Pages

Tuesday, November 26, 2019

அரசியல் சாசனம் படும் பாடு! இன்று அரசியல் சாசன தினம்!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26 இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று மதியம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுடைய கூட்டுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகள் இதைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் சாசனத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப் படுத்தியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.


கீழே வீடியோ The Print     தளத்தில் நேற்றிரவு சிவசேனா தனது புதுக் கூட்டாளிகளுடன் மும்பை  நட்சத்திர ஹோட்டலில் We are 162 என்று ஷோ காட்டியதற்கு கொஞ்சம் முன்னால் வலையேற்றப்பட்டது.  தெரிந்து கொள்ள  கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள் இதில் இருக்கின்றன. வீடியோ 24 நிமிடம்.




இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுஹாஸ் பல்ஷிகர்  இன்று அரசியல் சாசன தினம் என்பதை ஒட்டி எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை, அரசியல் சாசனமும் சட்டங்களும்  நம்மூர் அரசியல்வாதிகளிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடுபடுகிறது என்பதை மஹாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளை விளக்குகிறது. அரசியலைப் புரிந்துகொள்ள விரும்புகிற நண்பர்கள் படித்துப் பார்க்கலாம்.


இன்று உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.  அதன்படி, இடைக்கால சபாநாயகரை வைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவும் நாளை மாலை 5 மணிக்கு சட்டசபையில் பலப்பரீட்சை நடத்தவும்  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. ரகசிய வாக்கெடுப்பு இல்லை என்பதும் நேரலை ஒளிபரப்பு இருக்க வேண்டும் என்பதும் உத்தரவின் இதர அம்சங்கள்.

உச்ச நீதிமன்ற விசாரணையும் மஹா இழுபறியும்  இன்னும் தொடர்கிறது என்பது மட்டுமே தற்போதைய நிலவரம். 

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment