Pages

Sunday, June 30, 2019

அரசியல் இன்று! காமெடி கலாட்டா!

ஞாயிற்றுக்கிழமை கூடவா  சீரியஸ் பதிவு  என்று அலுத்துக் கொள்கிறீர்களா? கொஞ்சம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கிற கலாட்டாக்களைத் தொடர்ந்து கவனித்தால்  செம காமெடி மூடு களைகட்ட ஆரம்பித்துவிடும்!  சந்தேகமே வேண்டாம்! சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ்காரர்கள் எதற்காகவாவது கூடினார்கள் என்றால், கண்டிப்பாக வேட்டி கிழிப்பு , அடிதடி, கைகலப்பு என்றெல்லாம் முந்தைய நாட்களில் செய்தி வராமல் இருக்காது. இதை விகடன் தளம் உறியடி கட்டி வேறு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 


மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சஸ்பென்ஷன் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிற கராத்தே தியாகராஜன் இருவருமே காங்கிரசில் பானாசீனா கோஷ்டி என்று அறியப் பட்டவர்கள் என்பதில் பானாசீனா கோஷ்டியுமே உடைகிறதா என்ற கேள்வியை சில ஊடகங்கள் எழுப்பியதில், பானாசீனா ரொம்பவுமே அப்செட். திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் ஏற்படுகிற மாதிரியானதில் தன்பெயரும் சேர்த்து உருட்டப்படுவதில் பானாசீனா உஷாராகி கராத்தே பேசினது தப்பு, கே எஸ் அழகிரியிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டாலும் கராத்தே விடுவதாயில்லை!   சந்தடிசாக்கில் கராத்தே கோபண்ணாவின் வேட்டியையும் சேர்த்து உருவிவிட்டது இந்த வாரத்தின் காங்கிரஸ் காமெடி! 


நாம்தமிழர் கட்சியின் துரைமுருகன் தண்ணீர் பிரச்சினையை ஒட்டி  இசுடாலின், எடப்பாடி , H ராஜா மூவரையும் வைத்து  ஒரு அரசியல் பகடி செய்திருக்கிறார் சரி! பாலிமர் தொலைக்காட்சி மீது என்ன கோபம்? போகிறபோக்கில் அதையும் வச்சு செய்திருக்கிறார்! நகைத்து வையுங்களேன்! 


வைகோவை மறந்தால் தமிழ்நாட்டில்அரசியல்   காமெடி நிறைவடையுமா? ஆசியா நெட் தமிழில் வைகோவுக்கு  என்னமோ ராஜ்யசபா போவதில் அக்கறை இல்லை  என்கிற  மாதிரி ஒரு செய்தி! நாளைக்கு திமுக தரப்பில்  யார் யார் என்பது தெரிந்துவிடும்! இருந்தாலும் திருட்டுத் திராவிடம் 3.0 என்ற தலைப்புக்காகவே இந்த நையாண்டியை ஒருதரம் பார்த்துவிடலாம்!

மீண்டும் சந்திப்போம். 
         

2 comments:

  1. எதுக்கும் நம்ம வேஷ்டிய இறுக்கமாப் புடிச்சுக்குவோம்!...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா! நான் வேஷ்டிதான் கட்டுகிறேன்! :-)))

      Delete