Pages

Saturday, August 24, 2019

காவேரி நியூஸ் சேனலும் மதன் ரவிச்சந்திரனும்!

ஊடகவெளிச்சம் படுகிற  ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களால் பிரபலமாகிறார்கள் அல்லது பிரபலப் படுத்தப் படுகிறார்கள். கூடவே அந்த ஊடகமும்! இது இங்கே ஊடகங்களைப்பற்றிப் பொத்தாம் பொதுவாகச் சொல்வது தான் என்றாலும் ஊடகத்தைத் தாண்டியும் ஊடகக்காரர் பிரபலமாவதென்பது அநேகமாக இங்கே தமிழகச் சூழலில் நினைத்தே பார்க்க முடியாதது. இந்தப் பொதுவிதியை முதலில் உடைத்தவர் ரங்கராஜ் பாண்டே! தந்திடிவி இவரை வைத்து சேனல் செய்திகளில் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டதையும் மீறி, திமுகவோடு  பிசினெஸ் டீலிங்குக்காக வெளியே அனுப்பவும் தயங்கவில்லை. அந்த சேனலையும் மீறி, தனித்து நிற்க முடியும்! செல்வாக்கோடு ஊடகத்துறையில்  வெற்றிகரமாக  நீடிக்கவும் முடியும் என்பதை ரங்கராஜ் பாண்டே நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஏதோ அதிர்ஷ்ட வசமாக ரங்கராஜ் பாண்டே ஜெயித்து விட்டார்! அதே போல எல்லோராலும் முடியுமா என்கிற கேள்வி விடைக்காகக் காத்துக் கொண்டுதான் இருந்தது. மதன் ரவிச்சந்திரன் என்கிற இந்த 
இளைஞன் சமீபகாலமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருப்பதை பார்க்கும் வரை!  



இந்த வீடியோவை மூன்று தினங்களுக்கு முன் இந்தப்பக்கத்தில் பகிர்ந்து கொண்ட போதே இங்கு  மதன் ரவிச்சந்திரன் கேட்கிற கேள்விகளில் திருமாவளவன் எரிச்சல் அடைவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. மதனுக்குப் பின்விளைவுகள் எதுவும் நேராமல் அந்த பராசக்தி தான் காப்பாற்ற வேண்டும் என்று சேர்த்தே சொல்லியிருந்தது நினைவு இருக்கிறதா?


சமீப காலமாக நான் அதிகம் விரும்பி பின்தொடரும் தமிழக ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர். மக்கள் மத்தியில் பரவலாக இருக்கும் விமர்சனங்களை தைரியமாக முன்வைத்து களமாடுகிறார்.
4:43 PM · Jul 20, 2019Twitter for Android
200 ரூப்பீஸ் ஊடக வாய்ச்சவாடல் பரம்பரை கொத்தடிமை க்ரூப்பெல்லாம் ஒரேடியா கதறுதே.. யாரு அந்த காவேரி டிவி மதன் என்று பார்த்தேன். மனுசன் பின்னிப் பெடல் எடுத்திருக்காரு திருமா, சுபவீயையெல்லாம்! 
3 பகிர்வுக 
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் / Centre of Media Persons for Change என்று சுயஅறிமுகத்துடன் இப்படி ஒரு ட்வீட்

தங்களின் உரிமையை கேட்ட காவிரி தொலைகாட்சி ஊழியர்களை, தரக்குறைவாக நடத்திய நிர்வாக இயக்குனர் இளங்கோவனை வன்மையாக கண்டிக்கிறோம். போராடும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம். தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்.
2:22 PM · Aug 24, 2019Twitter for Android   

காவேரி நியூஸ் சேனலைத் தெரியாதவர்கள் கூட இப்போது யார் இந்த மதன் ரவிச்சந்திரன் என்று யூட்யூபில் தேடித்தேடி தடம் நிகழ்ச்சியைப் பார்ப்பது இப்போதைய நல்ல செய்தி!இந்த ஒன்றினாலேயே மதன் ரவிச்சந்திரன் தனித்து ஜெயித்து விடுகிற வாய்ப்பும் பெற்றுவிட்டார் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விக்குக் காலந்தான் பதில் சொல்லவேண்டும் என்றாலும் இந்த இளைஞன் ஜெயிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறன்! வாழ்த்துகிறேன்!  

எதனால் என்றும்  கொஞ்சம் பார்க்க வேண்டாமா?

பெரிய பெரிய தலைக்கட்டுங்களெல்லாம் நியூஸ் 7 செய்தியை உண்மைன்னு நம்பி பொங்கி இருக்கு!  

இங்கே ஊடகங்களில் உண்மையைப்பற்றி எவரும் கவலைப் படுவதில்லை! தவறைத் திருத்திக்கொள்வதுமில்லை!  


இப்படி நியூஸ் 7, புதிய தலைமுறை போல முடைநாற்றம் வீசும் ஊடகங்களிலிருந்து வேறுபட்டு நிற்பதில் மதன் ரவிச்சந்திரன் போன்றவர்களால் அவர்கள் பணியாற்றும் காவேரி நியூஸ் சேனலும் தனித்துத் தெரிகிறது. ஆனால் சுமங்கலி, சன் டைரக்ட் போன்ற DTH சர்வீஸ் வழங்குகிற நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்டாலும் காலம் இந்த சேனலையும் உயரத்துக்கு கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையை மதன் ரவிச்சந்திரன் போன்ற ஊடகக்காரர்கள் தருகிறார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள
யுனெஸ்கோ அமைப்பின் தலைமையிடத்
திற்கு சென்ற பாரத பிரதமருக்கு பாரத
பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்து
கௌரவித்தார் யுனெஸ்கோ டைரக்டர் ஆட்ரே
அசௌவ்லே.


இங்கே ஊடகங்களில் இந்தப்படமோ செய்தியோ வந்தமாதிரி உங்களில் எவருக்காவது தகவல் தெரியுமா?

மீண்டும் சந்திப்போம்.
  
     

No comments:

Post a Comment