Pages

Monday, March 25, 2019

காசுக்குக் கூவும் ஊடகங்கள்! காணாமலிருப்பது பலவீனம்!

மய்யத்தில் இருந்தே ஆரம்பிக்கலாமா? கோவையில் கமல் காசர் நேற்று அரங்கேற்றிய விஷயங்களை ராதா ரவியும் நயன்தாராவும் வந்து கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்! இப்படி பொருட்படுத்தவேண்டிய விஷயங்களை பின்னுக்குத் தள்ளுகிற வேலை எல்லாம் திட்டமிட்டே நடக்க்கிறதோ?


இந்த நபர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாம்! சிவில் சர்வீஸில் இப்படி ஆசாமிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

ஆனால் கமல் காசர் கோவையில் நேற்று மாஸ் காட்டினார் என்பதை ஊடகங்கள் சொல்லாவிட்டாலும் இன்றைய தொழில்நுட்ப வசதிகளில் எங்கே என்ன நடக்கிறது என்பதை எவரும் ஒளித்து வைக்க முடியாது. 


சுமந்த் சி ராமன் தூர்தர்ஷனில் Sports Quiz மட்டும் நடத்திக் கொண்டிருந்த நாட்களில் எல்லோராலும் விரும்பப் பட்டவராகத்தான் இருந்தார் என்று ஞாபகம்! அரசியல் விமரிசகர் அவதாரம் அவ்வளவாகப் பொருந்த மாட்டேன் என்கிறதோ? ஆளூர் நவாஸ் பற்றி சொல்லவே வேண்டாம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பின்னாலிருந்து இயக்குகிறவர் என்று கூடச் சொல்லப்பட்டதுண்டு. இருவரும் சேர்ந்து மய்யம் வெற்றி பெறுமா என்று விவாதிப்பது குருடும் குருடும் கூடிக் குருட்டாட்டம் ஆடுவதுபோலத்தான் இருக்கிறது. ஒருவிஷயம் நிச்சயம்! கமல் காசருடைய மய்யம், விசிக, மதிமுக, இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து வாங்கப் போகிற வாக்குகளைவிடக் கூடுதலாக, இரண்டு மடங்காகக் கூட வாங்கும் என்றுதான் தோன்றுகிறது!


அச்சு பிச்சு குமுதத்தில் வந்த இந்தக் கேள்வி என்னை ரொம்பவுமே உசுப்பிவிட்டிருக்கிறது போல!  


இப்படி வெள்ளந்தியாக அதேநேரம் விஷயத்தோடும் பேசிய விஜய்காந்தை இனிமேல் அதேபோல பேசிப் பார்க்க முடியுமா?  


ஆனாலும், பிரேமலதா கொஞ்சம் ஈடுகொடுத்து வருகிறார்!  

  
காசுக்கு கூவுவது PaidMedia என்பதெல்லாம் உருவாகும் முன்னே மிரட்டிக்காசு பறிப்பதாகத் தான் தமிழகத்தில் Investigative Journalism என்ற போர்வையில் நிறையக் காளான்கள் உருவாகின. அதில்   தராசு வார இதழ் முன்னோடி. இந்தப் பேட்டியில் தராசு ஷ்யாம் தேனொழுக பேசுவதை வைத்து  உண்மை முகம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 

ஊடகக் கூவல்களில் மயங்காமல் செய்திகளின் உண்மையைக் கண்டறிவது மிகவும் கடினமானதுதான்! இங்கே ஒவ்வொருவரும் அவரவர் சௌகரியத்துக்கேற்றபடி ஏதோவொரு உண்மையைப்  பேசுகிறார்கள்.அதில் எவருடைய, எந்த உண்மை நம்பத் தகுந்தது?  

கண்டறிய முயற்சிக்காமல் இருப்பது நம்முடைய பலவீனம்!  

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. //ஒருவிஷயம் நிச்சயம்! கமல் காசருடைய மய்யம்......//

    அப்படித்தான் நடக்கும் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜீவி சார்! உதிரிகளுடைய ஆட்டத்தைப்பார்க்கும்போது, மய்யம் கொஞ்சம் கூடுகளான வாக்குகளைப் பெறுகிற வாய்ப்பு பிரகாசமாகவே தெரிகிறது.

      Delete
  3. ஓ... அடுத்த விஜயகாந்த், கமல் ஹாசர் என்கிறீர்களா (4% வாக்கு).

    விஜயகாந்த் (பாவம்... பல வருடங்களுக்கு முன்னாலேயே அரசியலுக்கு வந்திருக்கலாம்) நல்லா வெள்ளந்தியா உண்மையைப் பேசுவார். ஆனால் அவர் பெரிய லெவலுக்கு வந்திருந்தால், அவரை டம்மியாக்கிவிட்டு, மனைவி, மச்சான், மகன் போன்றோர் நாட்டாமை ஆகியிருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நெல்லைத்தமிழன்! கமல் காசர் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலுமே கூட கள யதார்த்தத்தை புறக்கணிக்க முடியவில்லை. இங்கே ஜனங்களிடம் திமுக அதிமுக இரண்டுமே வேண்டாம் என்கிற எண்ணம் சிலகாலமாகவே வலுத்துவருவதை, இந்தமுறை கமல் காசர் அறுவடை செய்து கொள்வார் என்றுதான் தோன்றுகிறது.

      விஜயகாந்த் கட்சி ஒரு வித்தியாசமான பரிசோதனை. வெற்றிதோல்விகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கட்சி ஆரம்பித்த புதிதில் உள்ளாட்சித் தேர்தல் முதற்கொண்டு எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிட்டு, தனக்கென்று 8% என்று ஆரம்பித்து 12% வரையிலான வாக்குவங்கியை உருவாக்கினார்.
      கமல் காசர் கட்சி அந்த அளவு தாக்குப்பிடிக்கும், தனித்தே நிற்கும் என்றெல்லாம் நம்புவதற்கில்லை. படித்த, நடுத்தர மக்களும் தொழிலதிபர்களும் ஆதரிக்கிற ஒரு கட்சி, ஒரு தோல்வியைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பது இங்கே அரசியல் அனுபவப்பாடம்.

      Delete