Pages

Wednesday, July 31, 2019

கீதம்! சங்கீதம்! ஒன்றில்லாமல் மற்றொன்றா?

கொக்கரக்கோ என்றொரு படம் 1983 இல் வந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது! இளையராஜா இசையில் SPB, SP ஷைலஜா பாடிய இந்த ஒரு பாட்டுக்காகவே படத்தின் பெயர்  இன்னும் மனதில் நிலைத்திருக்கிறதோ? பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்திடம்  கேட்டு இருந்தால் இன்னும் தரமான வீடியோவைத்  தேடிக் கொடுத்து  இருப்பார் என்று டைப் செய்து கொண்டிருக்கும் போதே நல்ல வீடியோவாக ஒன்று கிடைத்து விட்டது! மோகனராகம் என்று சொல்கிறார்கள்! எனக்கு ராகங்களைக் கண்டுபிடிக்கிற அளவு ஞானமில்லை! படத்தில் பாடுவது மகேஷ், இளவரசி என்று மட்டும் தகவல் தெரிகிறது.  


1993 இல் கமல் ஹாசன் கலைஞன் என்ற படத்தில் கொக்கரக்கோ  கோழி என்று பாடி ஆடியதும் இளையராஜா இசையில் தான்! சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் தயாரிப்பாம்! 


என்னுடைய நல்லகாலம், இந்தப் படத்தைப் பார்த்ததாக நினைவில் இல்லை! பாட்டென்னவோ கொஞ்சம் சுமார்தான்!


கொக்கரக் கொக்கரக்கோ! கில்லி  படத்தில் விஜய் , த்ரிஷாவுக்காக உதித் நாராயணன், சுஜாதா பாடியது. இசை அமைப்பாளர் வித்யா சாகர் நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.   


D இமான் இசையில் சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் படத்துக்காக கொக்கரக்கோ கோழி கூவ என்று ஆடிப்பாடி அசத்துகிறார். இசை பட்டையைக் கிளப்புகிறது என்பது கேட்கும்போதே யாரும் சொல்லாமலேயே புரியக் கூடியது தான்!


கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! என்று ஜிக்கி ஆரம்பிக்க. TMS தன்  கணீர்க் குரலில் தொடர்கிற இந்தப் பாட்டு இடம் பெற்றபடம்  பதிபக்தி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் இது.

மீண்டும் சந்திப்போம்.
           

4 comments:

  1. எனக்குமிகவும் பிடித்த பாடல் கீதம் சங்கீதம்.. குங்குமச்சிமிழ் பாடல் நிலவு தூங்கும் நேரம் கூட இதேபோல் இருக்கும். கொக்கரக்கோ படத்தை நான் சினிப்ரியாவில் பார்த்துத் தொலைத்தேன். திராபை! 'மயிலாப்பூர் பக்கம் மயிலைக் கண்டேனே' என்கிற மலேஷியா வாசுதேவன் பாடிய பாடலும் நன்றாயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! பாட்டு, ரசனையில் உங்களை மிஞ்ச யாருமே கிடையாது! முதல் பாட்டைப் பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த போது நண்பர் மாணிக்கம் சட்டைநாதன் பாட்டுப் பிரியர்! காவேரிக்கரையின் இயல்பான சங்கீத ரசனை அவரிடம் இருந்ததை யோசித்துக் கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இது இருக்கட்டுமே என்று கொக்கரக்கோ பாடல்களாகத் தொகுத்ததில், முதலாவது பாட்டே அதற்குப் பொருந்தாமல் இருப்பதைக் கவனிக்காமல் பாட்டின் இனிமை மறக்கவைத்து விட்டதோ?

      Delete
  2. மூன்றாவது பாடல் உற்சாகமாய் இருக்கும். கடைசிப்பாடல் இனிமை. மற்றவை ஊ..ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! அந்த மற்றவை என்பதில் கமல் பாட்டு மட்டும் தானே?

      Delete