Thursday, November 26, 2020

26/11 மும்பை மீதான தாக்குதல்! #12வதுஆண்டுநிறைவு பாடம் கற்றுக்கொண்டோமா?

 2008 நவம்பர் இதே நாளில் மும்பை மீது கடல்வழியாக  10 பாகிஸ்தானி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களின் 12வது ஆண்டு நிறைவு. டாட்டாக்களின் தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டதால் மட்டுமே மீடியாக்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்ட பழைய கதை நினைவிருக்கிறதா? டாட்டாக்களுக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு நிறுவனங்கள் ஈடு செய்துவிட்டன. ஆனால் சத்ரபதி சிவாஜி,டெர்மினலில், மற்றும் வேறு சில இடங்களில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப் பட்ட அற்ப நிவாரணம் கூட இன்றும் கிடைக்கவில்லை என்பதையாவது நினைத்துப் பார்க்கிறோமா?

மும்பைத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மரணம் என்றால் மூன்றுலட்சம், வெறும் காயமென்றால் ஐம்பதாயிரம் தான்! இந்த அற்பத் தொகையுமே கூடப் பெரும்பாலானவர்களுக்கு, தாக்குதல்கள் நடந்து ஓராண்டாகியுமே கூட  வழங்கப் படவில்லை என்பது எப்போதும் போல் நடக்கிற கூத்துத் தான்! அதே நேரம், தாஜ் ஹோட்டலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, இன்ஷ்யூரன்ஸ் தொகை ரூ.167 கோடி வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தியோடு சேர்த்துப் பார்த்தால் தான், பிரச்சினையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்.இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியில் உள்ள நிவாரணம் வேண்டி வந்த மனுக்கள் எண்ணிக்கைக்கும், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் அதே செய்தியை வெளியிட்டதில் வந்திருக்கும் எண்ணிக்கைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

வெளியே எல்லாத் திசைகளிலும், இந்தியாவுடன் பகைமை பாராட்டும் நாடுகள், ஒவ்வொரு நாட்டிடமிருந்தும் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் என்று ஒருபக்கம், உறுதியான அரசியல் முடிவுகளை எடுக்கத் தைரியமில்லாத, ஆண்மையற்ற அரசியல் தலைவர்கள், ஊழல் மயமாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும், முன்னெச்சரிக்கை என்றால் என்ன என்று கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறை இத்தியாதிகள் இதெல்லாம் ஒருபுறம் என்றால், ஜனங்களுடைய அலட்சிய மனோபாவம், கையறுநிலை, அல்லது தட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்பதும், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவதும் நம் கைகளிலேயே இருக்கிறது என்பதை உணராத பொறுப்பற்ற தன்மையும் சேர்ந்து, இந்த மாபெரும் தேசத்தைத் தலை குனிய வைத்துக் கொண்டிருக்கிறது.


பாராளுமன்றத்திற்கு வெளியே பிஜேபி கட்சியைச் சேர்ந்த அலுவாலியா, ஐந்து நட்சத்திர ஹோட்டல் தாக்கப் பட்டதினாலேயே, இந்தத் தீவீர வாதிகளுடைய தாக்குதல் பற்றிய செய்தி, மீடியாக்களினால் பரபரப்புச் செய்தியாக்கப் பட்டதாக வருத்தப் பட்டிருக்கிறார்.

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "காஷ்மீர், சாட்டிஸ்கார், ஆந்திரா, ஒரிசா என்று நிறைய இடங்களில் இந்த மாதிரித் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.ஆனால், மும்பையில் நடந்ததை மட்டும் நீங்கள் பெரிதுபடுத்திப் போடுகிறீர்கள்! காரணம் அது ஐந்துநட்சத்திர ஹோட்டல் தாஜ் மீது நடந்தது என்பதால் தானே?"

அலுவாலியா உண்மையைத் தான் பேசியிருக்கிறார்! தாஜ் ஹோட்டல் மீது அல்லாமல், அன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினலில் (ரயில் நிலையம்) மட்டுமே தாக்குதல் நடந்திருந்தால், பத்திரிகையாளர்களும், தொலைக் காட்சி ஊடகங்களும் இவ்வளவு பெரிதாக, கோரசாக, ஊது ஊதென்று ஊதியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்! மும்பையில், ஐபிஎன் அலுவலகம் தாக்கப் பட்டதற்கு ஹிந்து என் ராம் கொதித்தெழுந்தார்!  உள்ளூரில், வேறு பத்திரிக்கை நிறுவனங்கள் தாக்கப்பட்ட போதோ அல்லது வேறு அராஜகங்கள் நடந்தபோதோ இதே  கனவான் எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு  வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்!    


இப்படி 2009 நவம்பரில் இந்தப்பக்கங்களில் எழுதியது 

இது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது? இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் செய்தி நம்முடைய மனசாட்சியை உலுக்குவதாக இருக்கிறது. குற்றவாளி கசாபுக்குச் நான்கு வருடம் சிறையில் வைத்து ஊட்டி வளர்க்கச் செலவழிக்கப்பட்ட தொகை 29.5 கோடி ரூபாயாம்!  இது ஹிந்து செய்தி. அதே நேரம் மஹாராஷ்டிர அரசு செல்வழித்தது 53 கோடி ரூபாய்.


   


என்ன செய்யப்போகிறோம்? எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?  

Tuesday, November 24, 2020

இன்று வெற்றித்திருநாள்! ஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று நவம்பர் 24. ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வெற்றித் திருநாள் (Sidhdhi Day) என்று அழைக்கப்படுகிற தரிசன நாள். 1926 இல் ஸ்ரீ அரவிந்தருக்குள்  ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்து நிறைந்த தினம். கிருஷ்ணனுடைய ஒளி ஒரு மானுட உடலில் புகுந்து நிறைந்ததான அந்த அனுபவமே ஸ்ரீ அரவிந்தர் அடுத்த 24 ஆண்டுகள் மேற்கொண்ட தவமாக விரிந்து அதிமானச ஒளி Supramental Light ஸ்ரீ அரவிந்தருடைய ஸ்தூல உடலில் தங்கிய அற்புதமாகவும் ஆகியது.


இன்று புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வழங்கப் பட்ட தரிசன நாள் செய்தி

ஸ்ரீ அரவிந்தாசிரமம் உருவான விதத்தை ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை வார்த்தைகளிலேயே சென்ற ஆண்டு தரிசன நாள் செய்தியாக வெளியிடப்பட்டதை இந்தப்பக்கங்களில் பார்த்தது நினைவிருக்கிறதா? 

இந்த நாளுடைய அருமை என்ன என்பதைப் பிந்தைய நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இப்படி 

ஸ்ரீ அரவிந்தருடைய திருவடிகளைச் சரணடைகிறேன். 

ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன்   

Wednesday, November 18, 2020

எனக்கென்ன மனக்கவலை! என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை?!



 "இதுவும் கடந்து போகும்."

எப்போது?

ஹரிமோகனுடைய கனவைப் படிக்க ஆரம்பித்தபோதுஏதோ என்னுடைய சொந்தக் கதையைப் படிக்கிற மாதிரியே இருந்ததுபடித்து முடித்த போதுஇந்த அனுபவம்இந்தக் கனவு என்னுடையதாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கமே பெரிதாக இருந்தது.

"இதுவும் கடந்து போகும்என்ற வார்த்தை மறுபடி என்னுள் எதிரொலித்தது.

ஒரு ஜென் கதை.

ஒரு ஜென் ஞானிஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து எதிரே தெரிகிற மலையையும்வானத்தையும் பார்த்துக் கொண்டே இருப்பார்தினமும் அவர் மௌனமாகஇப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தவர்கள்ஆவலை அடக்க மாட்டாமல் அவரிடமே கேட்டு விட்டார்கள்:

"அங்கே என்ன தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?"

"அங்கே பாருங்கள்வானத்தில் மேகத்திரள் இருக்கிறதல்லவாஓரிடத்தில் திரளாகஇன்னோரிடத்தில் அங்கே ஒன்றுஇங்கே ஒன்று என்றிருக்கிறதல்லவாஅதைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்." அந்த ஜென் துறவி அமைதியாகச் சொன்னார்மறுபடி மேகங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கேள்வி கேட்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லைஇன்னொரு கேள்வி கேட்டார்கள்.

"வானத்தில் மேகங்கள் காணப் படுவது இயற்கை தானேஇதில் என்ன அதிசயம் இருக்கிறது?"

"அங்கே பாருங்கள்கூட்டமாக இருந்த மேகத்திரள்காற்று வீச வீசஅப்படியே கலைந்து கடந்து போகிறதல்லவாஆனால்மலை அங்கேயேஅப்படியே தான் இருக்கிறதுஅது போலவேநமக்குள் எண்ணங்களும் ஒருசமயம்கூட்டமாகவும் இன்னொரு சமயம் தனியாகவும் வருகிறதல்லவாஇதுவும் அந்த மேகத்தைப் போலவே கடந்தும் போகிறதல்லவாஅதைத் தான்உள்ளேயும் பார்த்துக் கொண்டிருந்தேன்."

ஞானியின் இந்த பதில் சிலபேருக்குப் புரிந்ததுபல பேருக்குப் புரியவில்லைமறுபடிமறுபடி கேள்வி கேட்டார்கள்ஞானி மூன்றே வார்த்தைகளில் சொன்னார்:

"இதுவும் கடந்து போகும்."

"நான் யார்என்று கேட்டுப் பார்இந்த உடலாமாறிக்கொண்டே இருக்கிறமனமாகண்போன போக்கிலே இழுத்துச் செல்கிற இந்திரியங்களாஎண்ணங்களாஎன்னுடையது என்று எண்ணுகிற எதுவுமே உண்மையிலேயே என்னுடையது தானா இப்படி அமைதியாக விசாரம் செய்துகொண்டுதன்னை அறிகிற வழியை உபதேசித்தார் பகவான் ஸ்ரீ ரமணர்.

ஸ்ரீ அரவிந்தர், இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்பிய போது, விஷ்ணு பாஸ்கர லீலே என்கிற யோகியைச் சந்திக்கிறார். லீலே, உன் மனத்தையே கவனித்துப் பார், எண்ணங்களும், ஆசைகளுமாக ஏராளமானவை உள்ளே ஓடிக் கொண்டிருப்பதைப் பார். இதில் எதுவெல்லாம் உன்னுடையது என்று அறிந்து, மற்றவற்றை வெளியே துரத்திவிடு என்றார். ஸ்ரீ அரவிந்தர், யோகி லீலே சொன்னபடியே செய்து வர, மூன்றே நாளில், எண்ணம், ஆசைகள் என்று எதுவுமே இல்லாமல் மனம் நிர்மலமாக, ஒருஸ்படிகத்தைப் போல இருப்பதைக் கண்டார். எத்தனையோ ஆண்டுகள் தவமிருந்தும், கை கூடாத இந்த நிலையை ஸ்ரீ அரவிந்தர் மூன்றே நாட்களில் சாதித்ததைப் பார்த்து வியந்தார் யோகி லீலே.

ஆனாலும், இது ஒரு ஆரம்பம் தான்.

விதையிலிருந்து இலைகிளை என விரிந்து மரமாகிமறுபடி ஒரு விதைக்குள் சுருங்கி மறுபடி முளைத்துஇந்தசிருஷ்டி மேலோட்டமாக ஒரே மாதிரி தெரிந்தாலும்பரிணாம வளர்ச்சி மென்மேலும் விரிந்து வளர்ந்து கொண்டே இருப்பதை இந்தக் கதையில் வரும் ஞானி மாதிரி அமைதியாகப் பார்க்கிற பொறுமை நம்மில் அனேகமாக எவருக்குமே இல்லைநாம் விரும்புவதெல்லாம்திடீர்த் திருப்பங்கள்சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடியான sensationalism தான்.

ஒரு கொலை என்கிற வன்முறைச் சம்பவத்தை 'சதக்' ' சதக்என்று பதினாறு தடவை 'சதக்போட்டு கத்தியால் குத்தினான்..சம்பவ இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார் என்கிற மாதிரியான தினத்தந்தி டைப் விஷயங்கள் பரிணாம வளர்ச்சியில் சன் டி.வீஜெயா டி.வீஇன்னும் பிற டி.வீக் காரர்கள் புண்ணியத்தில் மெகா சீரியல் ஆக வளர்ந்துஇருக்கிற கொஞ்ச நஞ்சம் common sense ஐயும் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில்,

நான் யார்நான் படைக்கப் பட்டது எதற்காக?

இந்தக் கேள்விகளை கேட்டுக் கொள்வதற்கே நம்மில் பலருக்குப் பல நூறுஆயிரம் பிறவிகள் வேண்டியிருக்கின்றனகேள்வியைக் கேட்பதிலும் சரியான பதிலை அறிந்துகொள்வதிலும் நுட்பம் நிறைய இருக்கிறது என்பதால்இந்த ஆட்டத்திற்கே நான் வரவில்லை சாமிஆளை விடு என்கிற மாதிரித் தான்நம்முடைய புலன்கள்சோம்பேறித்தனமானஅது அதற்கே பழக்கப் பட்டுப் போன தளைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கின்றன.

அதனால் தான் மனமற்ற நிலை, அல்லது மனமிறந்த நிலை என்று சொல்லப் படுகிற நிலை ஒன்று இருப்பதையே நாம் அறிந்திருப்பதில்லை. அறிந்தால் அல்லவா, அதை எட்ட வேண்டும் என்கிற வேட்கையும், முயற்சியும் தொடங்கும்?

ஒளித்துஒளித்து வைத்துமறந்தே போன ஆன்மீக ரகசியங்களைகேட்கத்தயாராக இருந்த அனைவருக்கும் வாரி வாரி வழங்கினார் ஞான சிம்ஹமான சுவாமி விவேகானந்தர்.

அவருக்கும் முன்னாலே, "ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார்என்று ரகசியமெதுவும் இல்லைஇதோ பெற்றுக்கொள் என்று பெரும் கருணையோடு கேட்டவர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினார் பகவத் ஸ்ரீ ராமானுஜர்.

சேற்றில் சிக்குண்டு முதலைவாய்ப்பட்ட யானையின் கதையைச் சொல்லும் போதுமுதலைக்கும்யானைக்குமாய் நடந்த இழுபறிப் போராட்டம் ஆயிரம் வருடம் நடந்ததாகக் கதை சொல்லுவார்கள்யானை தன் பலத்தில் நம்பிக்கை வைத்துப் போராடிக் கொண்டிருந்த போதுஇறைவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.என் செயலாவதொன்றுமில்லை என்று உணர்ந்த பிறகுஅதே யானை "ஆதிமூலமேநாகணையாய்வந்து என் ஆரிடறை நீக்காய்" என்று முறையிட்ட போதுஇறைவன்அரை குலைய நிலை குலையயானையைக் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தானாம்கதையாகச் சொன்ன விஷயத்திலும்ஒரு ஆன்மீக ரகசியம் உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கிறது.

நான் எனது என்கிற நிலையில் இருந்து உயர்ந்தால் ஒழியநம்மைப் பீடித்திருக்கிற நோவுகளில்தளைகளில் இருந்து விடுபட வழியே இல்லை.

நானேஎனதே என்றிருந்த இவனையும் ஒரு பொருளாக நயந்துஇவனுக்கும் பல வெளிச்சக் கீற்றுக்களைக் காட்டிஒளிபொருந்திய பாதை ஒன்றிருக்கிறதேஇன்னமும் ஏன் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறாய் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லாமல் சொன்ன நிகழ்வுகளும் நடந்தன.

அம்மாஉன்னை வணங்குகிறேன்.


அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழிநடத்த வரும்போது எனக்கு என்ன கவலை
?

2009 மார்ச் மாதம் அங்கே எழுதியதன் மீள்பதிவு. 

Friday, November 13, 2020

தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! தீபாவளிப் பரிசு!

நாளை தீப ஒளித்திருநாள்! அறியாமை  அகங்காரம் ஆணவ இருளை விலக்கும் ஒளிவிளக்கை அகத்துக்குள் ஏற்றுவதான குறியீடே தீபாவளி! தீபங்களின் வரிசை என்றுதான் அர்த்தம்.


இந்தவருட தீபாவளிப் பரிசாக எனக்கு இன்று வெள்ளிக் கிழமை காலை, பேத்தி பிறந்திருக்கிறாள்.வீடியோ காலில் குழந்தையைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு அற்புதமான வரம்.ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன். ஸ்ரீ அரவிந்த அன்னை இந்தப் பச்சிளம் குழந்தைக்குத்  துணையாக இருந்து காத்தருள வேண்டும். 


நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

எங்கும் நலமே விளைக! மீண்டும் சந்திப்போம் .

மீண்டும் சிந்திப்போம்          

Wednesday, November 11, 2020

#தனிக்கச்சேரி பீஹார் தேர்தல் முடிவுகளும் ரீல் அறுந்து தொங்கும் காங்கிரசும்!

பீஹார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொஞ்சம் லேட்டாக வந்தாலும், முக்கியமான சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்கிற மாதிரி வந்திருக்கிறது. இதை பிஜேபியின் வெற்றியாகப் பார்க்கப் பொறுக்காத சில ஊடகங்கள் பீஹாரின் சாணக்கியர் நிதீஷ் குமாரின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்தது என்று ஆரம்பித்து, அப்புறம் தான் பிஜேபியும் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்று இழுவையாகச் சொல்ல முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. ஒரு சாம்பிளுக்கு பர்கா தத்! 


பெரும்பாலானஇந்திய ஊடகங்கல்  நேர்மையான செய்திகளை  வழங்கியதே இல்லை என்பதை 2004 முதலே பார்த்திருக்கிறோம் இல்லையா! பர்கா தத் இப்படியென்றால் இன்னொரு ஊடகத்தில் கீழே! 


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்களில் தேஜஸ்வி யாதவ் தான் பீஹார் முதல்வராகிறார் என்று தம்பட்டமடித்த அதே ஊடகங்கள் தான்  இப்படி சாமர்த்தியமாக தேர்தல் முடிவுகள் இப்படித்தான், எந்த மாற்றமும் இல்லை என்கிற மாதிரிப் பூசிமெழுகப் பார்த்தன. ஆனாலும் இந்தத் தேர்தல் முடிவுகளில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அசாதுதீன் ஒவைசி தலைவராக இருக்கும் AIMIM கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு முதல்முறையாக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது. சிறுபான்மைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் லாலுவின் RJD, காங்கிரஸ் கட்சிகளைத் தாண்டி இஸ்லாமியர்களின் வாக்குகள் ஒரு இஸ்லாமியக் கட்சிக்கு கிடைத்திருப்பது கூர்ந்து கவனித்தால் புரியும். 


Big Parties Treated Me Like Untouchable: says Asaduddin Owaisi வீடியோ 10 நிமிடம்  

இங்கே காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 19 சீட்டுகள் என்று சொல்லும் போது CPIML கட்சி 11 இடங்களிலும் வலது, இடது கம்யூனிஸ்ட் காட்சிகள் முறையே 2 மற்றும் 3 இடங்களில் ஜெயித்திருப்பது இன்னொரு ஆச்சரியம். 70 தொகுதிகளில் கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றது இப்போதும் அதே 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே வெற்றி என்று ராகுல் காண்டியின் முகத்துக்கு, பிரசாரத்துக்கு கிடைத்த சறுக்கல் என்று நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

2015 தேர்தலை விட இந்தத்தேர்தலில் பிஜேபி 74 (+21) இடங்களில்  வெற்றி பெற்றிருக்கிறது. நிதீஷ் குமாரின்JDU வெறும் 43 (-28) இடங்கள் பெற்றிருக்கிறது. சென்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற கூட்டணி உதிரிகள் இப்போது 9 இடங்களில் வெற்றி பெற்று மொத்தம் 125 என்று மெஜாரிடி கிடைத்து இருக்கிறது தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடியே பிஜேபி இப்போதும் தங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்தான் என்று தனது கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது இது இப்போது மட்டுமல்ல 2005 தேர்தல்களிலும் நிதீஷ் குமார் கட்சியை விட பிஜேபி அதிக இடங்களில் ஜெயித்திருந்த போதிலும் தேர்தலுக்கு முன் அறிவித்திருந்தபடியே நிதீஷ் குமாரை முதல்வராக்கியது என்பதோடு ஆனால் நிதீஷ் குமார் அப்படி நடந்து கொண்டதில்லை.என்பதையும் சேர்த்து இந்த நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும்!. 

சிராக் பாஸ்வானுடைய LJP எதிர்பார்த்தபடியே நிதீஷ் குமாரை நிறையவே பஞ்சர் செய்திருக்கிறது. நிறையத் தொகுதிகளில் வெற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் என்பதே சாட்சி! உதிரிக் கட்சிகளால் இந்தமாதிரி பஞ்சர் செய்யத்தான் முடியும், உருப்படியாக வேறு எதையும் செய்ய முடியாது என்பதை நான் பலமுறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறேன்.

இந்தத் தேர்தலின் இன்னொரு ஆச்சரியம் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்! லல்லு பிரசாத் யாதவின் மோசமான இமேஜையும் மீறி, கொஞ்சம் நம்பிக்கையளிக்கிற மாதிரியான தேர்தல் செயல்பாடுகள்! கொஞ்சமும் சளைக்காமல் தேர்தல் பிரசாரம் செய்தவிதம் பாராட்டியே ஆக வேண்டும்! ராகுல் காண்டி எதையும் கற்றுக்கொள்கிற பிறவி இல்லை என்பதால் News 18 தளத்தில் ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியது வெறும் நப்பாசை தான்!         

Naysayers may have rejected the Modi government’s plan to provide free ration to more than eight crore people of Bihar, but by doing this, the Prime Minister has ensured that not a single person goes hungry to the bed in the night. Out of the 4.7 crore accounts opened under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) in Bihar, more than 2.5 crore belong to women. The government has transferred more than Rs 13,000 crore into these accounts. It became difficult even for leaders of the opposition parties to discount these welfare measures that have benefitted a large segment of the population. The opening up of academic institutions of eminence such as AIIMS, Nalanda University and NIFT among others, and infrastructure development like airport in Darbhanga, will transform the lives of the people of Bihar.

Prime Minister Modi has asserted that the development of India is incomplete without the development of Bihar. 

இப்படி ஒரு கருத்து வெளியாகியிருப்பது சேகர் குப்தாவின் The Print தளத்தில் தான் என்றால் அது மிகப் பெரிய ஆச்சரியம். 

மீண்டும் சந்திப்போம்.  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)