Tuesday, April 21, 2020

இரண்டு கார்டூன்கள்! பின்னாலிருக்கும் அரசியல்!

கார்டூனிஸ்ட் அடடே!மதி  தினத்தந்தியில் வரைந்த ஒரு கார்டூனை வைத்து தீராவிடங்கள் ஒரு விஷபிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்தக் கார்டூனில் எந்தவிதமான அரசியலும் உள்நோக்கமும் இல்லாதபோதே இப்படி! சுபவீ செட்டியார் ரொம்பவுமே குதித்திருக்கிறார். இசுடாலின் தினத்தந்தி ஓனருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தினத்தந்தியும் கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து விஷயத்தைக் கைகழுவி விட்டது. ஆனால் சுபவீ செட்டியார் குதித்ததற்கு அண்ணாதுரையின் பழைய கதைகள் எல்லாம் வெளியே வர ஆரம்பித்திருப்பது மட்டும்தான் மிச்சம்..  

   
S Shanmuga Nathan பெறுநர் 

**திராவிட பயங்கரவாதம்**

ஒரே ஒரு கார்ட்டூன், திராவிட பயங்கரவாதிகளின் சகிப்புத்தன்மையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

இத்தனைக்கும் அது கேலிச்சித்திரம் அல்ல, அது ஒரு கருத்துப்படம். அந்தக் கருத்துப் படத்தில் "அவரையோ", அவர் கொள்கையையோ எதுவும் சொல்லாமல் ஏதோ ஒரு சிலை என்கிற கருத்தில் தான் வரைந்திருக்கிறார் ஓவியர்.

உடனே அவரை "பார்ப்பனப் பாம்பு" என்று வசை பாடி விஷம் கக்கி இருக்கிறது திராவிடத் தேள் சுப வீ. திராவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்ற 1960/70 மன நிலையில் இருக்கிறார் "பேராசிறியர்". பாவம் களநிலவரம் தெரியவில்லை அவருக்கு,

இதிலும் கூட ஓவியர் பிராமணர் அல்ல. இருந்தாலும் வேறு யாரையும் திட்டுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், பிராமணனை தேர்ந்தெடுத்து வசை பாடுகிறது.

மீசை வைப்பதல்ல வீரம். எந்த நிலையிலும் உண்மை பேசுவதுதான் உண்மையான வீரம். பிணத்திலும், தோசையிலும் சாதி பார்க்கும் பேடிக்கூட்டதுக்கு ஓவியர் மதி என்ன சாதி என்று தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் அவர் "சாதியை" சொல்லாமல் "பார்பனப் பாம்பு" என்கிறது இந்த விஷத்தேள். அவ்வளவு வீரம் அவருக்கு.

ஓவியர் மதி மன்னிப்பு கேட்காவிட்டால் காலம் செருப்படி கொடுக்கும் என்று பேசுகிறார். இவருக்கு ஒன்று புரியவில்லை, இவர் சுட்டிக்காட்டும் இதே காலம் தான் இவர்களுக்கு இப்பொழுது செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் முன்னம் செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கின்ற பாவத்திற்கு. அந்த அடி தாங்காமல் கத்துகிறார்.

திராவிட பயங்கரவாதிகள் எத்தனை வகையான கேலிச்சித்திரங்கள் வரைந்திருப்பார்கள்? இனிய உளவாக இன்னாதது எத்தனை பேசி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த மருந்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு திருப்பிக் கொடுத்தால் கசக்கிறது, இவர்களுக்கு.

திராவிடம் என்பதே ஒரு சகிப்புத்தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம் என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறார் இவர்.

நேத்து சொன்னேன்ல... அண்ணாதுரையின் வரலாறு இனி இணையம் பூராம் நாறும்னு... இதோ ம.வெ ஜி(Ma Venkatesan) சின்ன சாம்பிள் அவிழ்த்து விட்டிருக்கிறார்....

பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1

தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?

அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :

....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று. ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................

இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?

Surya Ramadoss

சென்னையில் கொரானாவில் இறந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, தமிழக மீடியாக்கள் "பொதுமக்கள்" என அழைக்க, அவர்கள் கிறித்தவ மதவாதிகள் என தற்போது தெரியவந்துள்ளது!

இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்! இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.! கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான மதசண்டையை இது பிரதிபலிக்கிறது!
எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையை, கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை "பொதுமக்கள்" என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.. டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களை இதே நபர்கள்தான் "தனியார் அமைப்பினர்" என அழைத்தனர்.
முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்..
சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது! அதே போல கிறித்தவ மதத்தில், வெள்ளை அங்கி பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!
கிறித்தவ மதத்திற்கு சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தையே.. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் "பாதர்கள்" போல, நிஜ வாழ்க்கை பாதர்கள் இல்லை.!
எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்! கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது!
உங்கள் பிரிவு பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மசானங்களில் கூடி, கொரானாவை தடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்!

நன்றி ; Saravanan Swamy S

மீண்டும் சந்திப்போம். 

14 comments:

  1. பாரதிதாசன் சொன்னதாக வந்திருக்கும் தகவல்கள் புதிது!

    ReplyDelete
    Replies
    1. புதிய தகவல் இல்லை ஸ்ரீராம்! பாரதிதாசன் தன்னுடைய கதை ஒன்றைப்படமாக்க பட்டபாடு தெரிந்தால் இந்தத்தகவல் சும்மா ஜுஜுபி தான்!

      Delete
  2. எப்படியோ குப்பையைக் கிளறி விட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. குப்பை கொட்டுவது கிளறப்படுவதற்காகவே!

      Delete
  3. // கொரானாவைத் தடுக்கிறேன் பேர்வழி என்றுகொரானா கிருமி பரவக் காரணம் ஆகாதீர்கள்//

    மிச்சம் மீதி இருக்கின்ற பேரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாம் சொல்லித் திருந்துகிற கூட்டமா அவை துரை செல்வராஜூ சார்!?

      Delete
  4. அன்றைக்கு பொது மக்கள் என்று வந்ததுமே நினைத்தேன் - என்ன இது நரிகள் அம்மணமாகப் போகின்றனவே - என்று...

    அப்புறம் தான் தெரிந்தது நரிகள் எப்போது வேட்டி கட்டியிருந்தன?.. என்பது...

    ReplyDelete
    Replies
    1. இந்தநரிகள் பாவாடை கட்டி அலைபவை!

      Delete
  5. யார் யாரெல்லாம் பொது மக்கள் என்று இப்போதே சொல்லி விட்டால் நன்றக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தப்பட்டது இஸ்லாமியர் என்றால் சிங்கிள் சோர்ஸ், தனியார் அமைப்பு இத்தியாதி. கிறுத்திருவம் என்றால் கிராம மக்கள் இவர்கள் எல்லாம் பொதுமக்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் மறைக்கப்படுவார்கள்.

      Delete
  6. பிறத்தியாரைப் பிடிக்க வில்லை என்றால் அவரது சிறுமையைச் சொல்லி வசை பாடுவதற்கு பாவேந்தரும் தப்பவில்லை போல் இருக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. ஒரு திரைப்படம் எடுப்பதற்காக பாரதிதாசன் பட்டபாடு அப்படி! திராவிடங்களுக்குப் புரிகிற மொழியிலேயே வெளுத்து வாங்கினார். அவர்களும் எதுவும் நடக்காதமாதிரி, துடைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

      Delete
    2. தனிப்படப் பேச வேண்டுமென்று முன்னர் சொல்லியிருந்தீர்களே! கூகிள் சேட் அல்லது மின்னஞ்சல் krishna04@gmail.com இல் தொடர்புகொள்ளலாம்

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)