Pages

Saturday, June 19, 2021

டில்லிக்குப்போனார்! திரும்பி வந்தார்! #சொல்லவிடுபட்டவை

முந்தைய பதிவில் தமிழக முதல்வர் தலைநகர் டில்லிக்குப் போனதைக் கொஞ்சம் பார்த்தோம். கூடவே போனவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது லைம்லைட்டுக்கு வரவே இல்லையே என்ற மனக்குறையை இன்றைய செய்திகள் தீர்த்து வைத்திருக்கின்றன. திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகன் முதல்வருடன் கூடவே டில்லிக்குப் போனதாக செய்திகள் சொன்னாலும் பிரதமரைச் சந்தித்த போதும் சரி, மறுநாள் சோனியாவை சந்தித்தபோதும் சரி துரைமுருகனைக் காணவே இல்லை. எங்கே போனாராம்?


டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே,  கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்ததாக News 18 தமிழ்நாடு செய்தி சொல்கிறது. அப்படியானால் தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் MP  மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றதாக இதே செய்தியின் துவக்கம் சொல்வதில் வரவேற்பளிப்பதற்காக மட்டுமே துரை முருகன் டில்லிக்குப் போனார் என்றாகிறதே! ஆக, பொழுது போகாமல்தான் தந்தையும் மகனும் தோனியைச் சந்தித்தார்கள் போல!


இந்த 5 நிமிட வீடியோவில் விகடன் சொல்வது என்ன? மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணி வேண்டாம் என ஸ்டாலின் உருமாறி இருப்பதாக சொன்னதைக் கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாதிரி நிதானமான அணுகுமுறைக்கு மாறிவருகிறார் என்கிறார்களே, அது சரிதானா?

.

நீட் தேர்வை ரத்து செய்! இது எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது. பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நீட் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை மெமோரண்டமாக அளித்து இருக்கிறோம் என்று சில கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லியிருக்கிறார் 


நீட் தேர்வு ரத்து மாதிரியே கச்சத்தீவை மீட்பதும் அந்தக் கோரிக்கைகளில் சேர்ந்திருக்கிறது GST வரிவசூலில் தமிழகத்துக்கு நிலுவை இருப்பதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதில் ரூ. 4321 கோடி என்று குறிப்பிட்டுப் போதிய விவரங்களுடன் கேட்டமாதிரித் தெரியவில்லை.  பிரதமருடனான சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும்? முகநூலில் ஒரு கற்பனை உரையாடல்.
சிரிப்பதற்காக மட்டும்.  


திமுகஆட்சிக்கும் மின்வெட்டுக்கும் அப்படி பொருத்தம்! அந்தநாளைய ஆற்காடு வீராசாமி போலத்  தடுமாறாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி அசால்டாக ஒரேபோடு போட்டதில் ஆறுமாத வாய்தா! அப்புறம்? இன்னொரு வாய்தா வாங்கத்தெரியாதா என்ன? !! ஜனங்கள் பாடு தான் எப்போதும் போலத் திண்டாட்டம்.....😕😔 


சுண்டெலிகளுக்குக் குளிர்விட்டுப்போய் விட்டது போல!  அதற்காக பிறந்தநாள் வாழ்த்தாக இப்படியா? திமுக சங்கர மடம் இல்லைதான்! ஆனால் வாரிசு இல்லாத கட்சி ஒன்றுமில்லையே! 

மீண்டும் சந்திப்போம். 
   

2 comments:

  1. நவீன முரசொலியான விகடன் சொல்வதை எல்லாம் இங்க போடறீங்களே... காசுக்கோ இல்லை தங்கள் உரிமையாளர்களுக்கோ ஏற்ற மாதிரிதானே விகடன் பேசும்.

    ReplyDelete
    Replies
    1. முந்தைய பதிவில் கலைஞர் செய்திகள் விவாதநிகழ்ச்சிக்குச் சுட்டியோடுதான் எழுத ஆரம்பித்ததே! முரசொலியானால் என்ன விகடனானால் என்ன , பதிவில் பயன்படுத்திக் கொள்ள விஷயம் இருக்கிறதா என்பதில் மட்டுமே என்னுடைய நாட்டம் நெல்லைத்தமிழன் சார்!

      Delete