Monday, November 4, 2019

கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! மத்தியகிழக்கும் எண்ணெய் அரசியலும்!

திராவிடங்களுடைய அழுத்தத்தில் மதன் ரவிச்சந்திரன் வெளியேற்றப்பட்ட பிறகு காவேரி நியூஸ்  சேனல் எப்படி இருக்கிறது? யூட்யூப் சேனலில் இயங்குவது தெரியும், உங்கள் வீடுகளில் டிவியில் பார்க்க முடிகிறதா? ஆசிரியராக கார்த்திக் மாயக்குமார் உள்ளூர் திராவிடங்களோடு மோதல் வராதபடி என்ன என்னமோ செய்து சேனலை இன்னும் உயிரோடு வைத்திருக்கப் படாத பாடுபடுகிறார். ஒரு சாம்பிளுக்கு ஒரு 27 நிமிட வீடியோ என்று அங்கே நேற்றைக்கு எழுதிய பதிவுக்கு எந்தவொரு எதிர்வினையும் வராததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை!


இந்த 10நிமிட வீடியோ  NewsX சேனலில் அக்டோபர் 29 அன்றே ஒளிபரப்பான ரிஷப் குலாடியின் அலசல், காவேரி நியூஸ் சேனலில் கார்த்திக் மாயக்குமார் உளறிக் கொட்டிய மாதிரி பெட்ரோலியத்துறையே என்னமோ அம்பானிகளுக்கு தாரை வார்க்கப் பட  இருக்கிறமாதிரியான தனியார்மயப் பூச்சாண்டி அல்ல. அல்லது சவூதிகள் இந்தியாவையே வாரி விழுங்கி விடப்போகிற மாதிரியானதும் அல்ல.

சவூதி அரேபியாவைப் பற்றி, அதன் வஹாபி அரசியல் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வை த்திருக்கிறோம்?
அங்கே உள்நாட்டு அரசியலில் என்னென்ன மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன? இந்த முகநூல் பகிர்வு கொஞ்சம் உதவியாக இருக்கலாம்!  
சமிபத்தில் கையெழுத்தான, நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான சவூதி அரேபிய–இந்திய முதலீட்டு ஒப்பந்தங்களை மூன்று காரணங்களுக்காக மிக முக்கியமானவையாக நான் நினைக்கிறேன்.
முதலாவது காரணம், இந்த முதலீடுகள் வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக உதவியாக இருக்கும். இது அனைவரும் அறிந்ததுதான்.
இரண்டாவது, பாகிஸ்தானிகளையும் அவர்களுக்குப் பணம் கொடுக்கும் சவூதி அரேபிய வஹாபியர்களையும் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். உலகமெங்கும் பரவி அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வஹாபிய பயங்கரவாதத்திற்கும் காரணமானவர்கள் இந்த இரு தரப்பினரும்தான்.
மூன்றாவது முக்கிய காரணம் ஏழாம் நூற்றாண்டுப் பிற்போக்குச் சிந்தனையுடனிருக்கும் சவூதி அரேபியாவை நவீனப் படுத்தும் எண்ணமுடைய, அதற்கான நடவடிக்கைகளை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையேயும் எடுக்க முயன்று கொண்டிருப்பவரான, MBS என்று அறியப்படுகிற இளவரசர் மொஹம்மத்-பின் சல்மானின் கரங்களை இந்திய உறவு பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
சவூதி அரேபியா ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்போக்குச் சிந்தனையுடைய இஸ்லாமிய ஷரியாச் சட்டங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு நாடு. சவூதி அரெபியப் பெண்கள் எந்தவிதமான சுதந்திரமுமின்றி அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதினை உலகறியும். கடுமையான குரானிய தண்டனைகள் மூலம் அடக்கி ஆளப்படும் குடிமக்களைக் கொண்டதொரு நாடு. குறிப்பாக ஷியா முஸ்லிம்களின் நரகம் என சவூதி அரேபியாவைச் சொல்லலாம். சவூதியின் அதிகாரம் முழுவதும், வஹாபிய அடிப்படைவாதிகளிடமும் முத்தவாக்கள் என்றறியப்படும் இஸ்லாமிய மதகுருக்களிடமும் இருக்கிறது. அவர்களை எதிர்த்து எவராலும் சவூதியில் ஆட்சி செய்வது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.
இன்னொருபுறம் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்குன் சவூதி இளவரசர்கள். சவூதி அரசகுடும்பம் எந்த பழங்குடிக் குடும்பத்துடன் மண உறவு கொண்டாலும் அந்த பழங்குடியில் இருக்கிறவர்கள் அத்தனைபேர்களும் இளவரசர்களாக அறியப்படுவார்கள். அவர்களால் ஆட்சிக்கு வர இயலாது எனினும், அவர்களுக்கு சாதாரண சவூதி குடிமகனைவிடவும் அதிக அதிகாரமும், பணமும் கிடைக்கும். இப்படியாகப் பட்ட சவூதி இளவரசர்கள் ஏறக்குறைய முப்பதினாயிரம்பேர்களுக்கு மேலே சவூதி அரேபியாவில் இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக பில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்கள் ஒவ்வொரு வருடமும் செலவாகிறது.
மேற்படி “இளவரசர்கள்” வேலை எதுவும் செய்வதில்லை. ஆனால் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். புதிதாக ஆட்சிக்கு வருகிற அரசருக்கு ஆதரவாக இருப்பதற்காக அவர்களுக்க்குப் பணம் வாறி இறைக்கப்படுகிறது என்றாலும் எதிர்ப்புகள் இல்லாமலில்லை. அவ்வப்போது சவூதி இளவரசர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தி காதோடு காதாக உங்களை வந்து எட்டும். அவர்களை அடக்கி வைப்பது ஒவ்வொரு சவூதி அரசருக்கும் பெரும்பாடுதான். இல்லாவிட்டால் ஒருவனை ஒருவன் கொன்று கொள்வான். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை.
இரண்டாவது மிகப் பெரிய பிரச்சினை வஹாபிய பிற்போக்கு மத அடிப்படைவாதிகளும், முத்தவாக்களும்தான். அவர்கள் நினைத்தால் சவூதி அரேபியாவை ரத்தக்களறியாக்க முடியும் என்பதால் ஒவ்வொரு சவூதி அரசரும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அஞ்சுவார்கள். எனவே முடிந்தவரை அவர்களின் அடாவடித்தனங்களில் தலையிடாமல் விலகியிருக்கவே விரும்புவார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பேச்சைக் கேட்காமல் சவூதி அரேபியாவை நவீனப்படுத்த முயன்ற சவூதி அரசர்கள் நித்திய கண்டம் பூரண ஆயுசாகத்தான் வாழ இயலும்.
1970களில் சவூதி அரேபியாவை ஆண்ட ஃபைசல் (ஃபைசல்-பின் முசாயித்) சவூதி அரசர்களிலேயே மெத்தப் படித்தவர். அறிவும், திறமையும் கொண்ட ஃபைசல் சவூதி அரேபியாவை ஒரு சுதந்திர நாடாக, ஆணும் பெண்ணும் சம உரிமை கொண்ட ஒரு நாடாக, கல்வி அறிவு உள்ள ஒரு நாடாக ஆக்குவதற்கு முயற்சி எடுத்தவர். அதில் ஏறக்குறைய வெற்றி அடைகிற நேரத்தில் அமெரிக்கர்களைப் பகைத்துக் கொண்டார்.
சவூதி அரேபியாவில் முதல் முதலில் பெட்ரோலைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்கர்கள். அதைக் கண்டுபிடித்த நாளிலிருந்து மொத்த பெட்ரோலிய உற்பத்தியும் அவர்களின் கையில்தான் இருந்தது. Aramco என்கிற அந்த அமெரிக்க நிறுவனத்தில் சவூதிகளுக்கு உரிமை எதுவுமில்லை. அமெரிக்கர்கள் கொடுக்கிற பணத்தை வாய்மூடி வாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமை. ஃபைசல் இதனை மாற்றுவதற்கு முயற்சி செய்து Aramcoவை நாட்டுடமை ஆக்கினார். இது நடந்த கொஞ்ச நாட்களுக்குள் சவூதி இளவரசன் ஒருவன் ஃபைசலின் தலையில் துப்பாக்கியால் சுட்டு அவரது மூளையைச் சிதறடித்துவிட்டான். அதன் பின்னனியில் அமெரிக்கா இருந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது எனச் சொல்லிக் கொள்கிறேன்.
இப்படியாக சவூதி நவீனமயமாக்கல் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டது. ஃபைசலுக்குப் பின் வந்த சவூதி அரசர்கள் நாட்டின் தினப்படி நிர்வாகத்தை சவூதி மதகுருக்களிடம் விட்டுவிட்டார்கள். மறந்தும் கூட அவர்களின் விஷயத்தில் சவூதி அரசர்கள் தலையிடவில்லை.
ஆனால் இளைஞரான சவூதி பட்டத்து இளவரசர் மொஹம்மத்-பின் சல்மான் இன்றைக்கு அதனைக் கையில் எடுத்திருக்கிறார். பெண்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் வீட்டோடு அடைத்து வைக்ப்பட்டு வாழ்ந்த சவூதி அரேபியாவில் முத்தவாக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி அவர்கள் தனியாக காரோட்டலாம் என்கிற நிலமை அவரால்தான் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதனையும் தாண்டி மேலும் பல மாற்றங்களைக் கொண்டுவர நினைக்கும் அவருக்கு வஹாபிய அடிப்படைவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் பலமாக உருவாகியிருக்கிறது.
கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சவூதி அரேபியாவின் பாதுகாப்பு பாகிஸ்தானிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய ராணுவத்தினர் இன்றைக்கு சவூதி அரேபியாவில் இருக்கிறார்கள். சவூதி அரசர்களையும் அவர்களது உறவினர்களையும் பாதுகாக்கும் பொறுப்பிலும் பாகிஸ்தானிய ராணுவமே இருக்கிறது. ஏமனில் நடக்கும் போரை நடத்துபவர்களும் பாகிஸ்தானிகள்தான். இதற்கென சவூதி அரேபியா பாகிஸ்தானுக்கு பல பில்லியன் டாலர்களை வருடாவருடம் கொடுத்து வருகிறது. அதனுடன் ஒவ்வோரு வருடமும் ஏறக்குறைய இரண்டு பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலை பாகிஸ்தானுக்கு இலவசமாகக் கொடுக்கிறது சவூதி அரேபியா.
பாகிஸ்தான் கேட்கும் போதெல்லாம் சவூதி அரேபியா பணம் கொடுப்பதற்கான காரணமும் இதுதான். இன்னொருபுறம் வஹாபிக்கள் பாகிஸ்தானுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். பாகிஸ்தானிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அடிப்படையே சவூதி அரேபிய வஹாபி மூடர்கள்தான். சீர்திருத்தவாதியான மொஹம்மத்-பின் -சல்மான் இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைப்பது பாகிஸ்தானிகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தானிய ராணுவத்தினருக்குப் பிடிக்கவேயில்லை. எனவே இளவரசர் சல்மான் எப்படியாவது அங்கிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் பாகிஸ்தானிகள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மொஹம்மத்-பின் சல்மான் இரண்டு பெரும் தவறுகளை இதுவரை செய்திருக்கிறார். முதலாவது ஏமனின் மீது போர் தொடுத்தது. இரண்டாவது பத்திரிகையாளரும் சக சவூதியுமான பத்திரிகையாளர் கஸோகியை துருக்கியில் வைத்துக் கொன்றது. இரண்டுமே சல்மானுக்கு மிகுந்த கெட்ட பெயரை வாங்கித் தந்திருக்கின்றன. ஏமனில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அனுபவமற்ற இளைஞரான சல்மானின் இந்தப் போர் தேவையற்றது என்பதுபோலவே கஸோகியின் கொலையும் தேவையற்றதுதான்.
அதிலும் கஸோகியின் கொலை ரத்தத்தை உறைய வைப்பது. துருக்கியிலிருந்த சவூதி தூதரகத்துக்கு அவரை வரவழைத்து அவரை உயிருடன் துண்டு, துண்டாக வெட்டிக் கொன்றார்கள். கொல்லப் படுகையில் கஸோகி செல்ஃபோனை ஆன் செய்து வைத்திருந்ததால் இந்தக் குலை நடுங்கும் படுகொலை வெளியுலகிற்குத் தெரியவந்தது.
அதேசமயம் கஸோகி ஒரு வஹாபிய அடிப்படைவாதம் கொண்ட பிற்போக்குத்தனமான ஆசாமி என்பதினையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் மொஹம்மத் பின் சல்மானுக்கு எதிரானவை என்றாலும் ஒரு சீர்திருத்தவாதி என்கிற முறையில் அவரை நாம், குறிப்பாக இந்தியர்கள், ஆதரித்தே ஆகவேண்டும். அவரது கரத்தை வலுப்படுத்த இந்த முதலீடுகள் உதவக்கூடும்.
சவூதி அரேபியாவிலிருந்து பாகிஸ்தானிய ராணுவத்தை வெளியேற்றுவது அத்தனை எளிதான விஷயமல்ல. அப்படியே வெளியேறினாலும் அவர்களுக்கு ஒரு “காஃபிர்” ராணுவம், அதாகப்பட்டது இந்திய ராணுவம், பாதுகாப்பளிக்க அங்குள்ள முத்தவாக்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இந்தியா இதற்கானதொரு தீர்வைக் கண்டடைந்து மொஹம்மத்-பின் சல்மானுக்கு பாதுகாப்பளிக்க முயலவேண்டும். அது அத்தனை எளிதான ஒன்றல்ல என்றாலும் கூட மாற்றுப்பாதைகளைக் கண்டடைவது அவசியம்.
இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நூற்றுக்கு நூறு இந்தப்பகிர்வுடன் ஒத்துப்போகிறேன் என்றல்ல, 3
60 டிகிரியிலிருந்தும் செய்திகளைத் தேடிப் படித்து விஷயத்தைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி!  
எல்லாவற்றையும் விட நரேந்திர மோடி பிரதமரான பிறகு மத்தியகிழக்கு நாடுகள் மீதான பார்வை, வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் அணுகுமுறை மாற்றம் இவைதான்  கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.
But the visit turned out to be about much more. There is a substantive shift happening in India’s approach to the Middle East policy and this visit further reinforced those trends. Since coming to office in 2014, Modi has pushed an aggressive strategy of partnering with key regional powers like Saudi Arabia, the United Arab Emirates and Israel in a bid to attract investments and forge deeper security partnerships. In doing so, he has largely ignored Iran and broken with India’s Cold War-era legacy in the region of merely “balancing” between key actors.Despite the complexity of governing a country the size of India and navigating its dizzying domestic politics, Modi has managed to visit eight Middle Eastern countries and territories since 2014, more than his four predecessors combined. As so often is the case in the Middle East, the big driver is oil. முழுச் செய்தியும் இங்கே.  
கொஞ்சம் தெரிந்து கொள்வோமே! மீண்டும் சந்திப்போம். 

6 comments:

  1. மதம் என்பது அடித்தட்டு மக்களைத் தான் ஈர்க்கின்றது. கடைபிடிக்க வைக்கின்றது. வெறிகொள்ளவும் வைக்கின்றது. நடுத்தர மக்களுக்கு அது கௌரவம் சார்ந்த விசயமாக உள்ளது. மேலே செல்லச் செல்ல அது ட்ரில்லியன் டாலர் வர்த்தகம் அது சார்ந்த கூட்டணியாக மாறுகின்றது. இது தான் உண்மை. மோடி அங்கே சென்ற போது பிரதமருக்கு வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பைப் பார்த்தேன். அதுவொரு முழுமையான வணிக ஒப்பந்த பரிமாற்றத்திற்கு அச்சாரம் போலவே இருந்தது. இது பலருக்கும் புரியாது. காரணம் சர்வதேச அரசியல் குறித்து நம்மவர்கள் புரிந்து கொள்ள சில பல ஆண்டுகள் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      பொருளாதாரம், மதம், சித்தாந்தங்களை விட மிகப்பெரியது, வலிமைமானதும் கூட! மெக்கா மதீனா இரு இடங்களின் பாதுகாவலர்களாக சவூதி அரச குடும்பம் இருக்கிறது. அங்கே மதகுருமார்களுடைய ஆதிக்க அரசியல் வஹாபியிசம் என்று பரவலாக அறியப்படுகிற மத அரசியல் வலுவாக இருக்கிற போதிலும், பட்டத்து இளவரசர் MBS தந்தையையும் மீறி, பல சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறார் என்பது முதல் விஷயம்.

      அமெரிக்கர்களைத் தாண்டி, எண்ணெய் ஒன்றையே நம்பியிராமல் தங்களுடைய எதிர்காலத்துக்குத் தேவையான மாறுதல்களைச் செய்ய முனைந்திருக்கிறார். இத்தனை காலம் இலவசமாகவே எல்லாவற்றையும் அனுபவித்து சோம்பேறிகளாகிவிட்ட சவூதி மக்களை, ஒரே நாளில் திருத்த முடியாது என்பதைப்புரிந்து கொண்டே செயல்படுகிறார் என்பது அடுத்தது. அரைகுறையாகச் செய்திகளைப் பார்த்தால் (சுட்டி கொடுத்திருக்கிற) கார்த்திக் மாயக்குமார் உளறுகிற மாதிரித்தான் ARAMCO முதலீடுகள் இங்கே உள்ள தொழில்களை விழுங்க வருகிறதுபோலப் பூச்சாண்டியாகத்தான் தெரியும். அதேபோல முகநூலில் நரேந்திரன் சொன்னது போல சவூதிகளின் 100 பில்லியன் டாலர் முதலீடுதான் இந்தியப்பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கப் போகிறது என்பதும் முழுமையான புரிதலும் இல்லை.

      கூர்ந்து கவனித்தால், முந்தைய 67 வருடங்களைப் போல அல்லாது, பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளிலிருந்தே பாகிஸ்தானிகளை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துகிற விதத்தில் நம்முடைய வெளியுறவுக் கொள்கையும் வெளியுறவுத்துறையும் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவருவதைப் பார்க்க முடியும். அந்த வகையில் OIC என்கிற எண்ணெய் வள நாடுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தானிய ஆதரவு நிலையில் இருந்து விலகி வந்துவிட்டதோடு, வலிமையோடு வளர்ந்துவரும் இந்தியப்பொருளாதாரம் தங்களுக்கும் உதவும் என்று முதலீடுகள், பாதுகாப்பு விஷயங்கள் என்று இந்தியாவோடு உறவு கொண்டாட முன்வருகிறார்கள்.

      இங்கே உள்ளூர் திராவிடங்கள், வெட்டி அக்கப்போர்களிலேயே தொடர்ந்து ஜனங்களுடைய கவனத்தை வைத்திருக்க முயல்வவார்கள். நாம்தான் அதிலிருந்து விடுபட்டு, நம்மைச் சுற்றியுள்ள உலகம் எத்தனை வேகமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்து கொள்வதோடு, நண்பர்களுக்கும் அதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

      Delete
  2. ஜோதிஜி அவர்கள் சொல்லியிருப்பதுபோல, சர்வதேச அரசியல் சமாச்சாரம். நம்மவர்கள் என்ன எனக்கும் அதிகம் புரியாத விஷயம்தான். உங்கள் பதிவுகளைப் படித்து கொஞ்சம் தெரிந்துகொள்கிறேன். அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கௌதமன் சார்!

      முதலில், சர்வதேச அரசியல், வெளியுறவு விவகாரங்கள் புரிந்துகொள்ளக் கடினமானது அல்ல. உள்நாட்டு அரசியல், பொருளாதாரம் இவைகளே வெளியுறவுகளில் ஒரு நாடு என்ன நிலை எடுக்கிறது என்பதைத் தீர்மானிக்கின்றன.

      நம்மூரில் வெளியுறவுக் கொள்கை கற்பனையில் மிதந்து கொண்டிருந்த நேருவும், நேருவுக்கு ஒன்றுமே தெரியாது என்ற மிதப்பில் இருந்த கிருஷ்ண மேனனும் சேர்ந்து உருவாக்கியது. நேருவின் கற்பனாவாத, சமாதானப்புறா வேடமே பிரதானமாக இருந்த வெளியுறவுக்கொள்கை 1948 இலும் அடுத்து 1962 சீனப்போரிலும் அடுத்தடுத்து அடி வாங்கிய பிறகும் course correction செய்யப்படாமலேயே போய்க்கொண்டிருந்த நிலைமை இப்போது கொஞ்சம் வேகமெடுத்து விட்டதைப் பிடிக்கிற தெளிவுக்கு வந்திருக்கிறது என்பதுதான் இந்தப்பதிவின் சாரம்.

      தொடர்ந்து பேசலாம்!

      Delete
  3. மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      இதில் சுட்டி கொடுத்திருக்கிற இருவேறு கருத்தைச் சொல்லும் வீடியோக்கள் மட்டுமே சுமார் 39 நிமிடங்கள். அதுபோக முகநூல் பகிர்வு அதுஇது என்று ஒரு 5 நிமிட வாசிப்பு. மேலே பின்னூட்டங்களில் சொல்லியிருப்பதுடன் சேர்த்தால் மொத்தம் 47 நிமிடம். நிச்சயமாக இது சுருக்கமான பதிவு இல்லை! :-)))

      இன்று மதியம் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனிடம் எங்கள்Blog இல் சென்ற மாதம் 19 ஆம் தேதி நெல்லைத் தமிழனின் புத்தக விமரிசனப்பதிவில் அவரைப்பற்றி எழுதியிருந்த விவரங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்! .

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)