Pages

Thursday, June 6, 2019

கரண் தாப்பர்! இசுடாலின்! கே எஸ் அழகிரி! காமெடி டைம் !

செய்தி , விவாதங்களுக்காக ஆங்கில சேனல்களைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு கரண் தாப்பர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. 63 வயதாகும் தாப்பர் டூன் ஸ்கூல் அப்புறம்  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்த  பிரபலமான பத்திரிகையாளர். 2007 அக்டோபரில்  அஹமதாபாத்துக்குப் போய் நரேந்திர மோடியைப் பேட்டி காணச் சென்றார். பிரிடிஷ் உச்சரிப்புடன் குற்றம் சாட்டுகிற தொனியில் தோண்டித்துருவுகிற கேள்விகளுடன் ஆரம்பித்தவரை, மூன்றே நிமிடங்களுக்குள் அந்தப் பேட்டி மோடியால் முடித்து வைக்கப்பட்டது என்பது சுவாரசியமான பழைய கதை. பாருங்கள்!


ஸ்வபன் தாஸ் குப்தா! பிஜேபியின் ராஜ்ய சபா எம்பி என்பதோடு இவரும் பிஜேபியைக் குறித்து தெரிந்து கொள்ள உதவியாக நிறைய செய்திக்கட்டுரைகளை நாளேடுகளில் எழுதி வருபவர். இவரை கரண் தாப்பர் நேற்றுமுன்தினம் சந்தித்த நேர்காணல் இது. வழக்கமான aggressiveness, குறுக்கீடுகள் இல்லாமல் கரண் தாப்பர் எடுத்த அடக்க ஒடுக்கமான பேட்டி இது என்பது கூடுதல் விசேஷம். Bullying என்கிற  மேலே விழுந்து பிராண்டுகிற ரகம் கரண் தாப்பருடையதாக ஒருகாலத்தில் இருந்தது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது.  


நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பிரதமர் ஆனது, இந்தியா வாக்களித்த விதம், வாஜ்பாய், மோடி இருவருக்குமான வித்தியாசங்கள் என்று நிறைய விஷயங்களை ஸ்வபன் தாஸ் குப்தா இந்தப்பேட்டியில் விவரிக்கிறார். பார்க்கவேண்டிய நேர்காணலாக இதைப் பரிந்துரைக்கிறேன்.  




அரசியல் கூட்டாளிகள் ஒருவருக்கொருவர் சும்மா, காமெடிக்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம்! 

மீண்டும் சந்திப்போம்.
   

No comments:

Post a Comment