Pages

Friday, October 25, 2019

கதம்பமாக சில விஷயங்கள்! அரசியல்! கார்டூன்கள்!

பொதுத்துறை நிறுவனங்களை நாசமாக்கியதில் காங்கிரஸ் ஆட்சியாளர்களுடைய ஊழல் திருவிளையாடல் ஒருபாதி காரணமென்றால், பொறுப்பற்ற ஊழியர்களும் தொழிற் சங்கங்களும் மறுபாதி காரணம் என்பதை எப்போது சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறோம்?  BSNL, மற்றும் MTNL இரு நிறுவனங்களும் இணைக்கப்படும்என்ற மத்திய அரசின் முடிவின் மீதான ஒரு கடுமையான எதிர்ப்புக் குரலை நேற்று முகநூலில் பார்த்தேன்.


   
ஒரு அரசின் வேலை நிர்வாகமே தவிர வணிகம் செய்வதல்ல என்ற கருத்து இங்கே வலுத்து வருவதை இந்தப் பகிர்வுக்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 

இது சுரேந்திரா ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக வரைந்தது.


கார்டூன்களிலும் கூட farting சாத்தியமே என்பதை சதீஷ் ஆசார்யா அடிக்கடி நிரூபித்து வருகிறார். இவர் சொல்கிற மாதிரி புஸ்வாணமாகிப் போனதை ஊதிப்பெரிதாக்குவது யார்? மோடி வெறுப்பாளர்களா? அல்லது பிஜேபியா?

    
அடடே! அப்படியா!! என்பதற்குமேல் இந்தப்படத்தின் மீதான கருத்தாக வேறு என்னத்தைச் சொல்வதாம்?


ஹரியானா தேர்தல் முடிவுகள் மாதிரி ஒரு இழுபறியான நிலை வரும்போதுதான் கட்சி தங்களுக்கு சீட் கொடுக்காததை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயித்த கலகக் குரல்களும் மதிக்கப்படுகின்றன என்பது தேர்தல் ஜனநாயக விசித்திரங்களில் ஒன்று! மேலே படத்தில் மத்தியில் உள்ள 5 பேருமே பிஜேபியின் கலகக் குரல்கள்தான்! அதனால் இங்கே    துஷ்யந்த் சவுதாலா சிலுப்பிக் கொள்கிற மாதிரி அவர் ஒன்றும் அவ்வளவு ஒர்த் இல்லை, கிங் மேக்கரும் இல்லை! 10 சீட் மட்டும் ஜெயித்துவிட்டு மேலும் 6 சுயேட்சைகள் ஆதரவு தனக்கிருப்பதாக சவடால் பேசுவதுமே தேர்தல் ஜனநாயகத்தின் முதிர்ச்சி பெறாத விசித்திரம்!

  
டிபிக்கல் சதீஷ் ஆசார்யா கார்டூன்! முழுக்க முழுக்க உண்மை இல்லாதது என்பதை மேலேயே சொல்லியாகி விட்டது! நம்மூர் திராவிடங்கள் மாதிரி மோடி வெறுப்பை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கார்டூனிஸ்டுக்கு இருக்கிறது போல!


இன்றைக்கு வெளியான விஜய் படம் படுமோசம் என்பதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது மட்டும் தான் இந்த நாளின் சுவாரசியமாக இருக்கிறது போல! 

மீண்டும் சந்திப்போம்.  
         

6 comments:

  1. // இன்றைக்கு வந்த விஜய் பம் படுமோசம் என்பதாக...//

    இதற்குத்தானே அனைவரும் கவலைப்படுகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      இந்த முறை பிஜேபி ஆசாமிகள் எவருமே இந்தப்படத்துக்கு ஓசி வெளம்பரம் கொடுக்கலையாம்! :-)))
      அப்படி ஒரு கவலை மட்டும் எனக்கிருந்தது!

      Delete
  2. ரசிக்க வைக்கும் கார்ட்டூன்கள். 

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! கார்டூன்களை விட நம்மூர் அரசியல்வாதிகள் செய்கிற கோமாளித்தனங்கள் தான் என்வரையில் ரொம்ப ரொம்ப சுவாரசியம்!
      தீபாவளி நல்வாழ்த்துகள்!

      Delete
  3. வாய் வார்த்தை வழியே கைதி படம் நன்றாக உள்ளது என்று தகவல் பார்த்தேன். படித்தேன். வட இந்திய அரசியல் அதன் பின்புலம் அரசியல்வாதிகள், வினோதங்கள் விசித்திரங்கள் குறிப்பாக நிஜமான தாவூத் இப்ராகிம் என்று சொல்ல வேண்டிய சரத்பவார் பற்றி எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!
      நேற்றே புதியதலைமுறை சேனலில் கைதி படத்துக்குப் பார்வையாளர்கள் ஆதரவு கருத்தாகவும் பிகில் கொஞ்சம் சொதப்பிவிட்டதாகவும் ஒரு சிறு வீடியோ யூட்யூப் தளத்தில் பார்த்தேன். ஒரே டிக்கெட்டில் நாலுபடம் பார்க்கிற மாதிரி அப்படி ஒரு அலுப்பு என்பதான கிண்டலும் ட்வீட்டரில்!

      தாவூத் இப்ராஹிம் பற்றி இங்கே யாருக்கு கவலை? வேண்டுமானால் கருணாநிதியை மிஞ்சிய ஊழல் சாமர்த்தியசாலி என்று கொஞ்சம் ஷரத் பவாரைப் பற்றி பேசலாம்!

      மகள்களுடன் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்! தீபாவளி நல்வாழ்த்துகள்!

      Delete