Showing posts with label ஏய்ப்பதில் கலைஞன். Show all posts
Showing posts with label ஏய்ப்பதில் கலைஞன். Show all posts

Monday, June 14, 2021

சொல்லாதே யாரும் கேட்டால்! சொன்னாலே தாங்க மாட்டார்!

சொல்லாதே யாரும் கேட்டால்! சொன்னாலே தாங்க மாட்டார்! இப்படி ஒரு பழைய திரைப்படப்பாடல் இந்தத் திருட்டுச் செய்தியைப் படித்தபோது பின்னணியில் ஒலிக்கிற மாதிரியே இருந்ததென்றால் நம்புவீர்களா?


கிஸ்லே பாண்டே! ட்வீட்டரில் தன்னை சுப்ரீம் கோர்ட் சொலிசிட்டர் என்று சொல்லிக்கொள்பவராம்! உத்தரப் பிரதேச  போலீசோ இந்தமனிதர் சட்டப்படிப்பெல்லாம் போலி என்கிறது.இப்போது சொன்னால் தாங்க முடியாதென்று சொன்னது இவர் நிஜவக்கீலா போலி வக்கீலா என்பதல்ல! கிரேட்டர் நொய்டாவில் இவர் வாடகைக்கு எடுத்திருக்கிற flat இல் இருந்து திருடுபோன 13 கிலோ தங்கம், ரொக்கம் பிடிபட்டிருப்பதுதான் விஷயம். இது வரை பதிவுசெய்யப்பட்ட  திருட்டு வழக்குகளிலேயே சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கமாக 57 லட்சரூபாய் என்றிருந்தால் யாரால் தான் தாங்க முடியுமாம்? சொல்லுங்களேன்!

இத்தனைக்கும் இந்த வீடு இந்த போலி வக்கீல் பெயரில் இல்லை. ஏகப்பட்ட மோசடிப்புகார்கள் இவர்மீது இருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதெல்லாம் 18, 19 வருடங்களுக்கு முந்தையவை என்று லாயர் அசால்டாகச் சொல்கிறார்.


 

எப்படி இதுமாதிரி மோசடிப்பேர்வழிகள் எல்லாம் உலக மகாடாக்டர் ரேஞ்சிலேயே இருக்கிறார்கள் என்பதை இந்தச் செய்தியைப் படித்தபோது முதலில் அதிர்ச்சி அடுத்து ஆச்சரியம் என்று டாஸ்மாக் பக்கம் போகாமலே மயக்கம் வந்துவிட்டது .

மீண்டும் சந்திப்போம். 

Thursday, June 3, 2021

ஜூன் 3 நாள்சிறப்பு #கட்டுமரம் சாதித்ததும் சோதித்ததும்!

திமுகவின் கருணாநிதி தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் கட்டுமரம் என்பது நிறையப்பேருக்கு மறந்துபோய் இருக்கலாம். நினைவுபடுத்துவது நமது கடமை.


வீடியோ வெறும் 47 செகண்ட்தான்! 


காகித ஓடம்  பாடலும் கட்டுமரம் என்ற அடைமொழியும் காலத்தையும் மீறி நிலைத்தது.


மதுரைக்கு வந்த இந்திரா காண்டி மீது கல்வீச்சுநடத்திய  திமுகவின் சாதனையை மிஞ்சிய வாய்ஜாலம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமோ?


பணம் பணம் பணம் என்பதே அவரது உயிர்மூச்சு!  


பாசமிகு குடும்பத்தலைவனாக இருந்ததே வாழ்நாள் சாதனை!


இரண்டாம் , மூன்றாம் தலைமுறை தாண்டி நான்காம் தலைமுறை கூட நெடுநெடுவென வளர்ந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!


வெற்று வார்த்தைமைலேயே அரசியல் நடத்திய ஜாலம் வேறெந்த அரசியல்வாதியிடமும் காணமுடியாதது. சார்ள்ஸ் டிக்கென்ஸின் ஆலிவர் டிவிஸ்ட் நாவலில் ஒரு ஏமாற்றுக்காரச்சிறுவனை artful dodger என்று வர்ணித்து இருப்பது #ஏய்ப்பதில்கலீஞன் ஆக கருணாநிதிக்கும் பொருந்திப்போனதே!  

சாதனையில் வியந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

Wednesday, April 22, 2020

அடடே! மதி கார்டூன் ஸ்பெஷல்

தினத்தந்தி மாதிரி ஒரு பச்சோந்தி ஊடகத்திலிருந்து கார்டூனிஸ்ட் மதி வெளியேற்றப்பட்டு இருப்பது பல வகையில் அவருக்கே மிகவும் நல்லதுதான்! அவர் காலமும் கார்டூன்களும் நிச்சயம் வெல்லும்! வாசகர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்! வாழி நலம் சூழ! அடடே! மதி வரைந்த கார்டூன்களின் சிறு தொகுப்பாக  இந்தப்பதிவு.



இசுடாலின் தினத்தந்தி ஆதித்தனுக்கு கடிதம் எழுதினார். தினத்தந்தியும் வருத்தம் தெரிவித்தது. கார்டூனிஸ்ட் மதியை வீட்டுக்கு அனுப்பியது. 


ஊடகங்களின் மீதான தங்களுடைய பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று! தயாநிதி மாறன் பிரதமரையும் மக்களையும் பிச்சைக்காரர்கள் என்று உளறிய விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பிய மாதிரியும் ஆயிற்று!



மீண்டும் சந்திப்போம்/    

Tuesday, April 21, 2020

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!

கார்டூனிஸ்ட் அடடே!மதி  தினத்தந்தியில் வரைந்த ஒரு கார்டூனை வைத்து தீராவிடங்கள் ஒரு விஷபிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்தக் கார்டூனில் எந்தவிதமான அரசியலும் உள்நோக்கமும் இல்லாதபோதே இப்படி! சுபவீ செட்டியார் ரொம்பவுமே குதித்திருக்கிறார். இசுடாலின் தினத்தந்தி ஓனருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தினத்தந்தியும் கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து விஷயத்தைக் கைகழுவி விட்டது. ஆனால் சுபவீ செட்டியார் குதித்ததற்கு அண்ணாதுரையின் பழைய கதைகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்திருப்பது மட்டும்தான் மிச்சம்..  

   
S Shanmuga Nathan பெறுநர் 

**திராவிட பயங்கரவாதம்**

ஒரே ஒரு கார்ட்டூன், திராவிட பயங்கரவாதிகளின் சகிப்புத்தன்மையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இத்தனைக்கும் அது கேலிச்சித்திரம் அல்ல, அது ஒரு கருத்துப்படம். அந்தக் கருத்துப் படத்தில் "அவரையோ", அவர் கொள்கையையோ எதுவும் சொல்லாமல் ஏதோ ஒரு சிலை என்கிற கருத்தில் தான் வரைந்திருக்கிறார் ஓவியர்.

உடனே அவரை "பார்ப்பனப் பாம்பு" என்று வசை பாடி விஷம் கக்கி இருக்கிறது திராவிடத் தேள் சுப வீ. திராவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்ற 1960/70 மன நிலையில் இருக்கிறார் "பேராசிறியர்". பாவம் களநிலவரம் தெரியவில்லை அவருக்கு,

இதிலும் கூட ஓவியர் பிராமணர் அல்ல. இருந்தாலும் வேறு யாரையும் திட்டுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், பிராமணனை தேர்ந்தெடுத்து வசை பாடுகிறது.

மீசை வைப்பதல்ல வீரம். எந்த நிலையிலும் உண்மை பேசுவதுதான் உண்மையான வீரம். பிணத்திலும், தோசையிலும் சாதி பார்க்கும் பேடிக்கூட்டதுக்கு ஓவியர் மதி என்ன சாதி என்று தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் அவர் "சாதியை" சொல்லாமல் "பார்பனப் பாம்பு" என்கிறது இந்த விஷத்தேள். அவ்வளவு வீரம் அவருக்கு.

ஓவியர் மதி மன்னிப்பு கேட்காவிட்டால் காலம் செருப்படி கொடுக்கும் என்று பேசுகிறார். இவருக்கு ஒன்று புரியவில்லை, இவர் சுட்டிக்காட்டும் இதே காலம் தான் இவர்களுக்கு இப்பொழுது செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் முன்னம் செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கின்ற பாவத்திற்கு. அந்த அடி தாங்காமல் கத்துகிறார்.

திராவிட பயங்கரவாதிகள் எத்தனை வகையான கேலிச்சித்திரங்கள் வரைந்திருப்பார்கள்? இனிய உளவாக இன்னாதது எத்தனை பேசி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த மருந்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு திருப்பிக் கொடுத்தால் கசக்கிறது, இவர்களுக்கு.

திராவிடம் என்பதே ஒரு சகிப்புத்தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம் என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறார் இவர்.

நேத்து சொன்னேன்ல... அண்ணாதுரையின் வரலாறு இனி இணையம் பூராம் நாறும்னு... இதோ ம.வெ ஜி(Ma Venkatesan) சின்ன சாம்பிள் அவிழ்த்து விட்டிருக்கிறார்....

பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1

தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?

அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :

....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று. ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................

இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?

Surya Ramadoss

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் "பொதுமக்கள்" என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்! இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.! கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான மதசண்டையை இது பிரதிபலிக்கிறது!
எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையை, கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை "பொதுமக்கள்" என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.. டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களை இதே நபர்கள்தான் "தனியார் அமைப்பினர்" என அழைத்தனர்.
முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்..
சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது! அதே போல கிறித்தவ மதத்தில், வெள்ளை அங்கி பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!
கிறித்தவ மதத்திற்கு சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தையே.. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் "பாதர்கள்" போல, நிஜ வாழ்க்கை பாதர்கள் இல்லை.!
எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்! கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது!
உங்கள் பிரிவு பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மசானங்களில் கூடி, கொரானாவை தடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்!

நன்றி ; Saravanan Swamy S

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, October 22, 2019

படங்களோடு கொஞ்சம் அரசியல்+காமெடி!

சீரியசாக அரசியல் பேசவோ எழுதவோ சரியான மூடு வராத தருணங்களில் கார்டூன்களும், படங்களும் அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? வெறும் பத்துலட்ச ரூபாய்தானா? பானாசீனா மீது INX மீடியா விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதில் வெறும் 9.96 லட்ச ரூபாய்தான் லஞ்சமாகக் கை மாறியது என்று சொல்லியிருக்கிறார்களாம்! சதீஷ் ஆசார்யா கார்டூனில் கேலி செய்கிறார்.


சுண்டைக்காய்ப் பணத்துக்கெல்லாம்  கைநீட்டுகிறவரா அப்புச்சி? அமித் ஷாவை லந்தடிக்கிறேன் பேர்வழி என்று செட்டி நாட்டு கோமானையும் கேவலப்படுத்தி விட்டாரோ?

   
பாவம்! கர்நாடகாவில் இருந்துகொண்டு கார்டூன் வரைந்தால் இப்படித்தான் ஆகும் போல! என்ன தெனாவட்டில் சரத் பவார் தாங்கள்தான் ஆட்சியமைக்கப் போவதாகச் சொல்லி இருப்பார்  என்று கார்டூனிஸ்ட் கற்பனை செய்தாராம்?


இந்த ஒரு கார்டூனிலாவது உண்மையைச் சொல்லி இருப்பதால், முந்தைய இரு கார்டூன்களை மன்னித்து விடலாம்! என்ன சொல்கிறீர்கள்?   
   

படத்தில் இருப்பவர்கள் கருணாநிதியின் மகள் செல்வியும் அவரது கணவர் முரசொலி செல்வமும்! வலப்பக்கம் அவர்கள் பெயரில் முரசொலி உள்ளிட்டு நாளிதழ்களில்  வெளிவந்த பொறுப்பு துறப்பு அறிவிப்பு. பதிவர் உண்மைத்தமிழன் என்னமோ முகநூலில் இப்படி உருகுகிறார்:
லவ்வோ லவ்வுய்யா..!!!
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்தார்கள். இந்தக் கல்யாணத்திற்கு முதலில் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தாத்தா கலைஞருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி அவர் மூலமாக பெற்றோர்களின் மனதைக் கரைத்து கல்யாணம் செய்து கொண்டார் செல்வியின் மகள் எழிலரசி
காதல் கதை கடைசியில் இப்படி வந்து முடிந்திருக்கிறது..!  


ஒரே மகளுடைய மாப்பிள்ளையை இப்படி உதறுவானேன்?   இப்படி ஏய்ப்பதில் கலீஞர்களாக ஒட்டு மொத்தக் குடும்பமும் உறவுகளும் இருப்பதை வேறெங்காவது பார்த்ததுண்டா? 

  
உபிக்களிடம் கேட்கக் கூடாத கேள்விதான்!


ஆனாலும் கேட்கிறார்களே! என்ன செய்ய? !  மீண்டும் சந்திப்போம்.   

Tuesday, June 4, 2019

தமிழ்நாடு தனித்தீவு அல்ல என்கிற நாளும் வரும்!

உயிரோடிருந்த நாட்களில் எப்படியோ மரணத்துக்குப் பின் மக்களை சிரிக்க வைத்த ஒரேநபர் கருணாநிதி தான் போல! ஜூன் 3 ஆம் தேதி இசுடாலின் முதல்வர் என்று குதித்ததெல்லாம் வீணாய்ப்போய் நந்தனம் YMCA திடலில் கூட்டணிக் கட்சியினரைக் கூட்டி வெறும் நன்றி அறிவிப்புக் கூட்டமாக திமுக நேற்று நடத்திக் கொண்டிருந்த அதேநேரம் இணையத்தில் கண்டதுண்டோ கலீஞன் போல் பாணியில் காணாதது கண்ட உபிக்கள் மாதிரி இணையவாசிகள் கலக்கோ கலக்கென்று கலக்கிப் பகிர்வுகளை வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்ந்த விந்தையை என்னவென்று சொல்வதாம்?  #இப்படித்தான் ஒருமுறை என்று ஆரம்பித்து கருணாநிதி புராணம் பாடிக் களித்த பகிர்வுகளில் சிலவற்றை தினசரி தளத்தில் பார்க்க 


ஊழல் நாயகனை இப்படி மீம்களின் நாயகனாக்கி வைத்த காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்ல?


விகடன் யோக்கியர்கள் இத்தனை ரணகளத்திலும் இப்படி ஒரு செய்தியைப் போட்டுத் தங்களுடைய விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் என்கிற பதிவர் சரவணன் முகநூலில் பொங்கித் தீர்த்திருக்கிறார்.
ஊழல் ஊற்று உதயமாகிய நாள் இன்று....
இந்த கருப்புதினத்தில் சில உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.... அவை இதோ.....
திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்... ஞாபகப்படுத்துவோமே…
1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா?இல்லை.
2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே!!
3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!
4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்.
5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்?
6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு!!
7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்?!
8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?
10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே!!
11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது!!
12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது 'என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்’என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே இந்த கருணாநிதி?!
13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?
14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?
15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே!! இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?
16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?
17. கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..
இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையே இல்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே!.
ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும் வரை கட்சியில் அவர் குடும்பம் தவிர இனி வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி.
இடுக்கண் படினும் இளிவந்த செதமிழகம் ய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
திருக்குறள் 654
முழங்குங்கள் மேடைகளில் அதிரட்டும் தமிழகம்.
அவருடைய மகன் ஸ்டாலினும் அதே நயவஞ்சக பாணி குடும்ப அரசியலில்...
ஆம்.
திமுக இப்போது கருணாநிதி குடும்பத்தின் ஏக போக சொத்து.#HBD_THALAIVA😜😜  

தமிழகம் திமுக உள்ளவரை அக்கப்போர்களின் களம் ஆகத்தான் இருக்கும் என்பது தெரிந்ததுதான்! ஆனால் இவர்களுக்கு முந்தி ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு சில உருப்படியான விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறது.


தமிழகத்திலும் தனித்தீவாய் மாற்ற நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படுகிற நாளும் வரும்.

மீண்டும் சந்திப்போம்.
     

Saturday, April 6, 2019

ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...!

இந்தப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம், வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும்படி சிபாரிசு செய்வது உண்டு. 


முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு, சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து  கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது.

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள், மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு  ஓட வைக்கிற  ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில், ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு,அவஸ்தையோடு  பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள், உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான்,  இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, 
"சட்டம் ஒரு கழுதை!" 
கிட்டத் தட்ட  நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய  இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
n
இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"
சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின் வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும் தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்  ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.
Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி, 1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான், பிரிட்டிஷ்  வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதைஎனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்என்று சில வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு  வெளிவந்த  முதல் ஆங்கிலப் புதினம் இது தான்
 

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப் பெற்றுப்  போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும் ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும் கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக் காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக் காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்! காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்  எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில் இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர் ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும் கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.
போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும் எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது. 
அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப் பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும்  சோவெர்பெரி என்பவர்,  வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர் மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித் தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில்,  ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து வைத்திருந்த வட்டாரத்தில்  அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக் பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும் கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச் சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல் அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ் அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப் படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன்  ஃபாகின்ஸ், தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான். எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான். அந்த வீட்டில் இருப்பவர்களால், 
ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம் கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள்  மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன்  அதிக அக்கறை காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக் கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன்.  ஆலிவர் ஒரு பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள் எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று கேட்கிறீர்களா?

இங்கே கதையில்  பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில்அனாதை ஆனந்தன் என்ற பெயரில் ஏவிஎம் தயாரிப்பில்,  ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர் நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான், எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக் காட்டியிருந்த விஷயங்கள்!  அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது, எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை, (இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில் பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட் கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும். இந்த அவலங்கள்,  பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக் கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு  முன்னால் இத்தகைய அவலங்கள்  இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப் பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும், ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும் அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக் கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெண்பது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்! இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும் இருப்பது தான் இதன் சிறப்பு.
நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு கொள்ள முடியும்!
 

இது 2010 இல் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)