ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் 2015 புத்தாண்டுப் பிறப்பையொட்டி நாளை ஆசிரமத்துக்கு வரும் அன்பர்களுக்கு வழங்கப்பட இருக்கும் தரிசனநாள்
செய்தி.
ஸ்ரீ அரவிந்த அனையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன். எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உள்ளது உள்ளபடியே !உன்னிடத்தில் சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள்வாய். தூய்மையும், அமைதியும், ஆனந்தமும் அருள்வாய். பிறக்கும் இந்தப் புத்தாண்டில் இந்த தேசத்தைப் பீடித்திருக்கிற அலட்சியம், பொறுப்பின்மை, செயலற்ற கோழைத்தனம் இவைகளால் பெருகியிருக்கும் ஊழல்,தீவீரவாதம்,பாதுகாப்பின்மை போன்ற இடர்பாடுகளில் இருந்து இந்த தேசத்தையும் ஜனங்களையும் பாதுகாத்தஅருள வேண்டும் தாயே! உன்னையல்லால் வேறு கதி ஏது அம்மா? நீயே காத்தருள வேணும்!
^****
ஜனவரி பிறந்தாலேயே புத்தகக்கண்காட்சி பற்றிய சுரம் ஆரம்பித்துவிடும். அதைப் பற்றி இந்தப்பக்கங்களில் முன்பு எழுதியதுதான். நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. இந்த முறை நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி, பெரிதும் கவனிக்கப் படாமல் போன ஒரூ புத்தகத்தை எரிக்கிறேன் எற்று தேவையல்லாத விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பிறவேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதில் இந்தப் பக்கங்களில்
எழுதுவதே அனேகமாக மறந்து போய்விட்டது! புதிய விஷயங்களைத் தேடிக்
கொண்டிருந்த முனைப்பில், வழக்கமாக வாசித்துக் கொண்டிருந்த சில இழைகள்
படிக்கும் வரிசையில் பின்னுக்குப்போயின. நல்லவேளை, வெறும் எட்டு-பத்து
நாட்களுக்குள்ளானவைதான்!வாசிப்பதை எட்டிப் பிடித்து விடலாம் என்று
திறந்தபோது, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் இந்த இழை கொஞ்சம் கட்டிப் போட்டு
விட்டது.
யார்
எந்த விதத்தில் தங்கள் இஷ்டத்துக்குக் கத்தினாலும் அதை ஒருநாளும் சூ சூ
என்று தலையிட்டு அடக்கமாட்டார். காரணம் தெரியாமலேயே பலர் தாமாக அடங்குவர்.
பல கிராமங்களிலிருந்து வந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சி எடுப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.
புதுவிதமான சண்டைப் பயிற்சிகள். அதற்கு ஏற்றாற்போல் புதுவித அடிவயிற்று ஒலிகள்.
பெரிய
யந்திரத்திற்குள்ளே வித வித கோணங்களில் ப்ளெடுகள் திரும்பி திரும்பிச்
சுழல்வதைப் போல் சீடர்கள் கைகளை விதவிதமான கோணங்களில் கரணை மட்டை போல்
ஆக்கித் திருப்புவதைப் பார்க்கும் போது
கடலில் பெரிய மீன்கள் சுழன்று அடிப்பது போல் இருக்கும்.
ஆனால் இவ்வளவு ரகளையிலும் மோட்ஸு தூங்குபவர் போல் அமர்ந்திருப்பார்.
சரி
கிழம் தூங்கிடிச்சு என்று முன் வரிசை மூன்றைக் கடந்த நாலாவது வரிசையில்
ஒருவர் அசிரத்தையாக முதுகைச் சொரிந்தாலும் போதும் அந்தச் சீடரின் பெயர்
உச்சத்தாயியில் அவரிடமிருந்து வரும்.
தலையைக் குனிந்தபடி இருக்கும் கிழம் எப்படிக் கண்டுபிடிக்கிறது?
சீடர்கள் தூக்கத்தில் கூட களரிக் கூக்குரல்களைக் கத்த ஆரம்பித்து விட்டனர்.
ஒரு
நாள் பின் ஜாமத்தில் மோட்ஸு நட்ந்தார். அப்பொழுது இளம் மாணிகள் தங்கி
இருந்த கூடத்திலிருந்து பயிற்சி ஓலங்கள் கனவில் வாய்குளறி வந்து
கொண்டிருந்தது.
மோட்ஸுவிற்கு கவலை. மாணிகளுக்கு மௌனம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடுமோ!
மறுநாள் ஒரு வினோத பயிற்சியை ஆரம்பித்தார்.
யாரும் எதுவும் செய்யக் கூடாது; பேசக் கூடாது.
மௌனம் அதைப் பழக வேண்டும்.
அண்டை அயல் கிராமங்களில் இருந்த பழைய ஸென் முதியவர்களுக்கு அது வேடிக்கையாய் இருந்தது.
மௌனத்திற்குப் பயிற்சியா?
முதல் நாள் பயிற்சி முடிந்தது. மறுநாளும்.
பிறகு அவர்களைக் கூப்பிட்டு மௌனம் கடைபிடித்த காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்றார்.
பொய் தேவையே இல்லை என்ற சூழ்நிலையை வைத்திருந்தார் ஆகையாலே மாணிகள் தயங்காமல் கூறினார்கள்.
“மற்ற மாணிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த
முதல் வரிசையில் இருக்கும் மூன்றாவது மாணி என்னை அன்று எப்படித்
திட்டினான்; அதற்கு அவனை மலையிலிருந்து உருட்டிவிடுவதுதான் வழி. ஒரு நாள்
அப்படிச் செய்தால்....இவ்வாறுதான் எண்ணம் இட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்
ஒரு மாணி.
இப்படி ஒவ்வொருவரும் சொல்லுவது மொத்தத்தில் அடுத்தவன் என்ன செய்கிறான்
என்று பார்ப்பதிலும், அடுத்தவர் சொன்னதை மனத்தில் போட்டு சினம் வளர்த்து
கறுவுவதிலுமாக இருந்தது.
“நீங்கள் மௌனமாக இருக்கச் சொன்னால் முன்னிலும் அதிகமாக சத்தம், இரைச்சல் என்று அவதிப்பட்டிருக்கிறீர்கள்.
புரிகிறதா?....” என்றார்.
ஆம் ஐயனே!
“நீங்கள் என்ன
செய்கிறீர்கள் என்று உணர்ந்து திருத்திக்கொண்டு முன்னேறும் வழிகளைப்
பார்க்காமல்...அடுத்தவரைப் பற்றி எண்ணியும், கறுவியுமே உங்கள் தியானம்
கழிந்திருக்கிறது.”
தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தனர் சீடர்கள்.
”சரி. நாளை ஒரு நாள் அவகாசம் தருகிறேன். முழு மௌனம். நல்லபடியாகப் பயன் கொள்க” என்று சொல்லிப் போகவிட்டார்.
நாளை மறுநாள் கூப்பிட்டுக் கேட்டார்.
“மௌன காலத்தில் என்ன சிந்தனை?” என்று.
சீடர்கள் உற்சாகமாக இருந்தனர்.
அநேகமாக அனைவரும் மோட்ஸுவினுடைய
உபதேசத்தை நினைத்துக் கொண்டிருந்ததாகவும், மௌனம் எவ்வளவு முக்கியம் என்று
மோட்ஸு கூறியதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும், மோட்ஸு எப்படி
மௌனத்தில் இருப்பார் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருந்ததாகவும் --
இப்படித்தான் மாறி மாறி கூறினார்கள்.
ஒரு சிலர் தாங்கள் பக்கத்து கிராமங்களில் பழைய கிழங்கள் மௌன பயிற்சியைக் கிண்டல் அடித்ததை நினைத்துக் கொண்டதாய்க் கூறினர்.
மோட்ஸு கவலை தோய்ந்த குரலுடன் கூறலானார்,
“பார்த்தீர்களா!
மௌனம் என்பது இப்பொழுதும் உங்களுக்கு எட்டவில்லை. அதைபற்றி நான் செய்த
உபதேசமும், நானும்தான் உங்கள் சிந்தனையில் இருந்திருக்கிறது. கிராமத்து
ஏச்சுகள் இருந்திருக்கின்றன. ஆனால் மௌனத்தில் இருக்க வேண்டியது இல்லை.”
ஒரே ஒரு சீடன் மட்டும் தயங்கிக் கொண்டு சொன்னான், தன் மௌனத்தில் தான் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததாக.
சிறிது முகம் மலர மோட்ஸு அவனைப் பார்த்தார்.
அவன் மேலும் சொன்னான், “ஆம்
மௌன காலத்தில் நான் என்னைப் பற்றியே சிந்தித்தேன். எதிர்காலத்தில் நான்
மோட்ஸுவின் இடத்தில் அமர்ந்ததும் சீடர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கலாம்,
மௌனப் பயிற்சியையே ஏதாவது மலை குகைகளில் ஏற்பாடு செய்யலாம் என்றெல்லாம்
திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.
மோட்ஸு முக மலர்ச்சி எல்லாம் மறைந்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.
சிறுவயதில்
அவர் குரு கூறியது ஞாபகத்திற்கு வந்தது -- “கிடைத்தற்கரியது மௌனம்.
மனத்திலும் பிறரைக் கொண்டு சத்தம் செய்தே வாழ்பவன் பரிதாபத்திற்கு உரியவன்”
ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதியது. அவருக்கு நன்றியுடன்!
*****
இன்று மாலை மனிதர் பேசுகையில் ஒரு கட்டளை போட்டார்.மீற முடியவில்லை, ஆனால்,
எனக்கோ வேறு விதமான சூழ்நிலை! இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே
ஸ்ரீரங்கம் என்ற மாதிரி, நவராத்ரிப் பொழுதில் தக்ஷிணேஸ்வரியை , இங்கிருந்தே
கைகூப்பி நமஸ்கரிக்கிறேன். சரணடைகிறேன்.
வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே
செய்தி சானல்களை மாற்றமுயற்சித்துக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!
இந்தவலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!
அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக் கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போதுfist,அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங் என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை, தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும் என்ற தலைப்பில் 1937வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட் என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர் ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.
1941இலும், அப்புறம்2007இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது? 2007 வடிவத்தைப் பார்ப்போம்! இதில்1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல! முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்! ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும், இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பி விட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப் போய், தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.
சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.
கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!
தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.
வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.
ஒரு நீதி மன்ற விசாரணை போல நடக்கும் இந்தப் பகுதி மிக அருமையாக எடுக்கப் பட்டிருக்கிறது. கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும் வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!
அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின் கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன், திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.
சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது! ஆனால் திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! நேரடியாகத் தொலைக் காட்சியில் ரிலீஸ்!
ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில், குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால் பாருங்கள்!
எது நல்ல எழுத்து, எதற்காக எழுதுவது, யாருக்காக என்ற மாதிரியான அடிப்படைக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிற மாதிரி ஒரு நல்ல திரைப் பட வடிவம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை!