Pages

Friday, December 13, 2019

பட்டிக்காட்டான் ஜெய்!

பட்டிக்காட்டான் பட்டணத்தில் என்ற வலைப் பதிவிலும் பின்னர் கூகிள் ப்ளஸ்ஸிலும் எழுதிவந்த தேனிக்கார இளைஞர், நண்பர்  பட்டிக்காட்டான் ஜெய்  மாரடைப்பினால் காலமானார் என்ற துயரமான செய்தியை பதிவர் சேட்டைக்காரனுடைய முகநூல் பகிர்வில் பார்த்தேன். நேரில் முகம்பார்த்துப் பழகவில்லை என்றாலும் பதிவுலகிலும் கூகிள் ப்ளஸ்ஸிலும்  நல்ல நண்பராக இருந்தவர். மறைவுச் செய்தி உண்மையிலேயே கலங்கச் செய்கிறது.


என் தாய் உள்பட இந்த ஆண்டு, காலம் பிரித்தவர்கள் அனேகம். ஆனால், எனது வலையுலக நண்பர் Pattikattaan Jey காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சென்று வா நண்பா, அவ்வுலகில் அமைதி கொள்! ஓம் சாந்தி!  

பதிவுலகில் பழக்கமான நமக்கே இவ்வளவு வருத்தமாக இருக்கிறதென்றால் அவரைப் பிரிந்து வாடும் மனைவி, குழந்தைகள் நிலைமை என்னவாக இருக்கும்?

ஆண்டவனே காப்பு. நண்பர் ஜெய்க்கு அமைதியையும் நல்ல கதியையும் இறைவன் அளிக்கட்டுமென்று பிரார்த்தனை செய்வது ஒன்றே என்னால் முடிந்தது.

ஓம் சாந்தி!      

2 comments:

  1. he looks so young! condolences to his family members.

    ReplyDelete
    Replies
    1. இளைஞர் தான் பந்து! கூகிள் பிளஸ்சில் மிகவும் கலகலப்பாக இருந்தவர். தன்னுடைய இரு குழந்தைகள் மீது அதிகப்பாசத்தை வெளிப்படுத்திய பகிர்வுகள் படங்களை பார்த்திருக்கிறேன். சொந்தமாக ஒரு தொழில் முயற்சியில் இறங்கப்போவதால் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க முடியாது என்று சொன்னதோடு அந்த முடிவில் கடைசி வரை உறுதியாக இருந்தவர்.

      நேற்றைக்கு என்னைக் கலங்கடித்த செய்தி அவரைப்பற்றியது தான்.

      Delete