Pages

Wednesday, June 23, 2021

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை!

தினமலர் நாளிதழுக்கு என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்::: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை.  தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது. கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர். ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்! உண்மையிலேயே பரிதாபப் படுகிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா? எதுவாக இருந்தாலும் ஒன்றரை மாதத்திலேயே திமுகழக அரசின் லட்சணம் இதுதான் இப்படித்தான் என்றாகிவிட்டது மட்டும் நிச்சயம் 


இந்த ஒன்றியம் இவர்களிடம் படுகிற பாடு இருக்கிறதே! நீட் தேர்வு பற்றிய  பேச்சு எழுகிற சமயங்களில் எல்லாம் சினிமா நடிகர் சூர்யா தவறாமல் ஆஜராகி விடுகிறார் என்பது கூட தமிழக அரசியலின் இன்னொருவிதமான காமெடி! 


நாடாளுமன்றம்  நிறைவேற்றிய சட்டங்கள், திருத்தங்கள் மீது தீர்மானமோ ஆட்சேபமோ தெரிவிப்பது ஒரு  பயனுமில்லாத நேற்று அரசியல் ஸ்டன்ட் மட்டுமே! அதுபோலவே தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, தேர்வு ரத்து என்பதும் சட்டமசோதாவை  உச்சநீதிதிமன்றம் உறுதிப்படுத்திய பிறகு எடுபடாது என்று தெரிந்தே மாணவர்களையும் பெற்றவர்ளையும் குழப்பி ஏமாற்றுகிற வேலை! பின்னே வேறென்ன?   
   

தினமலர் நாளிதழ் இன்றைக்குப்பார்த்து எதற்காக இந்தக் கார்டூனை வெளியிட்டிருக்கிறார்கள்?பாமகவின் இரட்டைநாக்கும் ஆதாயம் இருந்தால் கூட்டணியை  மாற்றிக்கொள்ளும் வேகமோ புதிது அல்ல. 2021 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு திமுகவை நெருங்க பாமக எடுத்த முயற்சிகள், பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர் G K மணி மருத்துவர் ராமதாசின் தூதராகச் செயல்பட்டுவருவது எதுவுமே ரகசியமல்ல. ஆச்சரியமுமல்ல. 


முதல்வர் நல்ல முடிவெடுக்கப்படும் என்று சொன்னது போல மருத்துவர் ராமதாசும் முடிவெடுத்துவிடுவார் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. 


தினமலர் செய்தி மட்டும் உண்மையாக இருக்குமானால் தமிழகத்தில் பிஜேபி மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அடுத்து வரும் தேர்தல்களில் கழகங்களை, கூட்டணி வைக்காமலேயே தோற்கடிக்கிற அளவுக்கு வலிமை பெற்று வளருகிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டுமோ? A Party with a diference என எப்போதோ யாரோ சொன்ன கதையெல்லாம் பொய்தானாம்! அவர்களும் கழகங்கள், காங்கிரஸ், இதர கட்சிகள் மாதிரியே இந்தவிஷயத்திலும் என்று நீட்டி முழக்குகிறது தினமலர். 

டிஸ்கி: ஆனால் பிஜேபியின் மாநில பொதுச் செயலர்
K T  ராகவன் மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறார் 


அதேபோல H ராஜா மீது தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடுகட்டிக் கொண்டுவிட்டார் என்ற செய்தி அமமுக ஆசாமிகளால் பரப்பப்படுவதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் பகிர்கிறேன். 

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை என்பது சரிதான் போல. 

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment