Pages

Friday, October 23, 2020

ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி நான்? #குஷ்பு

எழுச்சித்தமிழன் என்று எந்த நேரத்தில் #விசிக தலைவர் திருமாவளவனுக்கு அடைமொழி கொடுத்துக் கூப்பிட ஆரம்பித்தார்களோ? மனிதர் நாளை அக்டோபர் 24 ஆம் தேதி விசிக   நடத்தவிருக்கும் மனுஸ்ம்ருதிக்கு எதிரான போராட்டத்துக்காக திருமாவளவன் பேசியது ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது திருமா பெண்களுக்கு எதிராக அநாகரீகமாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டுமென்று குஷ்பு அளித்திருக்கிற பேட்டி கீழே! வீடியோ 21 நிமிடம்.   


சனாதன தர்மத்தில் பெண்கள் பரத்தையர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருமாவளவனின் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமை சங்கத்தின் ஆந்திர மாநில அமைப்பு சார்பில திருமாவளவன் பேச்சை கண்டித்து அவருடைய உருவ பொம்மை எரிப்பு போராட்டம் திருப்பதியில் நடைபெற்றது.

திருப்பதியில் நாலுகால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவனுக்கு எதிராகவும், அவருடைய பேச்சு கண்டிக்கும் வகையிலும் கோஷம் எழுப்பிய சங்கத்தின் ஆந்திர மாநில தலைவர் கிரண் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திருமாவளவன் உருவபொம்மை எரித்து போராட்டம் நடத்தினர்.

மேலே செய்தியும் படங்களும் நன்றியுடன் இங்கிருந்து 


தமிழக அரசியலில் ஒரு குறைந்தபட்ச இடத்தையாவது பெறவேண்டும் என்கிற ஆர்வக்கோளாறில் மிகவும் புரட்சிகரமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு விசிக தலைவர் சமீபநாட்களில் பேசிவருவதற்குத் தமிழகத்தில் அத்தனை பெரிதாக ஆதரவு எதையும் காணோம். இருக்கும் கொஞ்சநஞ்ச தலித் ஓட்டுகளும் காணாமல் போய் விடுகிற சாத்தியக் கூறுகள்  நிறையவே இருக்கத் தான் செய்கிறது.
போதாக்குறைக்கு வருகிற சட்டசபைத் தேர்தல்களில் விசிக, திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது கழற்றி விடப்படுமா என்ற கேள்விக்கே இன்னமும் ஒரு தெளிவான பதில் இல்லாத நேரத்தில், இப்படி ஒரு சர்ச்சை வேறு.
வீரமணிகளே தொண்டை வரளக் கத்திக்  கூப்பாடு போட்டு ஓய்ந்துபோன ஒரு பிரச்சினையை திருமா இப்போது கையிலெடுத்திருப்பதில் அரசியல் செய்ய வேறு விஷயங்களே இல்லாமல் மிகவும் வறண்டு போய்க் கிடப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது!
திருமாவளவனுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்குமே உண்மையான பிரச்சினைகள் மீது மக்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்கிற எண்ணமே இல்லாமல் போயிருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.
என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள்?  
 
    

3 comments:

  1. தேர்தல் ஜூரப் பிதற்றல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வெறும் தேர்தல் ஜுர பிதற்றல்கள் தானா ஸ்ரீராம்? தெரிந்தே கக்கும் விஷமாக அல்லவா இருக்கிறது!

      Delete
  2. திருமா - காசு கிடைக்கும் என்றால், ராஜபக்‌ஷேதான் ராமர் என்று சொல்லுகிறவர். இப்போது அவருக்கு போக்கிடம் இல்லை. ஸ்டாலின், துண்டைப்போட்டு கழுத்தை இறுக்கி, எங்கள் சின்னத்தில் நின்றுகொள், பிச்சைக்காசாக இடங்கள் தருகிறேன்... உங்கள் சின்னத்தில் நின்றால் இரண்டு இடங்கள் கூட கிடையாது என்று சொல்லியிருப்பாராயிருக்கும். பிச்சை எடுப்பவர், எஜமானர்கள் சொல்வதற்குக் கட்டுப்படவேண்டியதுதானே. அதைத்தான் இப்போது செய்திருக்கிறார் திருமா.

    ReplyDelete