Pages

Wednesday, August 14, 2019

தேசபக்திப்பாடல்கள்! கொஞ்சும் தமிழில்!

நாளை சுதந்திரத்திருநாள்! விடுதலையைக் கனவிலேயே கொண்டாடிய  பாரதி இப்படி ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று! எப்படி ஆடிப்பாடினாரோ நமக்குத் தெரியாது! ஆனால் இங்கே அபிநயித்துப் பாடுகிறார்கள்! ஆடுவது பாடுவது 3 வது நிமிடம் முதல் தொடங்குகிறது. 

வெள்ளிப்பனிமலை மீதுலாவுவோம்! இப்படிக்கு கம்பீரமாக பாரதியைத் தவிர வேறு யார் பாடியிருக்க முடியும்?


வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்றும் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்றும் பாட பாரதியைத் தவிர இங்கே யார் இருந்தார்கள் ?


  
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே --வாய்ச்சொல்லில் வீரரடி! இந்த வரிகளைக் கேட்கும்போது சிதம்பரம் என்று பெயர் உள்ளவன் எல்லாம் வ உ சிதம்பரம் பிள்ளை போல நாட்டுக்குழைத்த தியாகி ஆகிவிட முடியுமா என்ற ஏக்கமும் கோபமும் தான் வருகிறது! #நடிப்புச்சுதேசிகள் 


அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி கிளியே --ஊழல் சனங்களடி  என இன்றைக்கு காங்கிரஸ்காரன் என்று சொல்லிக் கொள்கிறவர்களைப் பார்த்துக் காறி உமிழ்ந்திருப்பானோ பாரதி என்கிற எண்ணம் வருகிறதே!  

சுதந்திரம் என்பது எவரோ கொடுத்து எவரோ வாங்கிக் கொள்கிற பண்டம் அல்ல. சுதந்திரம் என்பது அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

நண்பர்களுக்கு இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

ஜெய் ஹிந்த்! மீண்டும் சந்திப்போம்.
    


     

1 comment:

  1. இனிய சுதந்திதின வாழ்த்துகள்!

    //சுதந்திரம் என்பது எவரோ கொடுத்து எவரோ வாங்கிக் கொள்கிற பண்டம் அல்ல. சுதந்திரம் என்பது அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?//

    உண்மையான வரிகள்.

    நல்ல பாடல்களுடன் பதிவு சிறப்பு

    கீதா

    ReplyDelete