குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.
ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா சேனலில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியுடன் நேற்று நடத்திய 47 நிமிட நேர்காணல், மற்ற ஊடக விவாதங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தேன்.
ரங்கராஜ் பாண்டே இந்த நேர்காணலில் கூர்மையான கேள்விகளை புகழேந்தியிடம் முன்வைக்கிறார். அவரும் எரிச்சலடையாமல் பொறுமையாக பதில் சொல்கிறார். அதுமட்டுமல்ல சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அதிமுகவில் பிளவு வருமா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா என்ற கேள்விகள் நேரடியாகக் கேட்கப் படவில்லை என்றாலும், புகழேந்தி கொஞ்சமும் தயங்காமல் அதிமுகவின் இன்றைய நிலைபாட்டை சொல்கிறார். ஏதாவது சதி இருந்ததா. பாஜகவின் அழுத்தம் இருந்ததா என்று திரும்பத் திரும்ப பாண்டே கேள்வியெழுப்பியதற்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் புகழேந்தி! பொய்யான பதிலில்லை, ஆனால் உண்மையை உடைத்துச் சொல்லவில்லை. ஒரு திறமையான ஊடகக்காரரிடம் முரண்படாமல் சமாளித்த புகழேந்தியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியக்கிறேன். அதிமுகவின் தற்போதைய மனநிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நேர்காணல். நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
கொஞ்சம் பழசாகிப்போன விஷயம் தான்! சாணக்யா தளம் அறிவித்த விருதை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு ஏற்கமாட்டார் இது கட்சியின் கொள்கை முடிவு என்று அறிவித்த விஷயம் தான்! CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொள்கை என்ற ஒருவிஷயம் இருப்பதே அந்தக் கேலிக்கூத்தான அறிவிப்புக்குப் பிறகுதான் தெரிந்தது. எமெர்ஜென்சி நாட்களில் இந்திராவுடன் சேர்ந்து கொண்டு இந்திராதான் இந்தியா என்று முழங்கியபோது, எமெர்ஜென்சிக்குப் பிறகு தேர்தலில் செம அடி வாங்கியபிறகு, சிபிஎம்முடன் சேர்ந்து கொண்டது, முதல் சமீபத்தில் திமுகவிடம் தேர்தல் கொடையாக 15 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டது வரை அவர்களுடைய லட்சியம், கொள்கை எல்லாம் வசதிக்குத் தகுந்தபடி காற்றில் பறக்க விடப் பட்டிருக்கிற கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது.
12 நிமிட சப்பைக்கட்டு
வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் சாணக்யா பெயரில் விருது என்பதால்தான் ஏற்க மறுத்தார்கள் என்று புதிதாக ஒரு சப்பைக்கட்டு கட்டுகிறார். அந்த விருதை ரங்கராஜ் பாண்டேவின் தளம் வழங்குகிறது. அதுவும் ரஜனிகாந்த் கையால்! இரண்டு விஷயமும் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிற திமுக கூட்டணிக்கு குறிப்பாக திமுக வுக்குப் பிடிக்காது. திமுகவுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என்பதுதான் CPI கட்சியின் இப்போதைய கொள்கை என்று வாய் திறந்து உண்மையைச் சொல்லிவிட முடியுமா? 15 கோடி ரூபாய் கொடுத்தவர்களுக்கு கொஞ்சமாவது நேர்மை, விசுவாசத்துடன் இருக்கவேண்டாமா?
வீடியோ 17 நிமிடம்
குமரி அனந்தன்! ஒரு நல்ல பேச்சாளர்! காமராஜரின் தொண்டராக இருந்தவர் சோனியாவின் குடும்பக் கட்சியில் தொடர்வது என்பது நகை முரண். என்னமோ தேசியம் இவரிடம்தான் வாழ்வதாக எதைவைத்து ரங்கராஜ் பாண்டே முடிவு செய்தாரோ? கொடுத்தார், குமரி அனந்தனும் பெரிய மனது பண்ணி வாங்கிக் கொண்டார் என்பதற்குமேல் வேறென்ன இருக்கிறது?
வீடியோ 10 நிமிடம்
பிஜேபியின் இல. கணேசன்! எளிமைக்கான சாணக்யா விருது அறிவிக்கப்பட்டதை, ஏற்றுக் கொண்டது மிகவும் பொருத்தமானதுதான்! ஆனால் யார் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்? அவரை ஞாபகப் படுத்துவதற்காகவே கொடுத்தமாதிரி இருக்கிறது.
ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்தை வைத்து நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி, ரஜனியின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துகிற மாதிரி மட்டுமே இருந்தது. அவ்வளவுதான்! தமிழருவி மணியன் இடத்தை ரங்கராஜ் பாண்டே பிடித்துக் கொண்டாரா அல்லது இது தனி டிராக் தானா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
ட்வீட்டர் தளத்தில் இந்தக் கீச்சைப் பார்த்ததுமே வாய் விட்டுச் சிரித்துவிட்டேன். இங்கே திமுகவை எதிர்ப்பது என்பது தங்களை வளர்த்துக் கொள்ளவே என்பதான நக்கலான தொனி இருக்கிறதே, இதை அறியாமை என்பதா அல்லது அகந்தை என்பதா? நல்ல மனிதர் என்றுதான் சொல்லக் கேள்வி, ஆனாலும் அந்த அது தான் எனக்குத் தெரியுமே என்கிற மிதப்பு இருக்கிறதே அதற்கு என்ன சொல்வீர்கள்? டணால் தங்கவேலுவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதானா? சற்றே நகுக என்று இந்த 9 நிமிடக் காமெடியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே போகவேண்டியதுதான்!
ஒரு கட்சி, ஒரு நடிகன், ஒரு எழுத்தாளன் இப்படி நமக்கு பிடித்தமாக இருக்கலாம்! தவறில்லை! பகடியாகக் கூட விமரிசிக்கலாம்! அதுவும்கூடத் தவறே இல்லை! ஆனால் தனக்கு வராத ஒன்றை, தெரியாத ஒன்றை இப்படி எழுதினால் காமெடிப்பீசாகி நிற்கவேண்டியதுதான்! கழகங்கள் என்றாலேயே விமரிசனத்துக்கு அப்பாற் பட்டவர்கள் என்பது மாதிரியான திராவிட மாயை இங்கே வெகுகாலமாக இருந்திருக்கிறது. எதுவானாலும் காலாவதியாகிப் போகிற நாள் என்று ஒருவிஷயம் இருக்கிறதல்லவா? இன்றும் கூட திராவிடப் புரட்டு, பிரபல பதிவர், திராவிட வலைப்பதிவர் என்ற பழைய மிதப்பிலேயே இருந்தால் எப்படி?
கலாட்டா தமிழின் விக்ரம் கூட அதேமாதிரியான ஒரு மயக்கத்தில் இருந்து தான் ரங்கராஜ் பாண்டேவுடன் இந்த 23 நிமிட நேர்காணலை நடத்தியமாதிரி எனக்குத் தோன்றுகிறது. ரங்கராஜ் பாண்டே அனுபவமுள்ள ஊடகக்காரர் அவர் ரஜனிகாந்த் ஆதரவு நிலையெடுத்து விட்டார் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சரியான கேள்விகளைக் கேட்கத்தெரியாததால் தான் அவரிடம் தெளிவான பதில்களைப் பெறமுடியவில்லை என்பது புரிகிறதா?
இங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறியப்பட்ட ஒரே நல்லமுகமான தோழர் நல்லகண்ணு சாணக்யா தளம் அறிவித்த விருதைப் பெற மறுத்துவிட்டார் என்பது அவரும் அவருடைய கட்சியும் எடுத்த முடிவாக இருக்கலாம். அதில் விமரிசிப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அதைவைத்து ரங்கராஜ் பாண்டேவோ, அவர் நடத்தும் சாணக்யா தளமோ மூக்குடைபட்டதாக நினைத்துக் கேள்வியைத் தொடங்கியது என்னமாதிரி ஜர்னலிசம் என்று எனக்குத் தெரியவில்லை. லயோலா விஸ்காம் படித்தவர்களிடமிருந்து தொற்றிக்கொண்ட வியாதியோ என்ற சந்தேகம் தான் திரும்பத்திரும்ப எழுகிறது.
கொஞ்சம் லோக்சபா காமெடி ஒன்றையும் பார்த்து விடலாம்!
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியை விட்டு வெளியேறி விளையாட்டுப்போல ஒருவருடம் நிறையப் போகிறதா? நிறுவனபலம் இல்லாமலேயே தன்னுடைய தனிப்பலத்தை சாணக்யா என்றொரு தளத்தை ஆரம்பித்து நிரூபித்தார். வேந்தர் டிவியின் CEO பொறுப்பு தேடிவந்ததையும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகிறார் என்பது திறமைக்கான அங்கீகாரம் என்பதோடு அதிர்ஷ்டமும் கைகொடுத்து இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.
வீடியோ 29 நிமிடம். அயோத்தி தீர்ப்பு. ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை இப்படிப் பலவிஷயங்களையும் தொட்டு கேட்கப்படும் கேள்விகளுக்குத் தயக்கம் எதுவுமில்லாமல் பதில் சொல்கிறார். இங்கே WIN News சேனலில் மதன் ரவிசந்திரன் செய்திகள், விவாதங்கள் நடத்துவது வேறுவிதம். இன்னும் கொஞ்சம் அனுபவம், முயற்சியும் சேர்ந்தால் பட்டைதீட்டப்பட்ட வைரமாக ஜொலிக்கிற நாளும் வரலாம்.
நம்மூர் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழ விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது எது? எப்போதாவது இதைப் பற்றி யோசித்துப் பார்த்தது உண்டா?அரசியல்வாதி என்றானாலே ஒரு அசட்டுத்துணிச்சல், அகந்தை இவை எல்லை மீறிப் போய்விட ஆரம்பித்து விடுகிறது. என்னை எதிர்த்து எவன் கேள்வி கேட்டுவிட முடியும் என்கிற திமிர் வந்து விடுகிறது.
கட்சி நிர்வாகியாகவோ தப்பிததவறி MLA, MP ஆகி விட்டாலோ கேட்கவே வேண்டாம்! வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாய்த் தங்களை நினைத்துக் கொள்கிற அபத்தமும் சேர்ந்து கொள்கிறது. விசிக தலைவர் திருமாவளவனுக்கு அந்த அதீதக்கற்பனை வந்துவிட்ட மாதிரித் தான் சமீபத்தைய நிகழ்வுகள் சொல்கின்றன.
ஆயிரம் குறை சொன்னாலும் இதுமாதிரி அரசியல் நிலவரத்தைப் பளிச்சென்று அவ்வப்போது சொல்லி விடுவதால் கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவைப் பாராட்டியே ஆகவேண்டி இருக்கிறது. அடங்கமறு! திமிறி எழு! நான் புலியாக்கும்! என்று வரட்டு வீம்பு, திமிரோடு திரிந்த சிவசேனாவை சரத் பவார் வழிக்கு கொண்டு வந்துவிட்ட மாதிரி, தற்போதைய செய்திகள் சொல்கின்றன. காங்கிரஸ் NCP நிபந்தனைகள் ஏற்கப் படுமா? மஹாராஷ்டிராவில் சிவசேனா அரசு அமையுமா? நாளைக்குத் தான் தெரியுமாம்!
புலிகள், புலிவேஷம் கட்டுகிறவர்கள் எல்லோருக்குமே போதாத காலம் வந்து வெகுகாலமாயிற்று. அதையெல்லாம் மறந்துவிட்டு நான் புலியாக்கும் சிறுத்தையாக்கும் என்றே சிலுப்பிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? உங்களுக்கு விடை தெரியுமா? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
அரசியலை வைத்து மட்டுமே பதிவுகள் எழுதுவதில் உள்ள சிக்கலே அப்படி எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் சுவாரசியமான பரபரப்புச் செய்தி எதுவுமே இருக்காது என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாகத் திராவிட அரசியல்வாதிகள் கோமாளித்தனங்கள் செய்வதிலேயே இல்லாத பரபரப்பையும் செய்திகளையும் தொடர்ந்து உருவாக்க முயற்சிக்கிறார்களோ?
பிஜேபிகாரர்கள் திருவள்ளுவருக்கு காவியாடை அணிவித்து விட்டார்கள் என்று கொதித்தெழுந்தார் இசுடாலின்! ட்வீட்டரில்தான்! அதையே அவர் பேசிய வீடியோவாக வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!
ஒழுங்கால் ஓரே ஒரு திருக்குறளைப் பிழையில்லாமல் சொன்னால் நாங்கள் போட்ட பதிவை நீக்கி விடுவோம் என்கிறது பிஜேபி! ஆக, இசுடாலினுடைய கோமாளித் தனங்கள் தான் இங்கே அரசியல், பரபரப்பு, செய்திகள் என்றே போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது?
பாவம்! ஐம்பது வருடங்களுக்கும் மேலாக திராவிட இயக்கம் செய்து வந்த நச்சுக் கலப்பு அம்பலமாகி நிற்கிற வேளை இது! இசுடாலின் கோமாளியாகி நிற்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
வெட்டி அக்கப்போர்களால் ஆனது தமிழக அரசியல் என்பது அப்பட்டமாகத் தெரிந்த விஷயம்தான்! திருச்சி வேலுச்சாமி ராஜீவ் காண்டி கொலைவழக்கு பற்றிப் பேசுகிற authority ஆகியிருப்பது இன்னொரு விதமான அக்கப்போர். ரங்கராஜ் பாண்டே நடத்துகிற இந்த விவாதம் அல்லது அக்கப்போர் வீடியோ 51 நிமிடம்.
கேள்வியே இதுபோன்ற வெட்டி அக்கப்போர் அரசியல் நடத்துகிறவர்களை எப்போது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?
குறைந்தபட்சமாக எப்போது உங்களை இந்தக் கேள்வி கேட்டுக்கொள்ளத் தயாராகப் போகிறீர்கள்?
சிரிப்பு, சர்ச்சைகளுக்கும் ராதாரவிக்கும் அப்படி என்ன தான் பொருத்தமோ வில்லங்க ராசியோ தெரியாது! ராதா ரவி என்ன பேசினாலும், எங்கே பேசினாலும், பலத்த சிரிப்பும் வரும்! பல சமயங்களில் பெரும் சர்ச்சைகளும் வரும் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த விஷயம் தான்! பழைய நினைவுகளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் விவகாரமாகவும் ஆக்கிப் பேசுகிற கலை எல்லோருக்குமே கைவந்து விடுகிறதா என்ன? !!
வீடியோ 33 நிமிடம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது. இதிலும் சர்ச்சை கிளம்புமா என்பதெல்லாம் இதுவரை எனக்குத் தெரியாத விஷயம்! ராதா ரவியை திட்டிக் கொண்டாவது ரசிக்க முடிகிற மாதிரியே, கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவையும் ரசிக்க வேண்டியிருப்பதை என்ன சொல்ல?
இது ஒரு சிவசேனா ஆசாமி சென்ற ஞாயிறு அன்று சாம்னா நாளிதழில் எழுப்பியிருந்த கேள்வியைவைத்து வரைந்த படம்.உத்தவ் தாக்கரே கேட்கிற மாதிரி எதற்காக? இங்கே நண்பர்கள் விஷயம் புரியாமல் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்! காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் நச்சுக் களைகள் மாதிரி! திரும்பத் திரும்பக் களையெடுக்காமல் விட்டுவைத்தால் விஷ விருட்சமாக வளர்ந்துவிடக் கூடியவை! சதீஷ் ஆசார்யா இன்னொரு கார்டூனில் வேறு செம காமெடி செய்திருக்கிறார்!
சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி பாலிவுட் திரை நட்சந்திரங்களைச் சந்தித்ததைப் பற்றிக் கேலியாக வரைந்த கார்டூன் இது! ஒரிஜினல் காந்தி கூட ஏதோ சினிமாவில் நடித்த மாதிரிச் சொல்லிக் கொண்டால்தான் சந்திக்க முடியும் என்பது போல ஒரு உள்குத்து! போகட்டும்! ஒரிஜினல் காந்தி மீது நிஜமாகவே அத்தனை அக்கறை இருந்தால் இங்கே சில டூப்ளிகேட்டுகள், பாட்டி, மகன், பேரன் பேத்தி என்று மூன்று தலைமுறைகளாகவே காந்தி பெயரை தங்கள் குடும்பப் பெயராக வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை அல்லவா முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும்?
இன்றைக்கு ரங்கராஜ் பாண்டே ஒரு 14 நிமிட வீடியோவை எந்த ஒரு ஊடகமும் என்னை நம்பாது என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார். பார்த்தபிறகுதான் அது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்ற 2018 ஏப்ரலில் பொன் மாலை பொழுது நிகழ்ச்சியில் பேசியதன் சுருக்கம் எனத் தெரிந்தது! பழசுதான்! தந்திடிவியில் இருந்த பழைய நாட்களில் பேசியது தான்! இப்போது கேட்கிற சமயத்திலும் கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! கேட்டுப்பாருங்களேன்!
ஊடகங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அப்படி என்ன பெரிதாக ஒற்றுமை இருந்து விடமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்குப் பதில் நான் சொல்வதைவிட ஒரு ஊடகக்காரரே, அதுவும் ரங்கராஜ் பாண்டே மாதிரி ஊரறிந்த ஒருத்தர் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
இந்த 20 நிமிட வீடியோவில் பானு கோம்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்பி TK ரங்கராஜ் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ரங்கராஜ் பாண்டே பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்! நாமும் விடிய விடிய ராமாயணம் கேட்டபிறகும் சீதைக்கு ராமன் என்ன உறவு என்றமாதிரியான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோம் இல்லையா! என்ன கேள்வி என்பது பதிவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது, என்ன பதில் என்பதாவது புரிகிறதா? கொஞ்சம் யோசித்து வையுங்கள், சரிதானா என்பதைப் பதிவை முடிப்பதற்கு முன் பார்த்து விடலாம்!
ரவி சீனிவாசன் ஒரு முகநூல் பதிவு எழுதி இருந்தார். அதில் அவர் சொன்னது இதுதான்"- "ராபர்ட் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் பெரிய பணக்காரர்!"
அவ்வளவுதான். இதைப் படித்து விட்டு கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையிடம் புகார் செய்ய, சிதம்பபாரம் உடனே காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, அதிகாலை நாலு மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ரவி சீனிவாசன் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
எல்லாம் 48 மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது.இப்படிப்பட்ட சிதம்பரம், தன்னைக் கைது செய்ய CBI தேடுகிறது என்றவுடன், என்ன சொல்கிறார்? "உயிரா சுதந்திரமா என்றால் நான் உயிரை விட சுதந்திரத்துக்குத்தான் மதிப்பளிப்பேன்". சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான்.
சிதம்பரம் உள்ளே இருக்க வேண்டும்; உள்ளேயே இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
சிதம்பரத்தை CBI கைது செய்தவுடன், செய்தி அறிந்த பாண்டிச்சேரி ரவி சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே!
PERHAPS CHIDAMBARAM OR HIS NOTORIOUS SON WOULDN’T BE RECOLLECTING RAVI SRINIVASAN OF PUDUCHERI WHO WAS ARRESTED FOR JUST TWEETING THAT KARTI CHIDAMBARAM WAS RICHER THAN ROBERT VADRA.
“All the world’s a stage, And all the men and women merely players; They have their exits and their entrances”
Remembering Shakespeare’s words, when reporters continued their wait, the ‘hero’ Karti Chidambaram makes his dramatic entry justifying the deeds of his father!
Perhaps Chidambaram or his notorious son wouldn’t be recollecting Ravi Srinivasan of Puducheri who was arrested for just tweeting that Karti Chidambaram was richer than Robert Vadra. The ‘omnipotent’ hands of the former home minister and then finance minister didn’t take much time to arrest a poor man with just 40 followers in twitter for the ‘crime’ of pronouncing how rich his son was. When Chidambaram talks about human rights, democracy and liberty it is nothing but the face of Ravi Srinivasan that comes to our minds. என்று கர்மா தியரியை நினைவு படுத்துகிறது இந்த ட்வீட்டர் செய்திகள்!
NDTV தொடர்பான 2000 கோடி money laundering வழக்கில் ப.சி.அக்யூஸ்டு நம்பர் 2 அந்த வழக்கு பதிவு செய்த வருமானவரித்துறை அதிகாரி திரு.சஞ்சை ஸ்ரீ வத்ஸவா வை இவர் செய்த கொடுமைகள்.விசாரணை அதிகாரி இவர் சொன்னபடி அஃபிடவிட்ல் கையெழுத்து இட மருத்ததால் சிகரெட்டால் சுடப்பட்ட சம்பவங்கள் என பல உண்டு
Translate Tweet
Quote Tweet
News7 Tamil
@news7tamil
·
#BIGNEWS
"ப.சிதம்பரம் பயங்கரவாதி அல்ல, அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவர், அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்" - திருமாவளவன், எம்.பி
http://ns7.tv | #Thirumavalavan | #PChidambaram | #ChidambaramArrested
சரி! இப்போது பதிவின் தலைப்பு, ஆரம்பவரியில் இருக்கிற கேள்விக்குப் பதிலென்ன?
இந்தப்பக்கத்திலோ அல்லது Consent to be nothing! பக்கத்திலோ வழக்கறிஞர்கள் பாதி உண்மை மட்டுமே சொல்கிறவர்கள் என்று சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? அதுமாதிரி ஒரு வீடியோ பகிர்ந்து அதில் ரங்கராஜ் பாண்டே, பொய் சொன்னது இல்லை, அதாவது சௌகரியப்படாதபோது உண்மை சொன்னதும் இல்லை என்ற ரீதியில் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?
எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதா? பரவாயில்லை! முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே சில விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போகிறார், பார்த்தீர்கள் தானே?!
அதில் எது உண்மை, எது பாதி உண்மை என்று சொல்ல முடிகிறதா? கொஞ்சம் முயற்சி செய்துதான் பாருங்களேன்!