Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

Monday, January 25, 2021

ஊதிப் பெரிதாக்கப்படும் சசிகலா புராணம்!

குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.  


ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா சேனலில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியுடன் நேற்று நடத்திய 47 நிமிட நேர்காணல், மற்ற ஊடக விவாதங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தேன்.

ரங்கராஜ் பாண்டே இந்த நேர்காணலில் கூர்மையான கேள்விகளை புகழேந்தியிடம் முன்வைக்கிறார். அவரும் எரிச்சலடையாமல் பொறுமையாக பதில் சொல்கிறார். அதுமட்டுமல்ல சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அதிமுகவில் பிளவு வருமா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா என்ற கேள்விகள் நேரடியாகக் கேட்கப் படவில்லை என்றாலும், புகழேந்தி கொஞ்சமும் தயங்காமல் அதிமுகவின் இன்றைய நிலைபாட்டை சொல்கிறார். ஏதாவது சதி இருந்ததா. பாஜகவின் அழுத்தம் இருந்ததா என்று திரும்பத் திரும்ப  பாண்டே கேள்வியெழுப்பியதற்கும் பொறுமையாக  பதில் சொல்கிறார் புகழேந்தி! பொய்யான பதிலில்லை, ஆனால் உண்மையை உடைத்துச் சொல்லவில்லை. ஒரு திறமையான ஊடகக்காரரிடம் முரண்படாமல் சமாளித்த புகழேந்தியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியக்கிறேன். அதிமுகவின் தற்போதைய மனநிலை  என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நேர்காணல். நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  
  


Sunday, February 9, 2020

தமிழருவி மணியன்! கரோனா வைரஸ்! மதன் ரவிச்சந்திரன்!

தமிழருவி மணியனின் சமீபகால பேச்சுக்களை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை. காரணம் அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிற விதம்! தனக்கு இருக்கும் 50 ஆண்டு கால அரசியல் பரிச்சயத்தில், ஒரு அரசியல் புரட்சியை உண்டாக்கிவிடமுடியும் என்பதுமாதிரி, ஒரு அமர்த்தலான பேச்சு! ஆனாலும் இந்த 8 நிமிட பேட்டியில் அவர் சொல்வது, ஏற்றுக்கொள்ளும் படியாக இருப்பதை மறுக்க முடியாது. கண்ணதாசன் பாட்டு ஒன்றைச் சொல்லி, அதுவும்  misinormation, disinformation இரண்டையும் புதியதலைமுறை சேனலுக்கு மட்டும் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது? ஆப்ஷன்கள்

1) நக்கல் 2) வஞ்சப்புகழ்ச்சி 3) செம காமெடி உளறல் 

         
புதிய தலைமுறை சேனல் அது ஏனய்யா எங்க சேனலுக்கு மட்டும் இப்படிப் பேட்டி கொடுத்துச் சொன்னீங்க என்று எதிர்க்கேள்வி கேட்கவில்லைதான்! ஆனால் அப்படி உள்ளுக்குள்ளே அப்படிக் கேட்டுக் கொண்டிருப்பதாக ஒரு சுகமான கற்பனை! 

இது கரோனா வைரஸ் பயமுறுத்தும் சீசன்!


சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் என்ன சொல்கிறார் என்று கேட்டுக் கொள்ளுங்கள்! வீடியோ 5 நிமிடம். 

மதன் ரவிச்சந்திரன் வளர்ந்துவரும் ஊடகக்காரர் சரி! வளர்ந்து வருகிறவர் என்பதாலேயே கொஞ்சம் நிதானிப்பது நல்லது என்று இந்தப்பக்கங்களிலேயே எழுதியதுண்டு.நிதானிக்கிற மாதிரி இல்லை என்பது பழ. கருப்பையாவோடு அவர்நடத்திய சதுரங்கம் நிகழ்ச்சியிலிருந்து வெளிப்பட்டது.


பழ. கருப்பையா நாத்திகர்தான்! ஈவெராவைப் போற்றுகிறவர்தான்! அதனாலேயே கி வீரமணி, சுபவீ போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறமாதிரி இவரிடமும் கேட்பது எந்தவகையில் இந்த நேர்காணலுக்குப் பொருத்தமாக இருந்தது? அனுபவமுள்ள ஒருவரை கேள்விகேட்டு மடக்குகிறேன் பார் என்று குறுக்கிட்டுக் கொண்டே இருந்ததில், அவருடைய கருத்தை முழுசாய் கேட்டுப்பெற முடிந்ததா? வளர்ந்து வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் இப்படிச் சறுக்குகிறாரே என்பதற்குமேல்  இந்த 24 நிமிட வீடியோ பார்த்ததில் சாரம் வேறெதுவுமில்லை 

மீண்டும் சந்திப்போம்.  
     

Saturday, January 4, 2020

எங்கேயோ இடிக்கிறதே! #தமிழகஊடகநிலவரம்

தமிழக ஊடகங்களில் ரொம்பவுமே துள்ளிக் குதித்தது நக்கீரன்! Investigative Journalism என்ற பெயரில் மஞ்சள் பத்திரிகையாகவே ரொம்பநாட்களாகவே நடந்து வருவதில் திடீரென்று ஒரு மாற்றம் தென்பட்டிருக்கிறது. நக்கீரன் முதன்முறையாக தமிழ்நாடு ஆளுநரைப் பற்றி தான் வெளியிட்ட செய்தி பொய்யானது என்று ஒரு ஓரத்தில் சின்ன பாக்ஸ் கட்டி அச்சு ஊடகத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதே பெரிய ஆச்சரியம் தான்!


நிர்மலாதேவி படத்தை அட்டைப்படத்திலேயே போட்டு ஆளுநரை சம்பந்தப்படுத்திச் செய்தி போட்டவர்கள் அதே மாதிரி முகப்பு அட்டையிலேயே வருந்துகிறோம் என்று போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறுதான்!  இந்த விஷயத்தை முடித்துவைக்கவும் இந்து  என் . ராம்தான் வரவேண்டியிருக்கிறது என்பதுமே கூட வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் ! ஆனால் நக்கீரன் கோபாலுக்கு நல்ல புத்தி வந்திருப்பது நம்புகிற மாதிரியா இருக்கிறது? எங்கேயோ இடிக்கிறதே என்ற சந்தேகம் வருகிறதா? இந்த விஷயத்தை முதலில் கிளறியது கிஷோர் கே சுவாமி தான்!

நேற்று மீசை(க்கீரன்) safari ஏஜெண்டின் மகளுக்கும் செயலின் செயல்படாத வாரிசுக்கும் 5 star ஹோட்டல் பார்ட்டியில் கைகலப்பு மீசைக்கீரன் யாருக்கு பிரச்னையானாலும் அந்த நாய் அந்த நாய்னு வீடியோ போடுவாரே அவர் மகள் தாக்கப்பட்டதுக்கு வீடியோ உதயமாகுமா இல்ல பேக்கரி dealing ah
😉
பிற்பகல் 2:23 · 1 ஜன., 2020Facebook 

நக்கீரன் கோபால் திடீரென மன்னிப்பு கேட்கிறாரே?
எங்கயோ இடிக்குதே,
பிரஷாந்த் கிஷோர் இராஜினாமா..
காயத்ரி கந்தாடையின் பாகிஸ்த்தானிய தொடர்பு கண்டுபிடிப்பு..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான், நக்கீரன் கோபாலுடைய மகளுக்கும் கருணாநிதி அவர்கள் குடும்ப வாரிசுக்கும் சண்டைனு ஒரு செய்தி பார்த்தேன், இன்று நக்கீரன் தடாலடி பல்டி?
நாம் அனைவரும் யூகிப்பதினைவிட ஏதோ பெரிய அளவில் திமுக மாட்டிக்கொண்டுள்ளதாகவே படுகிறது. மாரிதாஸ் சொல்வது போல, வரும் நாட்களில் பல திமுக பெரிய தலைகள் கூட வேறிடத்திற்கு மாறலாம்.
விஷயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போலயே?
Disclaimer: WhatsApp forwarded message 

பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுக்கும் பணியிலிருந்து ஒதுங்கிக்  கொண்டு விட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்கிறார் மாரிதாஸ். 

பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு வேலை செய்வதிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தவறானது. அவர் விலகிவிட்டதாகத் திட்டமிட்டு பொய்யான செய்தி பரப்பியதும் திமுக ஆதரவாளர்கள் தான். ஆக ஸ்டாலின் எடுக்கும் அனைத்து புதிய முயற்சியோடு பிரசாந்த் கிஷோரையும் இணைத்தே சிந்திக்கவும். வச்சு செய்யவும்.
பிற்பகல் 5:29 · 4 ஜன., 2020Twitter Web App
கோலம் போட்டது கூடத் தவறில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் வீட்டின் முன் காயத்ரி முதலானவர்கள் எதிர்ப்புக் கோலம் போட்டது சரிதானா? போதாக்குறைக்கு அம்மணிக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வேறு! மாரிதாசுக்கு புதிதாக காணொளி ஒன்று வெளியிட வாகாக ஒரு செய்தி கிடைத்து விட்டது!

இன்ஸ்டன்ட் போராளிகளை இங்கே உள்ள ஊடகங்கள் எப்படி   உருவாக்குகின்றன என்ற விஷயத்தை மாரிதாஸ் கொஞ்சம் சுவாரசியமாக விளக்குகிறார். 
அடங்கமறு அத்துமீறு சரக்கு மிடுக்கு என்று பேசுகிற படங்கள் வரிசைகட்டி வந்தால், அதற்கு மாற்றுப் பார்வை திரைப்படங்களும் வரும் தானே!

ட்ரெயிலர் வெளியான ஒருநாளிலேயே 11,61, 720  பார்வைகளைப் பெற்றிருக்கிறது  என்பதே ஒரு சாதனை!  திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்ட குழுவினருடன் ஒரு 26 நிமிட உரையாடல் 


Crowd Funding மூலமாக மூலதனம் திரட்டப்பட்டு மிகுந்த நம்பிக்கையோடு திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது சுவாரசியமான தகவல்.

தமிழக ஊடக நிலவரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம்.

Sunday, August 25, 2019

ஊடகங்கள்! வழக்கறிஞர்கள்! ஒன்றுபடுகிற ஒரே விஷயம்!

ஊடகங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அப்படி என்ன பெரிதாக ஒற்றுமை இருந்து விடமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்குப் பதில் நான் சொல்வதைவிட ஒரு  ஊடகக்காரரே, அதுவும் ரங்கராஜ் பாண்டே மாதிரி ஊரறிந்த ஒருத்தர் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?



இந்த 20 நிமிட வீடியோவில் பானு கோம்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்பி TK ரங்கராஜ் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ரங்கராஜ் பாண்டே பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்! நாமும் விடிய விடிய ராமாயணம் கேட்டபிறகும் சீதைக்கு ராமன் என்ன உறவு என்றமாதிரியான  கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோம் இல்லையா! என்ன கேள்வி என்பது பதிவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது, என்ன பதில் என்பதாவது புரிகிறதா? கொஞ்சம் யோசித்து வையுங்கள், சரிதானா என்பதைப் பதிவை முடிப்பதற்கு முன் பார்த்து விடலாம்!

இப்போது படித்தது, படித்ததும் பிடித்தது!  
Ilango Pichandy, Manohar P மற்றும் 4 பேருடன்இருக்கிறார்.

பாண்டிச்சேரி ரவி சீனிவாசனை ஏன் சிதம்பரம் அதிகாலை நாலு மணிக்கு கைது செய்தார்?
------------------------------------------------------------
ரவி சீனிவாசன் ஒரு முகநூல் பதிவு எழுதி இருந்தார். அதில் அவர் சொன்னது இதுதான்"- "ராபர்ட் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் பெரிய பணக்காரர்!"
அவ்வளவுதான். இதைப் படித்து விட்டு கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையிடம் புகார் செய்ய, சிதம்பபாரம் உடனே காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, அதிகாலை நாலு மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ரவி சீனிவாசன் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
எல்லாம் 48 மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது.இப்படிப்பட்ட சிதம்பரம், தன்னைக் கைது செய்ய CBI தேடுகிறது என்றவுடன், என்ன சொல்கிறார்? "உயிரா சுதந்திரமா என்றால் நான் உயிரை விட சுதந்திரத்துக்குத்தான் மதிப்பளிப்பேன்". சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான்.
சிதம்பரம் உள்ளே இருக்க வேண்டும்; உள்ளேயே இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
சிதம்பரத்தை CBI கைது செய்தவுடன், செய்தி அறிந்த பாண்டிச்சேரி ரவி சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே!  


Chidambaram, do you remember Ravi Srinivasan whom you arrested just for a tweet saying Karti was richer than Robert Vadra?

Chidambaram, do you remember Ravi Srinivasan whom you arrested just for a tweet saying Karti was richer than Robert Vadra?

PERHAPS CHIDAMBARAM OR HIS NOTORIOUS SON WOULDN’T BE RECOLLECTING RAVI SRINIVASAN OF PUDUCHERI WHO WAS ARRESTED FOR JUST TWEETING THAT KARTI CHIDAMBARAM WAS RICHER THAN ROBERT VADRA. 
“All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances”
Remembering Shakespeare’s words, when reporters continued their wait, the ‘hero’ Karti Chidambaram makes his dramatic entry justifying the deeds of his father!
Perhaps Chidambaram or his notorious son wouldn’t be recollecting Ravi Srinivasan of Puducheri who was arrested for just tweeting that Karti Chidambaram was richer than Robert Vadra. The ‘omnipotent’ hands of the former home minister and then finance minister didn’t take much time to arrest a poor man with just 40 followers in twitter for the ‘crime’ of pronouncing how rich his son was. When Chidambaram talks about human rights, democracy and liberty it is nothing but the face of Ravi Srinivasan that comes to our minds. என்று கர்மா தியரியை நினைவு படுத்துகிறது இந்த ட்வீட்டர்  செய்திகள்!   

Sonia Gandhi sends Mukul Wasnik and Harish Rawat to the Special CBI Court with a stern message for
. If you take my name in the #INX scam, just remember what happened to Rajesh Pilot, Madhavrao Scindia and YS Rajasekhara Reddy. #KhelKhatam
5:54 PM · Aug 22, 2019

NDTV தொடர்பான 2000 கோடி money laundering வழக்கில் ப.சி.அக்யூஸ்டு நம்பர் 2 அந்த வழக்கு பதிவு செய்த வருமானவரித்துறை அதிகாரி திரு.சஞ்சை ஸ்ரீ வத்ஸவா வை இவர் செய்த கொடுமைகள்.விசாரணை அதிகாரி இவர் சொன்னபடி அஃபிடவிட்ல் கையெழுத்து இட மருத்ததால் சிகரெட்டால் சுடப்பட்ட சம்பவங்கள் என பல உண்டு
Quote Tweet
·
#BIGNEWS "ப.சிதம்பரம் பயங்கரவாதி அல்ல, அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவர், அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்" - திருமாவளவன், எம்.பி ns7.tv | #Thirumavalavan | #PChidambaram | #ChidambaramArrested
சரி! இப்போது பதிவின் தலைப்பு, ஆரம்பவரியில் இருக்கிற கேள்விக்குப் பதிலென்ன?

இந்தப்பக்கத்திலோ அல்லது Consent to be nothing! பக்கத்திலோ வழக்கறிஞர்கள் பாதி உண்மை மட்டுமே சொல்கிறவர்கள் என்று சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? அதுமாதிரி  ஒரு வீடியோ பகிர்ந்து அதில் ரங்கராஜ் பாண்டே, பொய் சொன்னது இல்லை, அதாவது சௌகரியப்படாதபோது உண்மை சொன்னதும் இல்லை என்ற ரீதியில் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா? 

எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதா? பரவாயில்லை! முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே சில விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போகிறார், பார்த்தீர்கள் தானே?!

அதில் எது உண்மை, எது பாதி உண்மை என்று சொல்ல முடிகிறதா? கொஞ்சம் முயற்சி  செய்துதான் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
         

        

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)