Pages

Friday, November 13, 2020

தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! தீபாவளிப் பரிசு!

நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை  அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான் அர்த்தம்.


இந்தவருட தீபாவளிப் பரிசாக எனக்கு இன்று வெள்ளிக் கிழமை காலை, பேத்தி பிறந்திருக்கிறாள்.வீடியோ காலில் குழந்தையைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு அற்புதமான வரம்.ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன். ஸ்ரீ அரவிந்த அன்னை இந்தப் பச்சிளம் குழந்தைக்குத்  துணையாக இருந்து காத்தருள வேண்டும். 


நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

எங்கும் நலமே விளைக! மீண்டும் சந்திப்போம் .

மீண்டும் சிந்திப்போம்          

9 comments:

  1. எங்கெங்கும் நலமே விளைக..
    இல்லமெல்லாம் வளமே நிறைக...

    அன்னை அளித்த அருட்கொடை வாழ்க பல்லாண்டு..

    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      இல்லத்தின் புதுவரவுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி!

      அன்பின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  2. இல்லத்தின் புதிய வரவு, இனிய இளவரசிக்கு ஆசிகளும் வாழ்த்துகளும்.  உங்களுக்கு நமஸ்காரங்களுடன் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      தீபாவளி வாழ்த்து,, குகாந்தைக்கு வாழ்த்து இரண்டையும் ஒருசேர சொன்னதற்கு இதயம் கனிந்த நன்றி!
      உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழி நலம் சூழ!

      Delete
  3. பேத்தி பிறந்தது குறித்து மகிழ்ச்சி. குழந்தைக்கு ஆசிகள்.

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி! பேத்திக்கு ஆசிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பா.வெ. அம்மா!

      வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

      Delete
  5. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

    இந்த தீபாவளியை மறக்க முடியாததாக அன்னை செய்துவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நெ.த. சார்!

      இந்த தீபாவளியில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். தீபாவளி வாழ்த்துக்களை இன்னொரு முறை சொன்னதற்கு நன்றி. வாழி நலம் சூழ!

      Delete