Pages

Friday, February 22, 2019

அரசியல்வாதிகளும் பட்டிமன்றப் பேச்சாளர்களும்!

கமல் காசர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் என்றாகிக் கொண்டிருப்பதில் திமுக தலீவர், வருங்கால தலீவர் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறதோ?

வெல்லும் சொல் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் சொல்வது போல கமல் காசரை அலட்சியப்படுத்தி விட்டுப் போவது திமுகவுக்கு நல்லது என்றிருந்து விட முடியுமா? 200 ரூபாய் திமுக தான் சும்மா இருந்துவிடுவார்களா? 
தேதிமுகவும் விஜயகாந்தும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளலாம்! இந்த strategy என்கிற வார்த்தை இங்கே தமிழக அரசியல்வாதிகள் வாயில் எத்தனை மலினப் பட்டுப் போயிருக்கிறது என்று கவனிக்கும்போதே அத்தனை அலெர்ஜி தருவதாகவும்!

இவர்கள் பேசுவதையே நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடித்துவிடாதா?  
பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என்று சொல்கிறார் பட்டிமன்றத் பேச்சாளர் ராஜா!


      

4 comments:

  1. ராஜாவின் பேச்சு கூட சாதாரணம்! அவர் ஜோக்குக்கு அவரே சிரிக்கிறார்!!

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதிகள் கூடத்தான் தங்களுக்குத் தாங்களே ஷொட்டுக் கொடுத்துக் கொள்கிறார்கள்!

      Delete
  2. பிரேமலதாதான் பேசுகிறார்! விஜயகாந்த் விழிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. மனைவி சொல்லே மந்திரம் என்றிருப்பவர் விழிக்காமல் என்ன செய்வார் பாவம்? இன்னமும் முழு அளவில் குழறாமல் பேசவரவில்லை போல!

      Delete