Pages

Friday, June 18, 2021

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர்!

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர் - பிரதமர், முதலமைச்சர் சந்திப்பின் முக்கியத்துவம் இப்படி கலைஞர் செய்திகள் தொலைகாட்சி பெருமிதப்பட்டுக் கொள்கிற விவாத நிகழ்வு வீடியோ 50 நிமிடம். வேறு வேலை எதுவுமில்லை என்றால் தாராளமாகப் பார்க்கலாம். பனிமலர் தான் நிகழ்ச்சியின் நெறியாளர்.


இத்தனை அதிமுக்கியமான நிகழ்ச்சியைப் பற்றிய விவாதத்துக்குப் பார்வையாளர்கள் வெறும் 72 பேர்தான் என்பதை மேலே ஸ்க்ரீன்ஷாட் காட்டும்போது ஏ தாழ்ந்த தமிழகமே என்று கருணாநிதி மாதிரி நாமும் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லையே! 



இணையத்தில் இந்த அதிமுக்கியமான நிகழ்வைக் குறித்து நிறைய சேதி சொல்கிறார்கள்! எப்படி என்று பார்த்து விடலாமா?


அதுசரி! ஸ்டேன்லி ராஜன் வேறெப்படிச் சொல்வாராம்?


கார்டூனிஸ்ட் அமரன் கூட ஸ்டேன்லி ராஜன் சொன்னதைத் தான் கோடுகளில் வரைந்திருக்கிறார்.


இது ஸ்ரீராம் சேஷாத்ரியின் ட்வீட்டர் செய்தி :: டில்லியில் வரவேற்கக் காத்திருந்த கூட்டம், 200 ரூ உபிக்களை டில்லிக்கு கூட்டிக்கொண்டுபோக செலவாகுமே! உள்ளூர் ஆட்களை வைத்தே சமாளித்துவிட்டார்கள் போல.



நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக ஸ்டாலின் ட்வீட் செய்த சோனியா ராகுல் இருவரைச் சந்தித்ததைப்பற்றி எந்த முக்கியத்துவமும் விவாதமும் இல்லையா?

நாம்தான் இவர்களுக்குத் தேவையே இல்லாமல் இத்தனை பில்டப் கொடுத்து வருகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.

13 comments:

  1. கொரோனா முடிந்ததும் சென்னைக்கு குடும்பத்தோடு மயிலை கபாலீஸ்வர்ரை தரிசிக்க நீங்கள் வருவதாக்க் கேள்விப்பட்டேன். நீங்க முதலில் மனைவி குழந்தைகளை முதல் ரயிலில் அனுப்பிடுங்க. அடுத்த ரயிலில் நீங்கள் வந்து இறங்கும்போது ரயில் நிலையத்திலேயே அவங்களை வரவேற்பு கொடுக்கச் சொல்லுங்க. பிரபல பதிவருக்கு சென்னையில் குதூகலமான வரவேற்பு என்று நானொரு பதிவு எழுதி உங்களுக்கு அனுப்பறேன். இந்தத் தளத்திலேயே வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. 2008 2009 காலங்களில் பிரபலமான பதிவர் யார் என்பதில் ஒருபோட்டாபோட்டியே நடந்தது. அப்போதும் சரி, இப்போதும்சரி அந்தப்பட்டத்துக்காக நான் ஏங்கியதே இல்லை என்பதைவிட அதற்காக நடந்த கூத்துக்களைப் பார்த்ததில் ஏற்பட்ட அருவருப்பு இன்னமும் இருக்கிறது நெல்லைத்த்தமிழன் சார்!

      என்னைப்போய் இப்படிச் சொல்லிவிட்டீர்களே! :-)))))

      Delete
    2. ஆனால் guest post ஆக ஏதாவது நல்ல புத்தக அறிமுகமாகவோ, வாசிப்பு அனுபவத்தையோ எழுதி அனுப்பினால் நன்றி, சந்தோஷங்களோடு இங்கே பகிர்ந்து கொள்வேன்!

      Delete
  2. காசு கொடுத்து வட இந்திய வேலையற்றவர்களை ரோடில் திமுக கொடியோடு நிற்கவைத்மு தமிழகத்தைப் பற்றி மோசமான பிம்பத்தை ஏற்படுத்திய திமுக பிரமுகர் யார்னுதான் தெரியவில்லை. அந்தப் படத்தைப் பார்த்தீர்களா

    ReplyDelete
    Replies
    1. வரவேற்பு ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியது டி ஆர் பாலு என்று பார்த்தேன். இசுடாலின் வருகையை அங்கே சேனல்கள் எதுவும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவே இல்லை. பத்தோடு ஒன்றாக மேலோட்டமாகச்சொன்னதோடு சரி. ஆனால் மறுநாள் சோனியாவைச் சந்தித்ததைச் செய்திகளில் சொன்னார்களாம். அதுவும் எதனால் என்பது நாடு அறிந்த விஷயம்.

      ஒரு மாநில முதல்வர் நாட்டின் பிரதாமரைச் சந்திப்பது இயல்பான ஒன்று. அதிலும் பிரசாரம் செய்வது திராவிட பாணி.

      Delete
  3. அமைச்சரவையில் இடம் இல்லாதவர்களுக்கு இதயத்தில் இடம்.  அப்பாவின் வழக்கம்.   நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்வது மகனின் வழக்கம் போல...

    ReplyDelete
    Replies
    1. கருணாநிதி இதயத்தில் இடம் என்று அல்வா கொடுத்தது சொந்தக்கட்சிக்காரர்களுக்கு மட்டுமே ஸ்ரீராம்! காங்கிரஸ்காரர்களுக்கு அமைச்சரவையில் இடம் என்பதை திமு கழகம் எப்போது நினைத்துப் பார்த்திருக்கிறதாம், சொல்லுங்கள்!

      சோனியா காங்கிரசைக் கைகழுவ முடியாத இக்கட்டில் இசுடாலின் இருக்கிற மாதிரித் தான் தோன்றுகிறது.

      Delete
  4. நம்க்கி நாமீ!..

    ஜன்ங்கள்கூ டமில் தெர்யாதுங்கோ!..

    ReplyDelete
    Replies
    1. ஆனால் மகனுக்கு தமிழக மந்திரிசபையில் இடம் கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் வரவேற்பைக் கவனித்த டி ஆர் பாலுவுக்கு தமிழ் தெரியுமே துரை செல்வராஜு சார்!

      Delete
  5. நெஞ்சுக்கு நெருக்கம்..
    நினைவுக்கு உருக்கம்!..



    ReplyDelete
    Replies
    1. நெஞ்சம் மறப்பதில்லை! அது
      நினைவை இழப்பதில்லை

      என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் துரை செல்வராஜு சார்!

      Delete
  6. அடே!.. யாரங்கே?.. ஆஸ்தானப் புலவருக்கு...

    அவரு பெருமாள் கோயில் வாசல்...ல..

    புளியோதரையா!..

    இல்லீங்க.. பிரியாணி வாங்கப் போய்ட்டாருங்க!..

    ReplyDelete
    Replies
    1. ஹிந்துக்களின் கோவில் பணத்தில் பிரியாணி மட்டுமா போடுவார்கள்? :((((

      Delete