Wednesday, August 21, 2019

உள்ளூர்க் காமெடி! செட்டிநாட்டுக் காமெடி கொஞ்சம் எக்ஸ்ட்ரா!

பானாசீனா விவகாரம் இங்கே ஒருமாதிரி காமெடியாகப் போய்க் கொண்டிருப்பதைப்  பார்ப்பதற்கு முன்னால் இங்கே ஒரு உள்ளூர்க் காமெடியையும் பார்த்துவிடலாம்! முனைந்து முனைவர் பட்டம் பெற்றவர் திருமாவளவன் என்று பாராட்டி எங்கேயோ எழுதிவிட்டேனோ? முனைவர் பட்டம் வாங்கப் படித்து, விஷயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிற அடிப்படைத் தேவை எல்லாம் கிடையாது என்கிற மாபெரும் உண்மையை மதன் ரவிச்சந்திரன் திருமாவளவனுடன் நடத்திய இந்த நேர்காணலில் தெரிந்து கொண்டேன்.


மிழகத்தில் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களில் நம்பிக்கை ஊட்டும் நபர்களாகத் தெரிந்த இருவர் வைகோ, தொல்.திருமாவளவன்! எப்படிக் காலம் செல்லச் செல்ல, தேய்ந்து படுபாதாளத்துக்குப் போய் விட்டார்கள் என்பதைப் பார்க்கையில் உண்மையிலேயே வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இப்படியானது அவர்களுடைய சொந்தத்தேர்வினால் தானே தவிர வேறு எவர்மீதும் பழிசொல்ல முடியாது. இங்கே மதன் ரவிச்சந்திரன் கேட்கிற கேள்விகளில் திருமாவளவன் எரிச்சல் அடைவது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. மதனுக்குப் பின்விளைவுகள் எதுவும் நேராமல் அந்த பராசக்தி தான் காப்பாற்ற வேண்டும்.  


அர்த்தமிழந்து போன புதியதலைமுறை சேனல் என்ன புதுப் புது அர்த்தங்களைத் தேடிக் கண்டுபிடித்துவிடப் போகிறதாம்? சுபவீ  செட்டியார் எப்படி  முட்டுக் கொடுத்து விடப் போகிறாராம்? ஒரு காமெடிக்காக வீடியோ 25 நிமிடம்.

  
இது சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற காமெடி டூன்! என்ன சொல்ல வருகிறார்? பானாசீனா கட்சிமாறாமல் நேர்வழியில் போய்க்கொண்டிருக்கிறார் என்றா? வாய்க்கொழுப்பு உச்சம் உள்ள ஒருவரை பிஜேபி வரவேற்கும் என்றா?
வாழ்க்கை ஒரு வட்டம்டா -அது
சுத்திவந்து ஆப்பு வைக்கும்டா
சும்மா ஒரு டிவிட்டு போட்டதுக்கே பாண்டிச்சேரிக்காரரை வீடு பூந்து கைது பண்ணவெச்சு எங்கப்பா நிதி மந்திரிடானு கெத்து காட்டினாரு எம்பி கார்த்தி சிதம்பரம். இப்ப அந்த அப்பாக்காரரே அப்ஸ்காண்டிங்🤪     


கபில் சிபல், எங்களின் மனு இன்று விசாரணைப் பட்டியலில் இல்லை. தற்போது தலைமை நீதிபதி அரசியல்சாசன அமர்வில் இருக்கிறார், மாலை 4 மணிக்குள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றார். இருப்பினும், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும், ஏற்கனவே இந்த மனு குறித்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கபில் சிபில் முறையிட்டார்.
ஆனால், நீதிபதி ரமணா பட்டியலில் இல்லாத மனுக்களை விசாரிக்க முடியாது என்று மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், " வழக்கமாக மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதிக்கு சென்று அவரின் பார்வைக்குப்பின்புதான் பட்டியலிடப்படும். காலையில் நாங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் மனுவில் குறையிருந்தது. மாலைக்குள் பட்டியலிட்டால் மட்டுமே எங்களால் விசாரிக்க முடியும் இல்லாவிட்டால் விசாரிக்க இயலாது. இது எங்களின் கைகளில் இல்லை " எனத் தெரிவித்தார்.
இதனால் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று தெளிவாகிறது.இதற்கிடையே ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் சிபிஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதாவது ப.சிதம்பரத்தின் ஜாமீன் குறித்து எந்தவிதமான உத்தரவு பிறக்கும் முன் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளன.
இதனால், ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெறுவதில் மீண்டும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு செக் வைத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்று இந்துதமிழ்திசை நாளிதழ் ஒப்பாரி வைக்கிறது.  அப்படியானால் .......?


தினசரி தள ஓனருக்கு இம்புட்டு நக்கல் ஆவாது! 

ஒரே ஒருதடவை ஜாமீன் கிடைக்காதுன்னு தெரிஞ்சதுலேயே இம்புட்டு பயம் ஓட்டமா? இல்லாத கான்ஸ்பிரசி தியரி எல்லாம் ஒவ்வொண்ணா வெளியே வருதே!  #சால்வைஅழகர் 
காமெடியை ரசித்தீர்களா? கொஞ்சம் யோசித்தீர்களா? 
மீண்டும் சந்திப்போம்.    

2 comments:

  1. கடைசி கார்ட்டூன் உட்பட அனைத்தையும் ரசித்தேன். ம ர வீடியோ பின்னர் தப்பாது பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்! குலதெய்வ பிரார்த்தனை நல்லபடியாக முடிந்ததா? முகநூலில் இருந்த சிறுசிறு பகிர்வுகள் தவிர எபி பக்கம்வரவே இல்லை போல.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)