Pages

Sunday, January 10, 2021

#சண்டேபோஸ்ட் சமூக ஊடகங்கள்! சாபமா வரமா?

Twitter Inc. ஒருபுறம், முகநூல் மறுபுறம் தங்களது இலவச சேவைகள் ஒன்றும் சமூக சேவைக்கானது அல்ல, முழுக்க முழுக்க வியாபாரம், வேறு உள்நோக்கம் கொண்டவை என்பதை அப்பட்டமாக அறிவித்ததோடு 2021 ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது  வாட்சப் தகவல்கள் கட்டாயமாக  ஓனர் முகநூலோடு பகிர்ந்து கொள்ளப்படும், ஒத்துக் கொண்டால் வாட்சப்பைப் பயன்படுத்து இல்லாவிட்டால் வெளியே போ என்று அறிவித்திருப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள், சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன

வீடியோ 14 நிமிடம்  கொஞ்சம் விரிவான தகவல்களோடு.


அரக்கர்களால் ஆட்டுவிக்கப்படும் உலகு என்று கார்ல் சாகன் அன்றே சொன்னார் என்று ஒருவர் பெருமிதப் படுவதா? பொருமுவதா? நிம்மதி உங்கள் சாய்ஸில் தான் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!




நண்பர் பந்து ஏற்கெனெவே முகநூல் என்னென்ன விவரங்களை சேகரிக்கிறது, எப்படிப் பயன் படுத்துகிறது என்பதை விளக்கும் நெட்பிளிக்சின்  The Great Hawk  டாகுமெண்டரியை சிபாரிசு செய்திருந்ததில், பார்த்துக் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன் ட்வீட்டர் அல்லது முகநூல் தங்களது வாடிக்கையாளர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது  முன்பே தெரிந்த விஷயம் என்பதால், வாட்சப்பை முற்றிலும் நிராகரிப்பதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை.


       

வாட்சப்புக்கு மாற்றாக, டெலிகிராம், சிக்னல் என்று பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும் போது முகநூல் வாட்சப் என்று இன்னமும் கட்டிக்கொண்டு அழவேண்டும்?


மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment