Pages

Saturday, January 11, 2020

இன்று மதன் ரவிச்சந்திரனிடம் சிக்கிக்கொண்டது #ஜகத்காஸ்பர்

மதன் ரவிச்சந்திரனுடைய அதிர்ஷ்டமோ என்னவோ அவருடன் விவாதத்தில் சிக்குகிற சில ஆடுகள்! சிக்கியவர் மீது எந்தவிதமான அனுதாபமும் எழாமல் இருப்பது மிகவும் விசேஷம்! இன்றைய #சதுரங்கம் நிகழ்ச்சியில் மதனிடம் சிக்கிக் கொண்ட ஆடு ஜகத் காஸ்பர் என்கிற பாதிரி!  


கருணாநிதி காலத்தில் ராசியானமகள் கனிமொழி சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்திய சமயத்தில் கூடவே வெளிச்சம் விழுந்த நபர். இந்த 25 நிமிடவீடியோவில் #பாதிரிசில்மிஷங்கள் பற்றிய கேள்விகளுக்கு, மிக வினோதமான பதில்கள் சொல்கிறார். வைகோவைப் பற்றிப்பேசும்போது தமிழினத்தைக் காயடித்தவர்களில் ஒருவர் என்கிறார். சீமானைத்தவிர எல்லோருடனும் சிநேகிதமாக இருப்பதாகச் சொல்கிறார்.  

எத்தனை விபரீதமான வேடிக்கையான ஆசாமிகளால் தமிழக அரசியல்களம் நிறைந்திருக்கிறது என்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்? மதன் ரவிச்சந்திரன் மாதிரி இளம் ஊடகக்காரர்கள் கொஞ்சம் துணிச்சலுடன் கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பது நம்பிக்கைதருவதாக இருப்பது ஏன் என்று விளங்கிக்கொள்ள முடிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.   

No comments:

Post a Comment