Pages

Saturday, April 4, 2020

பீலா ராஜேஷ்! பானு கோம்ஸ்! சீனர்களை நம்பவேண்டாம்!

கொரோனா வைரஸ் தொற்றை மேலும் பரவவிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறைகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற இந்தநேரத்தில் சிலர் செயல்பாடுகள் பாராட்டப்பட வேண்டியதாக இருப்பதைச் சொல்லியே ஆக வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் C விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

  
பீலா ராஜேஷ் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் பேட்டி கொடுப்பதாக #பணப்பசி பானாசீனா பாராட்டுப்பத்திரம் கொடுத்திருப்பது என்ன மாதிரி ஆகப்போகிறதோ?  இந்த ஐஏஎஸ் அதிகாரியின் தாயார் ராணி வெங்கடேசன் முன்னாள் காங்கிரஸ் சமஉ என்பதால் இந்தப் பாராட்டா என்பதை பானாசீனாவின் ட்வீட்டர் செய்தியை வைத்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. 

முகநூலில் எழுதப்போவதில்லை என்று முடிவெடுத்திருந்த பானு கோம்ஸ் மறுபடியும் அங்கே எழுத ஆரம்பித்திருக்கிறார் என்பது கொஞ்சம் நல்ல செய்தி. மிகைப்படுத்தல் இல்லாமல் செய்திகளைச் சொல்கிறவர் என்று  பெயரெடுத்த ஒரு பெண்மணி திடீரென நான் இனிமேல் எழுதப் போவதில்லை என்று சொன்னதில் ஏக அதிர்ச்சி. திரும்பவந்திருப்பதில் மகிழ்ச்சி.

சீன வைரஸ் ஆரம்பித்தது முதல் உலகம் முழுவதும் பரவியது வரையிலான தேதி குறிப்பிட்டு வெளிப்படுத்தும் காணொளி. இரண்டு பாகங்களாக இருக்கிறது.

காணொளியை வெளியிட்டிருப்பவர் பெயர் Jennifer Zeng. சீனாவின் labour camp-லிருந்து தப்பித்து அமெரிக்காவில் சரணடைந்திருப்பவர். இப்போது நியூயார்க்கில் வாழ்ந்து வருகிறார்.

வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மர்மமான நடவடிக்கைகள், அடக்குமுறைகள், உயிர் பலிகள் குறித்த அனைத்தையும் உலக மக்களின் பார்வைக்கு தொடர்ந்து கொண்டுவருவதில் ஜென்னிபரின் பங்கு மிக மிக முக்கியமானது.

அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டொபர் இறுதி முதலே...சீன வைரஸ் குறித்த பல உண்மைகளை ..காணொளிகளோடு வெளிப்படுத்தி வருகிறார்.  



இந்த வீடியோ இணைப்பைக் கொடுத்திருப்பதும் மேலே உள்ள முகநூல் செய்தியில் தான்.

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. தொலைகாட்சி விவாதங்களில் தன் கருத்தை தெளிவாக கூறுவார் பானு கோம்ஸ். கொஞ்ச நாட்களாக அவரை எந்த விவாதத்திலும் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இங்கே சேனல் விவாதங்களில் தெளிவாகக் கருத்தை முன்வைப்பவர்கள் தேவையே இல்லை என்பதான சூழல் இருக்கிறதே அம்மா!

      Delete