Pages

Tuesday, September 3, 2019

விங் கமாண்டர் அபிநந்தன்! வீரம் மீசையிலா இருக்கிறது?

விங் கமாண்டர் அபிநந்தன்! பெயர் சொன்னதுமே அவருடைய கம்பீரமான ஹாண்டில்பார் மீசையுடன் கூடிய முகம் தான் நினைவுக்கு வருகிறது இல்லையா! 


தனது சேவைக்காக வீர் சக்ரா விருது பெற்ற இந்த இளைஞன் நேற்றைக்கு மீண்டும் ஊடகங்களின் பார்வைக்கு வந்திருப்பது என்னைக் கவர்ந்த செய்திகளில் மிக முக்கியமானது. மீண்டும் பணியில் முழுத்தகுதிகளுடன் சேர்ந்திருக்கும் அபிநந்தனும்  இந்த மாதம்   ஓய்வு பெற இருக்கும் விமானப்படைத் தலைவர் BS தனோவாவும்  சேர்ந்து ஒரு  மிக் 21 விமானத்தில் defensive ஆக இருக்கும் நிலையில் இருந்து offensive ஆக நடத்தும் sortieயை நடத்தியிருக்கிறார்கள்! 

  
விமானப்படைத்தலைவர் BS தனோவா மனம்திறந்து தனக்கும் அபிநந்தனுக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளைப் பெருமையுடன் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். முதலாவது தாம் இருவரும் விமானத்தில் இருந்து eject ஆனவர்கள்! விமானம் தாக்கப்பட்ட போது அபிநந்தன் eject ஆனபோதுதான் POK பகுதியில் இறங்கி பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்டார் என்பது ஞாபகம் வருகிறதா? அடுத்ததாக தாங்கள் இருவருமே பாகிஸ்தானை எதிர்த்துப் போரிட்டவர்கள்! (கார்கில் போரில் தனோவா இதே மிக்21 விமானத்தில், பாகிஸ்தானிய வீரர்களுக்கு சப்ளை வழியைத் தகர்த்தவர்)  மூன்றாவதாக தனோவா அபிநந்தனுடைய தந்தையுடனும், இப்போது மகனுடனும் பறந்த அனுபவத்தையும் சொல்லிப் பெருமிதம் கொள்கிறார் என்பதற்குமேல் பெரிதாக ஒரு வீரனுக்கு வேறென்ன வேண்டும்? பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நடந்த இந்த நிகழ்வின் வீடியோ 24 நிமிடம்.


பிரபலமான அந்த ஹாண்டில்பார் மீசையை இப்போது காணோம் என்பதுதான் ஒரே வித்தியாசம்!

வீரம் மீசையிலா இருக்கிறது?

மீண்டும் சந்திப்போம்.
              

4 comments:

  1. அதானே!...

    வீரம் மீசையிலா இருக்கிறது?..
    வீரத்தில் அல்லவா வீரம் இருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. அதானே என்றால் அதேதான்!

      வாங்க துரை செல்வராஜூ சார்! சொந்த ஊருக்குவந்து குலதெய்வம் கோவிலில் கொடை என்று முடித்துவிட்டு குவைத் திரும்பியாகிவிட்ட செய்திகளையும் களத்துமேட்டுக் காவல்தெய்வம் என்று தொடராகவும் எழுதிக் கொண்டிருப்பதை வாசித்தேன்.

      Delete
  2. பாகிஸ்தான் இவர் பெயரில் ஒரு காமெடிப்படம் எடுப்பதாய் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களால் அப்படித்தான் மனதைத் தேற்றிக் கொள்ள முடியும், ஸ்ரீராம்! 1965 போரில் தோற்றதையே இன்னமும் ஒப்புக்கொள்ளாத நாடு அது!

      Delete