Pages

Thursday, January 14, 2021

கண்டுகொள்வோம் கழகங்களை!


நண்பர்கள் அனைவருக்கும் சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழி நலம் சூழ!   

திமுகவின் 3ஆம் கலீஞர் என்று சொல்லப்படுகிற உளறல் நிதி, வெகுசீக்கிரமாகவே தமிழகத்தின் பாப்புலர் காமெடிப் பீஸ் ஆகிவிட்டார் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவும் மீம்ஸ், முகநூல் பகிர்வுகளிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது இந்தப் பொங்கல் தின சிறப்பு விசேஷம்.


  
தம்பி உதயநிதி ஜட்டுகல்லி விளையாட்டு பாக்குறத நானும் பாத்துட்டு இருக்கேன், ஒரு மாடு நமக்கு கிடைச்சிராதான்னு ஆளாளுக்கு கஷ்டபடுறாங்க, மாடு ஓடிருது
உழைப்பவனுக்கே நிலம் சொந்தம், பிடிப்பவனுக்கே மாடு சொந்தம்னு தலைவர் சொல்லிருக்காரு
நாம சொல்றோம், நம் ஆட்சியில அங்க காளைக்கு போராடுற‌ அத்தனைபேருக்கும் ஒரு காளைமாடு வழங்கபட்டு சமத்துவ ஜட்டுகல்லி நடைபெறும்.  


கண்டுகொள்வோம் கழகங்களை என்ற முகநூல் பக்கம் இப்படி திமுகவின் யோக்கியதையைப் படம்போட்டுக் கலாய்க்கிறது 



















யோகி ஆதித்யநாத் அரசு சட்டவிரோதமாக அல்லது லஞ்சம் கொடுத்துப் பணி உயர்வு பெற்ற சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது


இங்கே தமிழகத்தில் போலி ஜாதிச்ச சான்றுகளோடு மாநில அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் மீது இதேமாதிரி நடவடிக்கை எடுக்கப்படுமானால் எத்தனை ஆயிரம் பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதில் யாருக்கேனும் ஊகங்கள் இருக்கிறதா?

கண்டுகொள்வோம் கழகங்களை என்று சொன்னால் மட்டும் போதுமா? இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்கிற உறுதியான முடிவையும் எடுக்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்   
  

No comments:

Post a Comment