Pages

Monday, August 12, 2019

அலுப்புக்கு மருந்து! கொஞ்சம் பாட்டு! #திரைஇசை

1980 இல் வந்த ஹிந்திப் படம் குர்பானி! படத்தின் கதை ஒன்றும் புரியவில்லை என்றாலும் பாடல்களுக்காகவே அந்த நாட்களில் பார்த்த படம். டைட்டிலுக்கேற்ற  ஒரு கவாலி!



கல்யாண்ஜி  ஆனந்த்ஜி இரட்டையர் இசையமைப்பில் எல்லாப் பாடல்களுமே ஹிட். அதுவும் அப்போது 15 வயதே ஆகியிருந்த பிரிட்டிஷ் குடியுரிமைபெற்ற நஜியா ஹசன் என்கிற இளம் பெண் பாடகி  பாடிய இந்தப்பாடல் ரொம்பவுமே பிரபலம். இது ஒரு பாகிஸ்தானியப்பாடகி இந்தியத்திரைப்படத்துக்காகப் பாடிய முதல்பாட்டு என்று சொல்கிறார்கள்.  

Nazia Hassan (3 April 1965 – 13 August 2000)


இந்தப் படம் இந்த ஒரு பாட்டுக்காகவே தமிழ்நாட்டில் ஓடியதென்றே சொல்லலாம்! லைலா ஓ லைலா!


பாடல்கள் எல்லாம்  ஹிட்டானதினாலேயே குர்பானி வெற்றிப் படமாகவும் ஆனதென்றுதான் சொல்லவேண்டும்! பத்து லட்சத்துக்கும் மேலாக காசெட்டுகள் விற்று பிளாட்டினம் ரிக்கார்ட் சாதனையைப் படைத்த படம் இது. கதையாவது புண்ணாக்காவது!


இப்போது பார்க்கும்போது வினோத் கண்ணா முதல் அம்ஜத் கான் வரை எல்லோரையும் மிக மிக இளமையாகப் பார்ப்பது போலத்தோன்றுவது எனக்கு மட்டும் தானா?

செய்திகளில் அலுத்துக் களைத்ததில் இதமான சங்கீதம்!  

 மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. ஆம், அந்தக் காலத்தில் குர்பானி பாடல்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் செல்லப்பா சார்! எங்கள் பிளாக் வழியாக இந்தப்பக்கத்தைக் கண்டடைந்திருக்கிற உங்களை வரவேற்கிறன்! இந்தப் பதிவு குர்பானி படப் பாடல்களைப் பகிர்வதற்காக என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும் நேற்றைக்கு ஷோபா டேவை தங்களுடைய விருப்பத்துக்கேற்றபடி எழுதவைத்துக் குர்பானி ஆக்கிவிட்டதாக பாகிஸ்தானிய முன்னாள் தூதர் அப்துல் பாசிட் நேற்றைக்குப் போட்டுடைத்திருக்கிற செய்தியை வைத்து இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியதன் பின் தொடர்ச்சி!

      Delete
  2. இன்னும் ஒரு மொஹம்மத் ரஃபி பாடலை விட்டு விட்டீர்களே... "க்யா தேக் தே ஹோ...? சூரத் தும்ஹாரி..."

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! நீங்கள் பார்ப்பதாயிருந்தால் குர்பானி முழுப்படமும் யூட்யூபிலேயே கிடைப்பதைப் பகிரத்தயார்! :-))
      consent to be ...nothing தளத்தில் ஷோபா டேவை குர்பானியாக்கிவிட்ட செய்தியை ஒருபதிவாக எழுதுகிற வரை இந்தப் படத்தையோ பாடல்களையோ நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! தொடர்ந்து அரசியலாக அதுவும் ஒரேநாளில் நாலுபதிவு வேண்டாமே என்பதற்காகத்தான் இந்தப்படத்தின் நான்கு பாடல்களின் வீடியோ ப்ளஸ் இசையமைப்பாளர்களது படம் அப்புறம் நஜியா ஹசன் படம் போட்டதே! அதற்குமேல் யார் பதிவைச் சகித்துக் கொள்வார்கள், நீங்களே சொல்லுங்களேன்!?

      Delete