Pages

Friday, March 8, 2019

சீரியசா அரசியல் பதிவா? கொஞ்சம் சிரிங்க பாஸ்!

மக்களுக்கு மறதி அதிகம் என்பதை சமீபத்தைய ஊடக நிகழ்வுகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டே வருவது புரிகிறதா? சிலநாட்களுக்கு முன்னால்வரை பாமக அன்புமணி மீது பாய்ந்து குதறிக் கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது தேதிமுக மீது பாயத்தொடங்கி இருக்கின்றன என்பதில் எவருடைய அஜெண்டா மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பது புரிகிறதா?


இங்கே தராசு ஷ்யாம் நடப்பு அரசியலை அலசுவது கூட ஒருபக்கச் சார்புடன் கூடியதுதான்! pro highest bidder என்பது மட்டுமே இவர்களுடைய ஊடக யோக்கியதை. 

இது கொஞ்சம் நாம்தமிழர்த்தனமான காமெடி தான்! ஏழு மாதப்பழசு ஆனாலும் கூட நையப்புடைப்பது அவசியம்தான் என்று இப்போதைய ஊடக அலப்பறைகளைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.
வைகுண்டராஜன் சேனலுக்குப் பாவம், ரொம்பக்கவலை!  


TTV ன்னா என்னன்னு நெனச்சீங்க?

ரொம்ப சீரியஸா பிரேமலதா ரெண்டு முருகன் தராசு ஷ்யாம் என்றே பார்த்துக் கொண்டிருந்தால் .....! 

கொஞ்சம் சிரிங்க பாஸ்!

   

5 comments:

  1. எல்லாமே வேடிக்கை ஆகிவிட்டது. ஆட்சிக்கும் நமது வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. தடாலடி பேர்வழி , வாக்கு சாதுர்யம் மட்டுமே தெரிந்தவர், எது நடந்தாலும் துடைத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பவர்கள் மட்டுமே அரசியலிலும் ஆட்சியிலும் இருக்கப் போகிறார்கள். நமக்கென்ன வந்தது என்று நாமெல்லோரும் மாறிவிட்டோம்!

    ReplyDelete
    Replies
    1. //நமக்கென்ன வந்தது என்று நாமெல்லோரும் மாறிவிட்டோம்!//

      வேறு ஆப்ஷன் இப்போதிருக்கும் தேர்தல், ஜனநாயக முறைகளில் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தீர்களா? ராஜாக்கள் காலத்தில் ஜனங்களுடைய மனோநிலையை மாறுவேடத்தில் வந்நேரடியாகவே து தெரிந்துகொள்வார்கள் என்று கதைகளாய் படித்திருக்கிறோம். இன்று அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் நேரடியாகவே interact செய்யமுடிகிற காலத்தில், இருதாப்புமே அதைச் செய்வதில்லை என்பதைக் கவனிக்கிறீர்களா? கொஞ்ச நாட்களுக்கு முன்னால்,civil society என்ற தம்பட்டம் வெகு பலமாக அடிக்கப்பட்டதில் ஒரு அரவிந்த் கேசரிவாலு மட்டுமே கிடைத்த பரிதாபம் தான் நிகழ்ந்தது.

      ஆனால் நம்பிக்கையிழக்காமல் ஜனங்கள் முயற்சித்துக் கொண்டேதான் இருந்தாகவேண்டும்!

      Delete
  2. மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் பெரிய மூலதனம்.

    ReplyDelete
    Replies
    1. அது நிஜமாகவே இருந்துவிட அனுமதிக்கப்போகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி, ஸ்ரீராம்!

      Delete
  3. //"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.// - இந்தக் கேள்வியே எனக்கு அபத்தமாகவும், ராதாகிருஷ்ணன் அவருடைய briefஐத் தாண்டிக் கேட்பதாகவும்தான் தோன்றுகிறது. ராதாகிருஷ்ணன் விருப்பத்துக்கு தேதிமுக கட்சி நடத்தமுடியுமா? அதுக்கு அவர்தான் புதுக் கட்சி துவங்கணும்.

    பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.

    ReplyDelete