Pages

Thursday, April 18, 2019

மீனாட்சி தேரு பாத்தாச்சு! அப்புறம் ..?

எங்கள்Blog ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை வீடியோ என்றே ஒரு வீடியோவை பாடல்வரிகளுடன் வேறு சில தகவல்களையும் சேர்த்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார. அவருடன் போட்டிபோட முடியாதென்றாலும், இன்றைக்கு மதுரையில் மீனாட்சி தேரோட்டம் என்பதால், எப்போதும் இருக்கிற அரசியல் சமாசாரங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு பழைய பாடல், 


தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் என்று பாடக்கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. தேரோடினால் மட்டும் போதுமா? வைகையில் நீரோட வேண்டாமா?

   
    
கட்டோடு குழலாட அடவென்று ஆடினால் உள்ளம் கொள்ளை போகாதா என்ன?


அரசியல் அபசுரங்களில் இருந்து சற்றே விலகிக் கொஞ்சம் நல்ல பாட்டுக்களாகத்தான் கேட்போமே என்று ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய பொழுது!


3 comments:

  1. //தேரோடினால் மட்டும் போதுமா? வைகையில் நீரோட வேண்டாமா?//

    அதனால் என்ன? "நீரோடும் வைகையிலே" பாடலை பகிர்ந்துவிட்டால் போகிறது!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி இப்படி எதையாவது சொல்லி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் ஸ்ரீராம்! கோடை ஒருபக்கம் தண்ணீர்ப்பஞ்சம் ஒருபக்கம் என்று மதுரை கிடந்து அல்லாடுகிறது,

      Delete
    2. சென்னை ஒன்றும் குறைச்சலில்லை ஸார். பல பகுதிகளில் தண்ணீரே இல்லை. நிறைய பேர்கள் வீட்டைக் காலி செய்து வேறு வீடு செல்கிறார்கள்.

      Delete