மாறுமே வானிலை!

நேற்றுவரை எதிர்முழக்கம் செய்து அதிமுகவின் காவல் தெய்வமாக விமரிசனம் காவிரிமைந்தனால் மட்டும் வர்ணிக்கப்பட்ட தம்பிதுரை (பாவம்,அவரே அப்படிச் சொல்லிக் கொள்ள மாட்டார்) இங்கே  எப்படி உல்டா அடிக்கிறார் பாருங்கள்! பாஜகவோடு கூட்டணி இல்லை என்று சொல்ல முடிகிறதா?   



இங்கே அரசியல் களமும் சரி, அரசியல் கூட்டணிகளும் சரி, வானிலை அறிக்கைபோல மாறிக்கொண்டே இருப்பவை என்பது எத்தனை உண்மை!கவனித்துப் பார்த்தால், கூட்டணி சேருகிற ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் survival தாங்கள் பிழைத்திருப்பதன் பொருட்டே அணி மாறுகிறார்கள் என்பது புரியும். சிறு காணொளிதான்!

தத்துவங்களோ, சரியான அரசியல் பார்வையோ, ஒரு கட்சியின் அரசியல்பாதையை தீர்மானிப்பதில்லை. உனக்கு இவ்வளவு வருகிறதே! எனக்கு எவ்வளவு தருவாய் என்கிற பங்கீட்டுக் கணக்கே கூட்டணிக் கணக்காகவும் இருப்பது , புரியாதவர்களா நாம்?


கூட்டணிகள் சேருவது மட்டுமே வெற்றியைத் தந்து விடுமா? நல்ல கேள்விதான்! கடந்தகால அனுபவங்கள் வேறு மாதிரியாகச் சொல்கிறதே! என்ன செய்ய? பா.ம.க-வைக் கூட்டணிக்குள் சேர்ப்பது தொடர்பாக தி.மு.க-வுக்குள் மோதல் வெடித்துள்ளது. `துரைமுருகனும் ஜெகத்ரட்சகனும் ராமதாஸ் மீது பாசத்தில் உள்ளனர். ஆனால், ஆ.ராசா உட்பட வடக்கு மண்டல மா.செ-க்கள் பலரும் ராமதாஸ் வருவதை விரும்பவில்லை. இதை ஸ்டாலினிடமும் தெளிவுபடுத்திவிட்டனர்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

நம்மால் என்னசெய்ய முடியும் என்கிறீர்களா? அதான் மேலே வீடியோவுல ஜெய் சங்கர் வசனம் தெளிவாகக் கேட்கிறதே! 

அதற்கும் மேலே என்றால்? winner takes all என்கிற தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் அவசியம்!

எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

              

3 comments:

  1. காவிரி மைந்தன் அவர்கள் ஒரு சரியான பச்சோந்தி என் சொல்லவேண்டும் , அவர் என்ன சொல்கிறாரோ அது தான் சரி என் நினைக்கிறார் நம்முடைய கருத்துக்களை கூறினால் ( comment ) அதை நீக்கீ விட்டு ( delete ) செய்து விட்டு அவருக்கு யார் ஜால்ரா போடுகிறார்களா அவர்கள் கருத்தை மட்டும் வைத்துக்கொள்கிறார் .

    ReplyDelete
  2. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபர் தான் காவிரி மைந்தன் , அனால் அவருடைய wordpress name விமர்சனம் என்னத்த சொல்ல ....

    ReplyDelete
    Replies
    1. wordpress தளத்தில் எழுதுகிற பலரை எனக்கு இதுமாதிரி சட்டென்று முடிவுசெய்துவிடுகிற அளவுக்குப் பரிச்சயம் கிடையாது .ஞானசேகர். நவம்பர் கடைசியில் இது விஷயமாக நீங்கள் எழுதியிருந்ததையும் பார்த்தேன்.

      உங்களுக்கென்று ஒரு தளம் இருக்கையில், அவர் என்ன செய்கிறார் எதை நீக்குகிறார், சேர்க்கிறார் என்கிற கவலை எதற்கு? உங்கள் மனதில் பட்டதைத் தொடர்ந்து பதிவில் எழுதுங்களேன்!

      Delete