Wednesday, March 31, 2021

#தமிழகதேர்தல்களம் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற தெளிவுடன் ஆரம்பமாகட்டுமே!

அண்ணாதுரை முதல் ஆபாசராசா வரை திமுகவின் வரலாறே ஆபாசமும், கட்டப்பஞ்சாயத்து முதல் ரவுடியிசமும் தான்! திமுகவை எந்தக்கொம்பனாலும் அழிக்க முடியாது என்று இசுடாலின் பேசுவது வெறும் வாய்ச சவடால்தான்!


   

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான்.குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை....எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு.... மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி காவி வஸ்திரம் தரித்த மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார்,
"எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு". அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட....ஆமாம்!நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா.....குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது.
"இனிமேல் இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி காவி வஸ்திரம் தரித்த ஞானி கடந்து போனார். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படித்தான் திமுகவை கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல், அறியாமையில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்!!!!! அறிந்தவர்கள், ஏற்கனவே சில நாலாந்தர பெரிய-கட்சி-நிர்வாகிகள் பேச்சின் காரணமாக, உள்ளிருந்து ஞானம் பெற்று தெளிந்து விட்டார்கள். முகநூலில் இப்படி ஒரு உருவகக் கதை சொல்லி வழக்கொழிந்து செத்துப்போன திராவிடத்தைப் பிடித்துக்கொண்டு மறுகாதே! தூக்கிக் கிடாசிவிட்டு வேறு வழியைத் தேடப்பார் என்று வழியும் சொல்கிற மாதிரி இருக்கிறதே!

திராவிட கழகமோ , திமு கழகமோ இப்படிக் கழகங்கள் எதுவானாலும், இந்த மாநிலத்துக்கு கேடுதான்! திமுக முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கட்சிதான் என்பதற்கு அதன் கடந்தகாலச் செயல்பாடுகளே போதுமான காரணமாக இருக்கிறது

யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க, யார் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும் திமுக மற்றும் அதன் கூட்டாளிகளான காங்கிரஸ், கம்யூஜிஸ்டுகள், விசிக, மதிமுக போன்ற உதிரிகளை முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ,அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற தேடலும் ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்..

Tuesday, March 30, 2021

#தமிழகஅரசியல் தேர்தல் நேரம்! காமெடி டைம்!

கெக்கேபிக்குணி தயாநிதி மாறன் தன்னுடைய நாற வாயை மறுபடியும் திறந்திருக்கிறார்.தயாநிதி  பேச்சை புளகாங்கிதத்தோடு முதலில் பிரசுரித்த இந்து தமிழ் திசை, பிரச்சினை வேறுமாதிரி ஆகிவிடும் என்று  நினைத்தோ என்னவோ சத்தமில்லாமல் செய்தியை எடுத்துவிட்டது.  



என்ன தயா இதெல்லாம்? என்று கேட்டுவிடக்கூடாது! கெக்கேபிக்கென்று சிரிப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது, தெரியுமில்லையா? 😀😂  


சொல்வது தினமலர் தானே ,என்று அலட்சியப்படுத்த முடியாத படி, இந்தச்செய்தி திமுகவின் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல, கழகத்தின் நேற்றைய இன்றைய ஏன் நாளைய வரலாறும் கூட!  


சொல்வதெல்லாம் உண்மையா? பலசமயங்களில் குறிப்பாக அரசியலில் சொல்லாமல் போனதெல்லாம் கூட உண்மைதான் என்று சொல்கிறது இந்தவார துக்ளக் அட்டைப்படம்!


ஆனாலும் கூட கமல் காசர் தன்னுடைய நட்டத்துக்கு இரண்டு பூஜ்யங்கள் அசேர்த்துச் சொல்கிறாரோ என்ற பெருத்த சந்தேகம் எனக்கு! எது எப்படியாகிலும், கமல் காசருடைய நட்டம், தயாரிப்பாளர்களுக்கும்,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் பெருத்த லாபம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டுமா?

மீண்டும் சந்திப்போம்.   

Sunday, March 28, 2021

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

ஆபாசராசாபேச்சுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதைக்  குறித்து திமுகவினர் யாரும் வாய்திறக்க வேண்டாம்.  கொஞ்சநாட்களில் சர்ச்சை, எதிர்ப்பெல்லாம் அப்படியே அமுங்கிப்போய்விடும் என்று இசுடாலின் கருதுவதாகத்  தோன்றுகிறது. அதுபோலவே தேமுதிகவின் சரிவுக்கு என்ன காரணமாம்? அதை வெறும் இரண்டே முக்கால் நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா என்ன? 


தேமுதிகவின் சரிவுக்கு விஜய பிரபாகரன் ஒருவரை மட்டுமே குறைசொல்கிற இந்தச் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினமலர் தேர்தல்களம் 8 பக்க இணைப்பில் நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும் என்று தலைப்புக்கொடுத்து,ஒரு மிமிக்ரி கலைஞன் விஜயகாந்த் மாதிரியே பேசியதைச் சொல்லி சப்பென்று முடித்திருக்கிற மாதிரியே இந்த வீடியோ செய்தியும் இருக்கிறது.

நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி பேச்சுக்கு கமல் காசரின் கட்சி பதில் சொல்லியிருப்பது திமுகவினருக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்  காட்டுவதாகவே இருந்தது.

முன்னதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.  


வானதி சீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன்.... என்ன ஒரு ஆணவமான அறிக்கை?! தைரியம் இருந்தால் சவால் விட்ட ஸ்ம்ருதி ஈரானியுடனேயே விவாதம் செய்ய கமல் காசர் விருப்பம் தெரிவித்திருக்க வேண்டியது தானே! ஏற்கெனெவே ஸ்ம்ருதியுடன் விவாதம் செய்து பப்பரப்பே என்று கமல் காசர் தவித்துத் தண்ணீர் குடித்த கதை மறந்து போய்விட்டதோ?

நினைவு படுத்திக்கொள்ள இங்கே 90 நிமிட விவாதம்   


 இது  தமிழில் 5 நிமிடச் சுருக்கம்.  

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்

பிழைப்பு கெட்டுப்போன காங்கிரஸ், திராவிடங்களைச் சொல்கிறாரோ ராகுல் காண்டி?!  

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?  என்கிற கேள்வி எனக்குள்  உறுத்திக்கொண்டே இருந்ததற்கு விடைசொல்கிற மாதிரி முகநூலில் ஒரு பகிர்வை இப்போது பார்த்தேன்:


போலி பாதிரி போலி போராளி ஜெகத் கஸ்பர் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய வில்லை, பாஜகவுடன் காம்ப்ரமைஸ் செய்து கொண்டது போல இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மதமாற்ற கும்பலின் தலைவனுக்கு அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் கண்களை உறுத்துகிறது. ஜெகத் கஸ்பருக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணம் என்ன? எத்தனையோ தொகுதிகளில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஜெகத் கஸ்பருக்கு அரவக்குறிச்சி மீது மட்டும் ஏன் அக்கறை?
பதில் ஒன்று தான்.
இத்தனை காலம் தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை. பாஜகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலடி தர சரியான தலைவர் இல்லை.
ஆனால் இப்போது ஒரு தலைவன் உருவாகிறான். சூடான ரத்தமும், தெளிவான நோக்கமும், வரையறுக்கப்பட்ட கொள்கைகளும், எதையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் தைரியமும், எதைப்பற்றியும் விவாதிக்கும் அறிவு கூர்மையும், நேர்மையும், இந்த தேசத்தின் மேன்மையையும் உணர்ந்த, சுயநலம் இல்லாத எளிமையான அணுகுமுறை கொண்ட ஒருவன் களத்தில் இருக்கிறான்.
கோடிக்கணக்கான இளம் தமிழர்களை தேசியத்தின் பக்கம் நிற்க செய்யும் வலிமையுடையவன், இப்போதே லட்சக்கணக்கான தமிழர்களை ஈர்த்து விட்ட இளம் தலைவன் உருவாகி வருகிறான்.
அரவக்குறிச்சி அவனை அடையாளப்படுத்துகிறது. அரவக்குறிச்சி தரும் வெற்றி அவனை அங்கீகரிக்கும். அதன் பின் தமிழகமெங்கும் அவன் வழியில் இளைஞர்கள் திரள்வார்கள். அவன் வழியில் தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும்.
அவனே வருங்கால தலைவன், அண்ணாமலை அவன் பெயர்.
ஜெய்ஹிந்த்

மீண்டும் சந்திப்போம்   

Thursday, March 25, 2021

லோலோ! லோலாயி! லயோலா! எ வ வேலு ஒப்பாரி!

முந்தைய பதிவில் உங்கள் பார்வையில் நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்கள் யார் என்று எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு இன்னமும் நண்பர்களிடமிருந்து பதில் எதுவும் இல்லை. ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே பதில் சொல்ல இத்தனை தயக்கம் என்றால், முன்பின் தெரியாதவர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு  உங்கள் ஒட்டு யாருக்கு என்ற கேள்வியோடு வந்தால் ஜனங்கள் மனம் திறந்து பதில்  சொல்லிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கருத்துக் கணிப்புக்கள் என்ற பெயரில் ஊடகங்கள் தொடர்ந்து  காசுக்கு கூவுவதைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றும்?கருத்தும் கணிப்பும்  என்ற குறியீட்டுச்சொல்லை வைத்து 17 பதிவுகள் எழுதியிருக்கும் எனக்கே அலுப்புத் தட்டுகிற அளவுக்குத் திகட்டி விட்டது. தேர்தலுக்குத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்கிற கேலிக்கூத்தை நடத்தி வந்த லயோலா கல்லூரி கூட மானம் கெட்டுப்போனதில் இந்த 2021 தேர்தல்களத்தில் தாங்கள் எந்தக்கணிப்பையும் செய்யப்போவதில்லை என்று பெரிய கும்பிடாகப் போட்டிருப்பதைப் பார்த்தும் கூடத்திருந்தவில்லை என்றால் என்ன செய்ய?


இது 2019 மே 21 அன்று அந்தப்பக்கங்களில் பகிர்ந்த ஹிந்து ஆங்கில நாளிதழ் கார்டூன்! லோலாய்த்தனம் செய்வதில் கெட்டிக்காரர்களாக இருந்த லயோலா கல்லூரி என் இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் நடத்தி இதுவரை பட்டதே போதும் என்று ஜகா வாங்க என்ன காரணம், பின்னணி என்பது எனக்கும் தெரியாது!

“லயோலா கல்லூரி 2021- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று இதன்மூலம் அறிவிக்கின்றனது. தேர்தல் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே லயோலா கல்லூரி என்ற பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால் ஊடக நண்பர்கள் அதனைப் புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை லயோலா கல்லூரி என்ற பெயரைப் பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம்” இப்படி அழாத குறை தான்! லயோலா கல்லூரி வெளியிட்டிருக்கும் அறிக்கை  தேம்புகிறதே! 


தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முழுப்பக்க விளம்பரம் செய்யலாமா என்கிற ஒரு விவாதம் முகநூலில் கொஞ்சம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்! 


 

எவ வேலுவுக்கு ஆதரவாக துரைமுருகன் முந்திக் கொண்டு ஒப்பாரி வைத்திருக்கிறார் என்பதாக அரசியல் களம் சுவாரஸ்யமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.    

Tuesday, March 23, 2021

தமிழ்நாடு தேர்தல் களம் 2021! உங்கள் பார்வையில் நம்பிக்கையூட்டும் வேட்பாளர்கள் யார்?

ஒருவழியாக நேற்றுடன் வேட்புமனு பரிசீலனை முடிந்து  ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. மொத்தம் 7255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 2741 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, வாபஸ் வாங்கியவர்கள் போக களத்தில் 4220 நபர்கள் இருப்பதாக நேற்றிரவு செய்தி. இருப்பதிலேயே திகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர். சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் களம் காண்கின்றனர். இதில் கொளத்தூர் தொகுதியில் 35 பேரும், குறைந்தபட்சமாக தியாகராயநகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது வெறும் புள்ளி விவரம் மட்டுமே. இந்தமுறை எதிராக களம் இறங்கிய வேட்பாளர்கள் மனுவை நிராகரிப்பதற்கு, குறிப்பாக பிஜேபி வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட வேண்டுமென திமுக தரப்பு மிகவும் கீழ்த்தரமாக வேலை செய்ததை இந்தப்புள்ளிவிவரங்களில் தெரிந்து கொள்ள முடியாது. உதாரணத்துக்கு சென்னை துறைமுகம் தொகுதி பிஜேபி வேட்பாளர் வினோஜ் P செல்வம்,  அரவக்குறிச்சி தொகுதி பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை IPS இவர்களது வேட்புமனுவுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபணைகளைச் சொல்லலாம்.


தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே இருக்கிற சூழலில் அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே எனத் தாவுகிற வேடிக்கை விநோதங்கள் இந்தத்தேர்தலின் பிரத்யேக விசித்திரம். கரூர் எம் சின்னச்சாமிக்கும் செந்தில் பாலாஜிக்கும் ஏற்பட்டுள்ள முட்டல் மோதலில் மாஜி அமைச்சர் சின்னச்சாமி திமுகவிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது இன்றைக்கான காமெடி கோட்டா!  


இந்தச் செய்தியை இருநாட்களுக்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் முக அழகிரிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும்  ஜீவாநகர் முருகன் சொன்னதாகப் படித்தேன். இங்கே முக அழகிரியே சொன்னதாக செய்தி வந்திருக்கிறது. தேர்தல் கிட்டக்க வந்திருச்சு முக் அழகிரியை எங்கப்பா காணோம் என்று 8 நாட்களுக்கு முன்வரை தேடிக்கொண்டிருந்த ஒன் இந்தியா தளம் கூட தூக்கம் கலைந்து இன்றைக்கு இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. மு.க. அழகிரி ஒன்றும் spent force அல்ல, திமுகவுக்கு தென்மாவட்டங்களில் சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியுடன் இன்னமும்  இருப்பவர் என்பது என்னுடைய அபிப்பிராயம். 

தமிழக தேர்தல் களநிலவரம் தற்போதைக்கு இப்படித் தான் என்பதைக் காட்டுகிற 1 நிமிட வீடியோ.

உங்கள் பார்வையில் நம்பிக்கையூட்டும் வேட்பாளர்கள் யார்?  கொஞ்சம் சொல்ல முடியுமா?

மீண்டும் சந்திப்போம்

Monday, March 22, 2021

#2021தேர்தல்களம் தயாராகிக் கொண்டே இருக்கிறதாம்!

1967 தேர்தல் முதல் இப்போது வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் வரை பார்த்துக் கொண்டிருப்பதில், இந்தத் தேர்தல் சமயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு விசித்திரமான சூழ்நிலையை இதுவரை பார்த்ததில்லை. கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை என்கிற மாதிரிப் புலம்பல்களை விடுங்கள்! இன்னும் 15 நாட்களில் ஒரு சட்டசபைத் தேர்தல் வரப்போவதற்கான வழக்கமான அறிகுறிகள், பரபரப்பு எதையும் காணோம்! கரைவேட்டிகளுடைய நடமாட்டம் தெருக்களில் இல்லை! ஆட்டோக்கள், ஜீப் இன்னபிற வாகனங்கள் ஒலிபெருக்கியில் இன்ன சின்னத்துக்கு மறக்காமல் வாக்களியுங்கள் என்று அலறிக்கொண்டே போகிற சத்தமும் மிஸ்ஸிங்! இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை தானே வெளியாகிறது, அதற்குள் என்ன அவசரம் என்கிறீர்களா?     

  

இந்த 8 நிமிட வீடியோவைப்பாருங்கள்! திரு கே. அண்ணாமலை IPS, 38வயதே ஆன  பிஜேபி வேட்பாளர். இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி ஜமாத் ஊருக்குள் பிரசாரம் செய்யக் கூடாது என்று தாக்கீது அனுப்பியதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள்! அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை. பள்ளப்பட்டி இந்தியாவில் தான் இருக்கிறது, இந்திய அரசியல் சாசனத்தின் கீழ்தான் இருக்கிறது. நாங்கள் வருவோம் பிரசாரம் செய்வோம் என்று உறுதிபடச் சொன்னதோடு நிற்கவில்லை. ஒரு 8 பேர் கையெழுத்துப் போட்டால் ஒட்டுமொத்த ஊரே சொன்னதாகிவிடுமா? திமுகவின் கிளை என்றே பெயர் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே என்றும் சாடுகிறார். இந்தமாதிரி மிரட்டல்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை!

அண்ணாமலை Effect 

இந்தத் தேர்தல் களேபரங்களில் என்னைக் கவர்ந்தது இந்த துடிப்பான இளைஞரின் அரசியல் பிரவேசம் ஒன்று மட்டும் தான்!

நிதானமாக, கண்ணியமாக அவர்கள், பள்ளப்பட்டி விவகார்த்தத்துக்கு பதில் கொடுத்துள்ளார். அவர் வேட்புமனு பற்றிய கேள்விக்கும் சரியான விளக்கம் கொடுத்துள்ளார். அரவக்குருச்சியில்,ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டுருக்கிறது, அதற்க்கு அண்ணாமலையின் எளிமையும், முயற்சியும் முக்கிய காரணம்.
107 views
0:47 / 1:59
2
19

பதிவின் துவக்கத்தில் சொன்னதுபோல தேர்தல் களம் முந்தையகாலம் போல சூடேறின மாதிரித் தெரிகிறதா என்ன? ஜனங்களுமே கூட எங்கேயோ மழைபெய்கிறது என்றமாதிரி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிற மாதிரியே எனக்கு மட்டும்தான் படுகிறதா?

உங்கள் தொகுதியின் நிலவரம் என்ன? கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)