Pages

Saturday, March 30, 2019

சிவன்கோவில் கட்டினாரா திருமா ? இது என்ன புதுக்கூத்து?

கார்த்தி சிதம்பரத்தை ஆதரிக்கிற சாக்கில் இசுடாலின் பிஜேபியின் H ராஜாவை கடைந்தெடுத்த அயோக்கியன் என்று வெறுப்பைக் கக்கியதில், H ராஜா எழுப்புகிற பல கேள்விகள் திராவிடங்களையும் கூட்டாளி சிவகங்கை ஜாமீன்களையும் எப்படி உறுத்தியிருக்கின்றன என்பது மட்டுமே வெளிப்பட்டது. வெறுப்பரசியலை விதைத்த திராவிடங்கள் அந்த வெறுப்பிலேயே வெந்து முடியப் போகிறார்களோ?


‘‘கூட்டணிக் கட்சிகள் எனக்கு அசுரபலம். அதிலும் எதிரணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களத்தில் நிற்பது, என் வெற்றிக்குக் கூடுதல் பலம். 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தத் தொகுதியின் எம்.பி-யாக இருந்த சிதம்பரம், கொண்டுவராத திட்டங்களைக் கொண்டுவர இருக்கிறேன். மோடி அரசின் சாதனைகள், தமிழக அரசின் சாதனைகள் என் வெற்றிக்கு உதவும்.’’ -ஹெச்.ராஜா
“பி.ஜே.பி ஆட்சியில் பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜி.எஸ்.டி., சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் என்று பிரச்னைகள் ஏராளம். தமிழகத்தில், ‘மோடிஎம்கே’ ஆட்சி அகற்றப்பட வேண்டும். நான் வெற்றிபெற்றால், தனியார் நிறுவனங்கள் மூலமாக இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘ஸ்பைசஸ் பார்க்’ திறக்கப்படும்.’’ - கார்த்தி சிதம்பரம்  
கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒருகாலத்தில் அதன் எதிரிகளும் வியந்து பாராட்டிய கட்சிக்கட்டுப்பாடு, இன்றைக்குக் காணாமலேயே போய்விட்டதோ?


மதுரை நாடாளுமன்றத்தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் சு வெங்கடேசன் மதுரைத் தொகுதிக்கென்றே தனியாகவொரு  தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாராம்! CPI நல்லகண்ணு, திமுக ஆசாமிகளை மட்டும்   படத்தில்  காண முடிகிறது. சு.வெங்கடேசன், எழுத்தாளராக அறிமுகம் ஆகிக் கொண்டிருந்த அந்த நாட்களிலேயே கட்சியைத் தனது ஓட்டுவாலாகவே நினைத்தவர் என்பது கட்சி வட்டாரங்களில் உரக்கவே கேட்க முடிந்த அதிருப்திக் குரல்கள்தான்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு தேய்ந்து சிற்றெறும்பாக குறுகிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகத் தான் பார்க்கமுடிகிறது. தொடர்புடைய பதிவு இடதுசாரிகள் இங்கே தீண்டத் தகாத கட்சிகள் தானா?

ரங்கராஜ் பாண்டே இந்த வீடியோவைப் பகிர்ந்து இருப்பது எனக்கு ஆச்சரியம் இல்லை. திருமாவளவன் சிவன்கோவில் கட்டியதாகச் சொல்வதும் கூட! சலுகைகளுக்காக இந்து என்று சொல்லிக் கொள்வதும் கிறித்தவர்களாக வாழ்வதும் இங்கே மிகச் சாதாரணமாகிப்போய்விட்ட விஷயம். தேர்தல் நேரத்தில் இந்து வாக்குகளை இழக்கத் தயாராக ஏதாவதொரு  வேட்பாளரோ, கட்சியோ உள்ள தேசமா இது? !!   

ரெட்டியார்கள், கொண்டாரெட்டி ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும், நாயக்கர்கள் காட்டுநாய்க்கன் ஜாதிச் சான்றிதழ் வாங்குவதும் அப்படிச் சான்றிதழ் வாங்கி SC/ST சலுகைகளை அனுபவிப்பதும் இங்கே சர்வ சாதாரணம்! கிறித்தவ மதத்துக்கு மாறி இந்து என்று சான்றிதழ் கொடுத்து SC/ST சலுகை அனுபவித்த ஒருவர் சிக்கிக் கொண்டபோது தொழிற்சங்கம் அவரை இப்படி பதிலெழுத வைத்துக் காப்பாற்றிய கதையையும் நேரடியாகவே அறிவேன்.  I am born as Hindu but practising christianity!  கேஸ் மூடப்பட்டது. அரசியல்ல  இதெல்லாம் சாதாரணமப்பா ரகம்தான்!
      
மீண்டும் சந்திப்போம்.
         

4 comments:

  1. //I am born as Hindu but practising christianity! //

    ஹூ.....ம்!

    ReplyDelete
    Replies
    1. பெருமூச்சு விட்டு என்ன பயன் ஸ்ரீராம்? என்னுடைய தொழிற்சங்கநாட்களில் இதைவிடப் பெரிய பெரிய அபத்தங்களை, சீரழிவுகளை பார்த்திருக்கிறேன்!

      Delete
  2. எழுத்தாளர்கள்கட்சியில் சேர்வது புதுசு.. சு வெங்கடேசன் போல தமிழகத்தில் வேறு ந்த எழுத்தாளராவது தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. இங்கே எழுத்தாளர்களுக்கென்றே ஒரு தனி அரசியல் இருக்கிறதே ஸ்ரீராம், கவனித்ததில்லையா என்ன?

      சு வெங்கடேசன் அரசியலில் குதித்த முதல் எழுத்தாளரல்ல! ஞானி சங்கரன் 2014 இளமக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகக் களம் இறங்கினாரே!

      Delete