Pages

Monday, July 22, 2019

குமாரசாமி இன்றிரவு ஆளுநரைச் சந்திக்கிறாராம்! லவ் லெட்டருக்குப் பதிலா?

கரு "நாடக" அரசியல்  கோமாளித்தனங்களில் தலையிட  உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமையும் உறுதியாக மறுத்து விட்டது. அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட இரண்டு சுயேட்சை சமஉக்கள் H நாகேஷ், R சங்கர், இருவரும் கர்நாடக சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி மனுச்  செய்திருந்ததில், 'இம்பாசிபிள்  நாளைமறுநாள்  வழக்கு விசாரணைக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று முடித்துவிட்டதாக IndiaLegal தளச் செய்தி ஒன்று சொல்கிறது. 



இது குமாரசாமி அரசுக்கான நிவாரணமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. சபாநாயகர், சட்டமன்றம் இரண்டினுடைய வானளாவிய அதிகாரம் எதுவரை போகிறது என்று உச்சநீதி மன்றம் பொறுத்திருந்து பார்க்க நினைத்து இருக்கலாம்  மத்திய அரசும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில், குமாரசாமிக்கு வேண்டிய அளவு கயிற்றைக் கொடுத்து அவராகவே தொங்கட்டும், நாங்கள் வேடிக்கை மட்டும் பார்க்கப்போகிறோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறதோ? முந்தைய காலங்களில் காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டதைப் போல அவசரப்பட்டுக் கொண்டிருந்த எடியூரப்பா கூட வாயை அதிகம் திறக்காமல் அமைதியாக இருப்பது அப்படித்தானோ என்று எண்ணவைக்கிறது.      



பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்தாம் பாகத்துக்கு கல்கி வைத்த தலைப்பு தியாக சிகரம் கடைசிநேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் குமாரசாமியைக்கூட  தியாகசிகரம் ஆக்கி காங்கிரஸ் முதலமைச்சருக்கு வழிவிடுகிறார் என்று சிவகுமார் சொன்னதில் எந்த அளவு உண்மை?


எந்தக் காங்கிரஸ்காரன் என்றைக்கு ஒற்றுமையாக ஒரேகுரலில் பேசியிருக்கிறான் சொல்லுங்கள்! DK சிவகுமார் ஒரு விதமாகவும்  கர்நாடகாக் காங்கிரஸ் தலைவர்  தினேஷ் குண்டுராவ்  வேறுவிதமாகவும் பேசுவதைப் பாருங்கள்!  


சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மாலை 6மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும், இந்த விவகாரத்தில் என்னைப் பலிகடா  ஆக்கிவிடாதீர்கள் என்கிறார்! இவரும் கூட தியாகசிகரமாகக் காட்டிக் கொள்ள சரியான போட்டியாளர்தான்! மாலை  ஆறு மணி ஆனபின்னாலும் கூட அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை! இதுதான் கடைசி சான்ஸ் என்று ஒவ்வொருத்தராக பிஜேபியைத் தாளித்துப் பொடி சேர்த்துப் பேசுகிறார்கள் பேசுகிறார்கள், இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்! மாலை 6.20  நிலவரப்படி அவையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறது. சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடைசிவரை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே தள்ளிப்போடுவதற்குக் காங்கிரஸ் JDS கூட்டணி மும்முரமாக இருப்பது மிகப் பரிதாபமான காட்சியாக நேரலையில் பார்க்க முடிகிறது. 

கர்நாடகம் எப்போதும் இந்திய ஜனநாயகத்தின் சீக்காளியாக இருந்து வருவதை ஒரு பட்டியலுடன் விளக்குகிற பதிவு ஒன்று. தெரிந்து கொள்வதில் தவறொன்றுமில்லையே! 

தியாக சிகரம் குமாரசாமி! சதீஷ் ஆசார்யா 
சொன்னாக்க அர்த்தமிருக்கும்!

இந்த நேரத்தில் முதல்வர் குமாரசாமி இன்றிரவு  7 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி வந்துபோய்க் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தியுங்கள் என்று ஆளுநர் இரண்டாவது கடிதம் அனுப்பியதை இந்த லவ்லெட்டர் என்னைப் புண் படுத்துகிறது என்று சொன்னவர் குமாரசாமி. இப்போது சந்திப்பு  எதற்காகவாம்? 

நேரலையில் யார் யாரோ ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. முதல்வர் குமாரசாமி அல்லது troubleshooter DK சிவகுமார் இருவரும் அவையில்தான் இருந்தார்களா என்பதைப் பார்க்க முடியவில்லை.

ஜனநாயகத்தைப் பாழடித்ததில் காங்கிரஸ் கட்சி இன்றும் கூட முதலிடத்தில் குற்றவாளியாக நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி இருப்பதற்கு இல்லாமல் போவதே ஜனங்களுக்கும் நாட்டுக்கும்   நல்லது. 


மீண்டும் சந்திப்போம்.


2 comments:

  1. >>> ஜனநாயகத்தைப் பாழடித்ததில் காங்கிரஸ் கட்சி இன்றும் கூட முதலிடத்தில் குற்றவாளியாக நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு கட்சி இருப்பதற்கு இல்லாமல் போவதே ஜனங்களுக்கும் நாட்டுக்கும் நல்லது... <<<

    நன்றாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிலை எழுதுகிற பிற்பகல் 1.52 மணிக்கும் கூட சித்தராமையா disqualiffication பற்றி சட்டசபையில் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார் துரை செல்வராஜூ சார்! 1001 இரவுகள் அரேபியக்கதையை மிஞ்சிவிடும்போல இருக்கிறது.

      Delete