Pages

Thursday, February 6, 2020

கொஞ்சம் பதில் சொல்லித்தான் ......பாருங்களேன்!

முந்தைய பதிவில் சேகர் குப்தா எப்படி முக்கியமான ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு, விடையைத் தேட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் என்பதைக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் மீதான தகுதிநீக்க விசாரணையின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க செனேட் சபையில் நடந்து கொண்டிருப்பதன் நேரலை வீடியோவையும் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட எட்டுமணிநேர வீடியோ அது. யாரும் திறந்து பார்த்திருக்க மாட்டீர்களே! 😃😂

வீடியோ 17 நிமிடம் 

ஏற்கெனெவே தெரிந்ததுதான்! மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லை என்பதால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறாரே தவிர, அவர் அந்தக் குற்றங்களைச் செய்யவே இல்லை, நிரபராதி என்பதால் அல்ல! 52 க்கு 48 என்ற வாக்குகளில் impeachment செய்யப்படுவதில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பில் க்ளின்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவருமே impeach செய்யப்பட்டவர்கள் தான்! இருவர் சுமக்கும் கறைகளே வேறுவேறுதான்! இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றியே இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.     

  1. ட்ரம்ப் வெளிப்படையாக மோசமானவர். அவ்வளவு தான். இவர் மோசம் என்பதால் மற்றவர் உத்தமர் என்பதல்ல. நான் இப்படித்தான் என்று அவர் இருப்பதால்தான் யாருமே அவரை எதிர்க்க முடியவில்லை. யாருக்குமே அவரை எப்படி எதிர்ப்பதென்று தெரியவில்லை. இன்றைய தேதியில், வரும் எலெக்ஷனில் அவர் வென்று வர மிக அதிக வாய்ப்பிருக்கிறது. டெமாக்ரட் எல்லோரும் கோமாளித்தனமாக உளறுகிறார்கள். ரிபப்லிக்கன் பார்ட்டியை பொறுத்தவரை, இவர் கண்டிப்பாக ஜெயிக்கக் கூடிய குதிரை. அதனால் கண்ணை மூடிக்கொண்டு இவர் பின்னால் இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை, ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்!
    ReplyDelete
    Replies
    1. ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்! super
      Delete
    2. வாருங்கள் ஜோதி ஜி!

      அமெரிக்க ஜனநாயக நடைமுறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பிரச்சினைகளை அவர்கள் அணுகும் முறையே வேறு, முடிவு செய்யும் விதமும் வேறு! அங்கே அதிபரை தனிநபராகப் பார்ப்பதில்லை. Embodiment of Law என்று மட்டுமே பார்க்கிறார்கள். சட்டத்தின்படி நடக்கிற சட்டப்படியே எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதன் அடையாளமாகவே அமெரிக்க அதிபர் முழு அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அதுவே கேள்விக்குள்ளாக்கும் போது என்ன செய்வது? தகுதிநீக்கம் எப்படிச் செய்யப் படுகிறது?

      இர்விங் வாலஸ் எழுதிய The Man நாவல் பற்றிய சிறு அறிமுகம் இந்தப்பக்கங்களிலேயே இருக்கிறது முடிந்தால் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்! எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் நிறையவிஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

      2016 அதிபர் தேர்தலில் இருபெரிய கட்சிகளுமே மிக மோசமான வேட்பாளர்களைத்தான் அதிபர் பதவிக்கு நிறுத்தினார்கள் என்பதில் இருப்பதில் எது ஆகக் குறைந்த மோசம் என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு மட்டுமே அமெரிக்க வாக்காளர்களுக்கு இருந்தது. டெமாக்ரட் வேட்பாளர் ஹிலாரி க்ளின்டன் ஆகப்படுமோசமான நம்பகத்தன்மையற்றவர் என்பதாலேயே டொனால்ட் ட்ரம்ப் ஜெயிக்க முடிந்தது. தேர்ந்தெடுத்த தருணத்தில் ட்ரம்ப் மீதான நம்பிக்கை விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது.

      இருநாடுகளுமே ஜனநாயக முறைப்படி தேர்தல், வாக்குச்சீட்டு மூலமாகத் தேர்ந்தெடுக்கின்றன என்ற ஒருவிஷயத்தைமட்டும் வைத்து இந்தியச்சூழ்நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாது.
      Delete
    3. வாருங்கள் பந்து!

      அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு நீங்கள் எழுதியிருப்பதை ஜோதிஜி எப்படிப் புரிந்து கொண்டு எதனால் super என்று சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. அதனால் அவர் சொன்னதற்கே பதில் சொன்ன மாதிரி இருந்தாலும், உங்களுடைய வாதத்துக்கும் அதிலேயே பதில் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.
      Delete
  2. இப்போது சேகர் குப்தா 17 நிமிட வீடியோவில் என்ன முடிவாகச் சொல்ல முடிந்தது என்பதைக் கவனியுங்கள்! இங்கே நரேந்திர மோடி என்கிற தனிநபர் மீது, (பிஜேபி என்ற கட்சி மீதல்ல) இந்தியவாக்காளர்கள் நம்பிக்கை வைத்திருப்பது 2024 தேர்தலிலும் தொடரும் என்பதான நிலைமை எதனால்?

    வெறும் வலதுசாரி தேசியவாதம் என்று வார்த்தைகளால் மட்டுமே விளக்கக் கூடிய விஷயமா இது?
    ReplyDelete
  
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் பதில் சொல்லத்தான் முயற்சித்துப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம் 

தொடர்புடைய பதிவுகள்:

தேசியவாதம் பேசும் வலதுசாரிகள் ஏன் ஜெயிக்கிறார்கள்?



   

5 comments:

  1. இந்த இம்பீச்மெண்ட் அமெரிக்காவில் கண்டு கொள்ளப்படவேயில்லை! எல்லோருக்கும் தெரியும் இது செனட்டில் தோற்கும் என்று. இதை முழு மூச்சாக முனைந்து செய்து தங்களுக்கு அரசியல் தெரியாது என்று மற்றும் ஒரு முறை டெமாக்ரட்கள் நிரூபித்திருக்கிறார்கள். ட்ரம்ப் ஆதரவாளர்கள் மொத்தமாக அவர் பின் திரளவே வழி வகுத்திருக்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      //ஆன்டி ஜான்சன், பில் க்ளின்டன் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் ஆனாலும் செனெட் சபை விசாரணையில் மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லாததால், தப்பித்தார்கள் என்ற வரிசையில் இன்று டொனா ல்ட் ட்ரம்ப் மூன்றாவது நபராகச் சேர்கிறார். முந்தைய இருவரை விட மிக வித்தியாசமான விபரீதமான விடுவிப்பு இது என்பதிலும் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய கறைபடிந்த வரலாறு படைக்க இருக்கிறார்.//

      இது இங்கே செனெட்டில் விசாரணை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு எழுதியது https://akkampakkamennasethi.blogspot.com/2020/02/blog-post.html செனெட்டில் தோற்கும் என்பதுதான் இதற்கு முன்னாலும் நடந்திருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் வெற்றிமிதப்பில் மிட் ராம்னியை மறைமுகமாகக் குத்திக் காட்டியதை NBC நேரலையில் பார்த்தேன்.

      முந்தைய பதிவின் ஒரிஜினல் கேள்வி அதெப்படி உலகம் முழுவதும் பரவலாக தேசியவாதத்துடன் வலதுசாய்கள் தலையெடுக்கிறார்கள் என்பதைப் பற்றியது. டொனால்ட் ட்ரம்ப் இப்போது தம்பட்டம் அடித்துச் செய்ததைத்தான் ஒபாமாவும் சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்தார் என்கிற நிலையில் டெமாக்ரட்டுகள் அரசியல் தெரியாமல் செய்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? செனெட்டில் தோற்கும் என்பது தெரிந்தே, இதை 2020 நவம்பர் தேர்தல் பிரசாரத்துக்கான முன்னோட்டமாகச் செய்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாமா?

      Delete
  2. இதே போல ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பு இணைப்பு கொடுத்து விடுங்க. மற்றொரு தளத்தில் உள்ள தலைப்புகளையும் இரண்டு பக்கமும் கொடுக்கலாம். நான் மின் அஞ்சல் ட்விட்டர் வழியாகவே உங்கள் பதிவுக்கு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதி ஜி!
      .
      இங்கே பகிவுகளில் நிறைய அரசியல் விஷயங்களைப் பேசி வருகிறேன் என்பதில் எல்லாமே ஒரு உரையாடலை முன்னெடுக்க ஆசையுடன் இருப்பதையும் நான் அவ்வப்போது சொல்லிவருகிறேன்.

      இங்கே தொடர்புடைய பதிவுகள் என முந்தைய இருபதிவுகளுக்கு தொடுப்புக் கொடுத்ததும் கூட ஒரு காரணமாகவே. முதலாவது தொடுப்பு நேற்றைய பதிவுக்கானது. அதன் பிரதான கேள்வியே சேகர் குப்தா அந்த 17 நிமிட வீடியோவில் ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு, விடைதேட முடியாமல் தவிக்கிறார் அதை மேலே பதிவிலே என்னுடைய கடைசிப்பின்னூட்டத்தில் எழுதியிருப்பதை மறுபடி கவனப்படுத்துவதற்காகவே இந்தப்பதிவு.

      இரண்டாவது தொடுப்பு உங்களுக்காகவே! //இர்விங் வாலஸ் எழுதிய The Man நாவல் பற்றிய சிறு அறிமுகம் இந்தப்பக்கங்களிலேயே இருக்கிறது முடிந்தால் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்! எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் நிறையவிஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்//

      இந்தப்புத்தகம் எழுதப்பட்ட காலம் நிக்சன் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற நிலைக்கு முந்தையது. Andrew Johnson தகுதிநீக்கம் செய்யப்பட்டு செனேட் விசாரணையில் 2/3 வாக்குகளுக்கு ஒரே ஒரு vote குறைந்ததால் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட நாவல். முடிந்தால் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்! .

      Delete