Pages

Wednesday, June 9, 2021

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் #செய்திகளின்அரசியல் !

தினசரி ஏதாவது ஒரு ஆடியோவை வெளியிட்டு, யாரைக் குழப்புகிறார் சசிகலா? புதிய தறுதலை அறிவாளிகளே குழம்புகிறார்கள் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு? 


தேர்தல் தோல்விக்குப்பின்னால் அதிமுக கொஞ்சம் துவண்டுபோய்த்தான் கிடக்கிறது.O பன்னீர் செல்வம் பழைய பன்னீர்செல்வமாக இருக்கிறாரா அல்லது புதிதாக தர்மயுத்தம் 2 என ஆரம்பிப்பாரா? சசிகலா அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்பிப் பார்க்கிறார் என்பது ஒருபக்கம், OPS என்னசெய்வாரோ  என்று இன்னொரு பக்கமுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் திமுகவே ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறதென்றால் .........!


கமல் காசருடைய #மநீம கட்சி என்ன நிலைமையில் இருக்கிறது? மக்கள் நீதி மையத்தின் ஆலோசனை கூட்டம் இணையம் ஊடாக நடந்தது.கமலஹாசன் தானே பேசி தானே ஆலோசனை செய்திருக்கலாம் அல்லது தசவாதாரம் போல பல வேடங்களில் அவரே வந்து பேசியிருக்கலாம் என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் நேற்று முன்தினம் நையாண்டி செய்திருப்பது போலத் தானா? ஆனால் இரண்டு நாட்களாக பொள்ளாச்சி Dr. மகேந்திரன் திமுகவில் இணையப்போவதாக, பெரிய போஸ்டிங் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துகொண்டே இருந்தன.மு க அழகிரி - இசுடாலின் சந்திப்பு மாதிரியே அதுவும் வரும் ஆனா வராது ரகமாகிப்போய்விட்டது.


கமல் மாதிரியே, நிறைய பன்ச் டயலாகெல்லாம் பேசித் தன்னுடைய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தியவர் விஜய் சேதுபதி. தேர்தல் ரிசல்ட்டுக்குப்பிறகு அரசியல் பன்ச் பேசினால் என்னவாகும் என்பது தெரிந்தவராக, சங்கடமான பன்ச்சை விட்டு சமையல் நிகழ்ச்சியில் சங்கீதம் பாடப்போறேன் என்று ஒதுங்கிவிட்டார். யார் சேனலில் என்று கூடத்தெரியாத அப்பாவியாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


என்ன தயா இதெல்லாம் என்று ஆதங்கப்பட வேண்டாம்! சமூக இடைவெளி, கொரோனா கட்டுப்பாடுகள், ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் இவை சட்டமே நாங்கள்தானடா திமுக அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே!

சோனியாவின் தவப்புதல்வன் ராகுல் காண்டிக்கு ட்வீட்டரில் மட்டுமே அரசியல் பேசத்தெரியும். அதையும் யார் எழுதிக்கொடுக்கிறார்கள் என்பது காங்கிகளின் பரமரகசியம். பப்பு ஒரு கீச்சைப் போட்டவுடன் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து எப்படிக் கிழிக்கிறார்கள் பாருங்கள்! இந்த லட்சணத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில்
நிற்கக்கூடியவர் என்று ராகுலுக்கு முட்டுக்கு கொடுக்கிறார்களே. அது எப்படி?

இங்கே இசுடாலினுக்கு ஊடகங்கள் முட்டுக்கொடுக்க ஆரம்பித்து சில வருடங்கள் தான் ஆகியிருக்கும்! ஆனால் ராகுலுக்கு 2004 இலிருந்தே முன்களப்பிணியாளர்கள் முட்டுக் கொடுத்துவருகிறார்கள். முட்டுக்கொடுத்துக் கொடுத்தே இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்தே பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. முட்டு கொடுத்து முட்டு கொடுத்தே
    தட்டு கெட்ட சாவடியாய்ப் போனது தான் மிச்சம்...

    அடக் கடவுளே!...

    ReplyDelete
    Replies
    1. சொந்தச்சரக்கில்லாதவனுக்கு எவ்வளவு முட்டுக்கொடுத்தாலும் என்ன பிரயோசனம் துரை செல்வராஜு சார்? !!

      Delete